Skip to main content

வில்லன்களால் இமயமாய் உயர்ந்த சூப்பர்ஸ்டார்!

January 15, 2019
Image

பிரவின் மாரியப்பன்

கட்டுரையாளர்

Image

'சக்ஸஸ்' என்று சொல்லி 'பராசக்தி'யில் அறிமுகமானார் சூரக்கோட்டை கணேசன் என்னும் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். 'பராசக்தி' தொடங்கி 'திரிசூலம்' வரை அனைத்துமே சிவாஜிக்கு சக்ஸஸ் ரகம் தான். 'சிவாஜி' போல் நடித்து காண்பித்து சான்ஸ் வாங்கிவிட வேண்டும் என முனைப்பு காட்டிய ‘சிவாஜி ராவ் கெய்க்வாட்’ என்னும் அந்த பிலிம் இன்ஸ்டிடியூட் இளைஞனை பார்த்து, 'மத்தவங்களை போல இமிடேட் செய்யாதே. உனக்கென ஒரு பாணியை வளர்த்துக்கொள்' என்றார் கே.பாலச்சந்தர். இரண்டொரு நாளில் மீண்டும் ஆடிஷனுக்கு வந்து, ஸ்டைலாக சிகரெட்டை வாயில் தூக்கிப்போட்டு இயக்குனர் இமயத்தை இம்ப்ரெஸ் செய்தார் அந்த இளைஞர். அந்த இளைஞனை 1975-ம் ஆண்டு தான் இயக்கி வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் பாண்டியனாக அறிமுகம் செய்திருந்தார் கே.பி. பிரிந்திருந்த தன் மனைவி பைரவியை காண வாசல் கதவை திறந்து வருவார் பாண்டியன். சினிமாவிற்கு புது அறிமுகம் என்பதால் அப்படி ஒரு காட்சியை குறியீடாக வைத்திருந்தார் 'இயக்குனர் இமயம்' பாலச்சந்தர். இப்படித்தான் நமக்கெல்லாம் அறிமுகமானார் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்.

காவியக் கவிஞர் வாலியை சந்தித்தபோது, “நீ எனக்காக எழுதிய பாடல்கள் எல்லாம் நிஜத்திலும் நடந்தது. ஒன்றை தவிர. 'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்' என்ற பாடலை தவிர” என்றாராம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அந்த வகையில் வாலி ஒரு தீர்க்கதரிசி. ஆம், அதே வாலி தான் சூப்பர் ஸ்டாருக்காக 'அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டி... அவனுக்கெல்லாம் உச்சம் உச்சம் உச்சம் டி' என்று பாடல் எழுதினார். அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் உச்சம் தான். 'சந்திரமுகி' பட வெற்றி விழாவில் அவரே சொன்னது போல 'விழுந்தால் எழ முடியாத யானையல்ல, மீண்டு எழுந்து ஓடும் வெற்றிக்குதிரை' தான்.  

சென்ற வாரம் வெளியான 'பேட்ட' படம், துடிப்பான ரஜினியை நம் கண்முன்னே நிறுத்தியது. அடுத்து வரும் ஆண்டுகள் அவருக்கான அரசியல் என்ட்ரி என்பதால் இந்த படத்திலும் கதவை திறந்தே இன்டெர்வியூவுக்கு வருவார். 'போருக்கு பழகனும் கொழந்த' தன் அரசியல் போருக்கு அவகாசம் இருக்கு என்று ஓர் இடத்திலும், 'இருபது வருசத்துக்கு மேல பொறுத்தாச்சு, இனிமே ஒரு நிமிஷம் கூட பொறுமையாக இருக்க முடியாது’னு இன்னொரு இடத்திலும் பஞ்ச் வைக்கிறார். 

நிற்க. இந்தக் கட்டுரை 'பேட்ட' படத்தின் விமர்சனம் அல்ல. 'சூப்பர் ஸ்டார்' என்னும் 'larger than life' பிம்பத்தை கட்டமைக்க காரணமாக இருந்தவற்றை சற்று பின்னோக்கி பார்க்க. அந்த பிம்பத்தை, நாற்பத்தி மூன்று ஆண்டுகால 'ரஜினி'யிசத்தை கட்டமைத்தது - கதை, திரைக்கதை, பஞ்ச் வசனம், வில்லன்கள் மற்றும் அதற்காக உழைத்த பல நூறுபேரும் அதில் அடக்கம்.

'ஆறிலிருந்து அறுபது வரை', 'முள்ளும் மலரும்', 'நான் மகான் அல்ல', 'அண்ணாமலை', 'முத்து' என வலுவான கதை, திரைக்கதை அம்சங்கள் கொண்ட படங்களும், பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், போன்ற இயக்குனர்கள் என சூப்பர் ஸ்டார் பிம்பத்தை கட்டமைத்த கிரெடிட் பலருக்கு உண்டு. அதுமட்டுமல்லாது 'கமல் 50' நிகழ்வில் ரஜினியே சொன்னது - 'கமல் மாதிரி நடிகர்கள் இருக்கிற துறைல இவன் எப்படி மேல வந்தான்னு எல்லாருக்கும் கேள்வி வரும். கண்ணா... கமல் எடுத்த ரூட்டை நான் எடுக்கலை. என் ரூட்டை மாத்திக்கிட்டேன்' என்று தன் ரூட்டை மாற்றி  'ஸ்டைல் சாம்ராட்' என்னும் கூடுதல் அடையாளத்தை எடுத்துக்கொண்டதும் முக்கியமான காரணம். 

ரஜினியின் எல்லா படங்களிலும் கதை, திரைக்கதை, பஞ்ச் வசனம் என எல்லாவற்றுக்கும் முகம் தெரிந்த, தெரியாத பலர் மெருகேற்றி இருந்தாலும் வில்லன்களுக்கு எப்போதும் ஓர் தனி இடம் உண்டு.  

'என்ன அலெக்ஸு, என்னையா யாருன்னு கேட்ட. இந்த ஏகாம்பரம் பேர கேட்டா கருவுல இருக்குற கொழந்த கூட வாய மூடும்' என்று கொக்கரிக்கும் ஏகாம்பரத்திடம் 'இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர கேட்டா, அந்த கொழந்த அவங்க அம்மா வாயையும் சேர்த்து மூடும்' என்று டஃப் கொடுப்பார் ரஜினி. 

தன் சித்தப்பா மணிவண்ணன் வீட்டிலிருந்து மூட்டை முடிச்சுகளை வெளியே வீசி எறியும் மன்சூர் அலிகான், சிறுவன் ஒருவன் கொண்டு வரும் துண்டு சீட்டை கண்டு அஞ்சி நடுங்கும் வேளையில், 'சித்தப்பா ஒன்னு சொல்றேன், அதிகமா ஆசைப்பட்ட ஆம்பிளையும், அதிகமா கோவப்பட்ட பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரம் இல்ல' என்று தத்துவம் உதிர்த்து கடைசியில் நீலாம்பரியை வெற்றிக்கொள்ளும் ஆறுபடையப்பன்.

தன் குடும்பத்தை கொன்றவர்களை களையெடுக்கும் 'ராபின் ஹூட்'. தன் தந்தையின் 3,000 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க துடிக்கும் கும்பலிடம் இருந்து அவை நல்ல காரியத்திற்காக பயன்பட வேண்டும் என போராடும் 'அருணாச்சலம்'. 

'ஆதிசேஷன்னா பொட்டு வச்சிக்கிட்டு பொங்கல் சாப்பிடுறவன் நெனைச்சியா. ஆதி-டா. காசிமேடு ஆதி. தனியா வந்து மாட்டிக்கிட்ட. இவனுங்க உன்னை பீஸ் பீஸ் ஆக்காம விடமாட்டங்க' என்று சீறும் ஆதிசேஷனிடம், 'கண்ணா பன்னி-ங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும்' என்று மாஸ் காட்டும் 'சிவாஜி'. 

வல்லவராயன் முன்பு வான் போல உயர்ந்து நிற்கும் 'எஜமான்' வானவராயன். தொழிலதிபர் சாந்திதேவி முன்பு நம்பர் ஒன்ன விட டூ பெரிசு என்று சொல்லும் 'மன்னன்' கிருஷ்ணன். ஜிடி-யை வெற்றிக்கொள்ளும் 'கொடி பறக்குது' ஈரோடு சிவகிரி.

வேட்டையனை கொல்ல துடிக்கும் 'சந்திரமுகி'யிடம் இருந்து தன் நண்பன் செந்திலையும், அவர் மனைவி கங்காவை காப்பற்ற தன்னையே பலிகொடுக்க முன்வரும் சரவணன். 

எல்லாவற்றுக்கும் உச்சமாக 'மார்க் ஆண்டனி'-யை வீழ்த்தும் 'மாணிக் பாட்ஷா'.

இப்படி தரமான சிறப்பான வில்லன்கள் தான் தங்களுடைய 'on screen presence' மூலம் சூப்பர் ஸ்டார் பிம்பத்தை எப்போதும் உச்சாணிக்கொம்பில் உயிர்ப்போடு வைக்க காரணமானவர்கள். 

எம்ஜியாரின் 'ஆயிரத்தில் ஒருவன்', சிவாஜியின் 'திருவிளையாடல்' படங்கள் வரிசையில் இருபது ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 'பாட்ஷா' வெளியான போதும் வெற்றிகரமாக ஓட காரணமும் அதுவே. 2007-ம் ஆண்டு வெளியான 'சிவாஜி'க்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு அப்படி ஒரு வில்லன்கள் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். 

வசீகரனை வெறுப்பேற்றப் போய் இளநீர் சீவும் கலாபவன் மணியிடம் மாட்டிக்கொள்வார் சனா.   அவரைக் காப்பற்ற சண்டையிடுவார் என்று எதிர்பார்க்கும்வேளையில், மண்ணை தூவி மொக்கை தனமாக தப்பிப்பார் வசீகரன். 

லிங்கா 'நாகபூஷனம்', கபாலி 'டாங் லீ', காலா 'ஹரி தாதா', 2.0 'பக்ஷிராஜன்' என சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய வில்லன்கள் யாரும் அவரின் புகழ் வெளிச்சத்தை கூட்டவில்லை. 

'மகதீரா', 'பாகுபலி' வரிசையில் சரித்திர படமாக கோச்சடையான் வந்தாலும் 'பொம்மை' சூப்பர் ஸ்டாரை ரசிக்க மனமில்லை. 

சிவாஜிக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இளமையான துடிப்பான 'பேட்ட' வேலனை 'சிங்காரம்' என்னும் 'சிங்கார் சிங்'கிடம் மோத விட்டிருக்கிறார்கள். அவரோ டயாலிசிஸ் யூனிட்டை விட்டு இறங்காமல் தன் நாற்காலியில் ஒடுங்கி கிடக்கிறார். 

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்து மூன்று தீபாவளியை கொண்டாடியது 'ஹரிதாஸ்'. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை மீண்ட பாகவதர் நடித்த படங்கள் எதுவும் சோபிக்கவில்லை. 

புராண / காவிய படங்களில் நடித்து வந்த  புரட்சித்தலைவர், 'நாடோடி மன்னன்'  படத்திற்கு பிறகு தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாகி இரண்