Skip to main content

வருமானம் உத்தரவாதம் ஜூம்லாவா...

March 30, 2019
Image

சந்திரபாரதி

கட்டுரையாளர்

Image

குறைந்தபட்ச வருமானம் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது இன்று நேற்று ஏற்பட்ட தேவையல்ல. நெப்போலியன் போனபார்ட் (1791) காலத்திலிருந்தே ஆலோசிக்கப்பட்டு வரும் திட்டம் தான். இது போன்ற திட்டம் உலகில் பல நாடுகளில் பரிட்சார்த்த முறைகளில் அமல் செய்யப்பட்டு உள்ளது. உறுதியான வெற்றிகரமான செயல் திட்டம் எந்த நாட்டிலும் இனம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றித்திட்டங்களாக அன்றி  மாற்றத்திற்குரியனவாகவே இருக்கின்றன. ஆனால் தேவை மட்டும் நீடிக்கிறது.

 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு திட்டம் ஆலோசிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு அப்போதிருந்த காங்கிரஸ் அரசு குறைந்தபட்ச வருமான திட்டத்திற்கான வரைவினை தயார் செய்தும் நடைமுறைக்கு வரவில்லை. பரிட்சார்த்தமுறையில் மத்திய பிரதேசத்தில் 8 மாவட்டங்களில் குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதத் திட்டம் 2011இல் செயல்படுத்தப்பட்டது. அப்போது மத்தியில் இருந்தது காங்கிரஸ் அரசு தான். இருப்பினும் திட்டம் தொடரப்படவோ விரிவாக்கப்படவோ இல்லை. இது போன்ற ஒரு திட்டத்திற்கான தேவை மட்டும் தொடர்ந்து இருந்து வந்தது.

 

2016-17 ஆம் ஆண்டு பொருளாதார அறிக்கையில் குறைந்தபட்ச வருமானம் உத்தரவாத திட்டத்தை படிப்படியாக அறிமுகம் செய்து வறுமையின் அடித்தளத்தில் உள்ள 75% மக்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைப் பரிந்துரை செய்தது. வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்வதில், அதாவது யார் வறியவர் என்று அடையாளம் காணப்படுவதிலும் மாற்றுக்கருத்துகள் உண்டு. 2009 இல் டெண்டுல்கர் குழு ஆண்டோன்றுக்கு ரூ.7620-க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் வறியவர்கள் என்று வரையறுத்தது. காங்கிரஸ், ஒரு குடும்பம் வறுமையில் வாடாமல் வாழ குறைந்தபட்சம் மாதம் ரூ.12,000/- வருமானம் தேவை என்ற அடிப்படையில் “குறைந்தபட்ச வருமானப் பாதுகாப்பு உத்தரவாத திட்டத்தை” அறிவித்துள்ளது.

 

இந்த திட்டத்தின்படி வறியவருள் வறிய 5 கோடி குடும்பங்கள் ( கிட்டத்தட்ட 25 கோடி பேர்) பயனுறுவார்கள் என ராகுல் காந்தி அறிவித்தார். இந்த திட்டத்தின்படி, மாதம் ஒன்றுக்கு வறியவர்களாக, அதாவது மாதம் ரூ.12000/-க்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களை அடையாள்ம் கண்டு அவர்களுக்கு மாதம் ரூ. 6000/- வரை உதவித் தொகை அளிக்கும் திட்டம் தான் “குறைந்த பட்ச வருமானம் பாதுகாப்பு உத்தரவாதம்” திட்டம். இதனை அமல்படுத்த அதிகபட்சம் தேவை ரூ. 3,60,000 கோடி. இந்த திட்டம் மற்ற மானிய, உதவி திட்டங்க்ளுக்குப் பதிலாக அன்றி கூடுதல் திட்டமாக இருக்கும் எனவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

 

எதிர்பார்த்தபடியே இந்த திட்டத்திற்கு எதிரான விமர்சனங்கள் பாஜக போன்ற எதிர் தரப்பினால் வைக்கப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த திட்டம் நடைமுறை சாத்தியமில்லாதது என்று கருத்து வலியுறுத்திக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி நிலமுள்ள விவசாயிகளுக்கு  அறிவித்துள்ள ஆண்டு ஒன்றிற்கு ரூ.6000/- உதவித் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. மோடியின் திட்டம், நடைமுறை சாத்தியமானது நிதிச் சுமையைக் கூட்டாது. ஆனால் ராகுல் காந்தியின் திட்டம் ஏற்கனவே பற்றாக்குறையில் தவிக்கும் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கும் என வாதிடப்படுகிறது. மேலும் பயனாளிகளை அடையாளம் காண்பதிலும் நேரடியாக பணப் பலனை அளிப்பதிலும் சிக்கல்கள் இருக்கும் எனவும் வாதிடப்படுகிறது.

 

காங்கிரஸ் தரப்போ, இது நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டமே என்று வாதம் வைக்கிறது. இந்திய உற்பத்தி வருமானம், ரூ.200 லட்சம் கோடியாக இருக்கிறது. குறைந்தபட்ச வருமானம் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கான நிதி நாட்டின் மொத்த உற்பத்தி வருமானத்தில் 2 சதவிகிதத்தை தாண்டாது என உறுதியளிக்கிறது காங்கிரஸ். மேலும் இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பயனாளிகள் 5 கோடி குடும்பங்களும் இணைக்கப்படுமென்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 7% தொடர்ந்தாலே எளிதில் நிறைவேற்றக் கூடியது என்கிறது காங்கிரஸ். மேலும் 2011 சென்சஸ் அடிப்படையிலும் பல்வேறு புள்ளிவிவரக் கணிப்புகளின் படியும் பயனாளிகளை இனம் காண்பது சிரமமான காரியம் இல்லை என்கிறது காங்கிரஸ். மேலும் ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது, ஆதார் அடையாளம் என பல்வேறு நவீன முறைகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் பண பலனை நேரடியாக பயனாளிகளுக்கு கொண்டு சேர்பதில் சவால்கள் மிகக் குறைவாகவே உள்ளது. ஏற்கனவே பண மானியங்கள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்படுவது நல்ல முறையில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திட்டத்தைப் போலவே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டமும் செயல்படுத்த இயலாதது என பாஜக விமர்சித்ததைச் சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 30,000 கோடி ஒதுக்கீட்டில் துவங்கப்பட்ட திட்டம் ஆண்டொன்றிற்கு ரூ.75,000 கோடி வரை செலவிடப்படும் மக்கள் நலத் திட்டமாக கடந்த 15 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது காங்கிரஸ். மேலும் தேர்தலுக்காக இந்த அறிவிப்பு இல்லையென்றும் வறுமைக்கோட்டுக்கு கீழெ உள்ளவர்களை கைதூக்கிவிட காங்கிரஸின் “வறுமை ஒழிப்போம்” என்பதன் நீட்சி என்கிறது.

130 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியாவில் 1 சதவிகிதத்தினர் நாட்டின் சொத்துகளில் 70% வைத்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த இடைவெளி மாற வேண்டும். மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்)  “ வறுமையை ஒழிப்பதற்கான தீர்வு குறைந்த பட்ச வருமான உத்தரவாதம் அளிப்பது தான்” என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படி உலக நாடுகள் பலவற்றிலும் பரிசீலிக்கப்படுகின்ற, பொருளாதார வல்லுநர்கள் ஆதரிக்கின்ற “குறைந்தபட்ச வருமான பாதுகாப்பு உத்தரவாதம்” இந்தியாவில் வறுமையை ஒழிக்க உதவுமென்றால் வரவேற்கப்பட வேண்டியதே. இது வெற்று கோஷமாக மட்டுமின்றி நடைமுறைப்படுத்தத் தேவையான திட்டங்களுடன் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே நமது அவா.

 

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்த அளிக்கப்பட்ட ஜூம்லா வாக்குறுதி போலன்றி, வறுமை ஒழிப்போம் எனக் கூறி ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டம் ஒன்னொரு ஜூம்லாவாக இல்லாதவரை வரவேற்க வேண்டிய திட்டமே...

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

10 minutes ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

36 minutes ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

1 hour ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

1 hour ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

9 hours ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

10 hours ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

14 hours ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

14 hours ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

15 hours ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

19 hours ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

19 hours ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

21 hours ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

21 hours ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

1 day ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

1 day ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

1 day ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 day ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

1 day ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

1 day ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

1 day ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

1 day ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

1 day ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 day ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

1 day ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

2 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

2 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

2 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

2 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

2 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

2 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

2 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

2 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

2 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

2 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

2 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

3 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

3 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

3 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

3 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

3 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

3 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

3 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

3 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

3 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

3 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

4 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

4 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

4 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

4 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

4 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

4 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

4 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

4 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

4 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

4 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

4 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

4 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

4 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

5 days ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

5 days ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

5 days ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

5 days ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

5 days ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

5 days ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

5 days ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

5 days ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

6 days ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

6 days ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

6 days ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

6 days ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

6 days ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

1 week ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

1 week ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

1 week ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

1 week ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

1 week ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

1 week ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

1 week ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

1 week ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

1 week ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

1 week ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

1 week ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

1 week ago

இந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

1 week ago

வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்

1 week ago

4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்!

1 week ago

வெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

1 week ago

தென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை!

1 week ago

மதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து!

1 week ago

திருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

1 week ago

கடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்!

1 week ago

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.

1 week ago

அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு!

1 week ago

திருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை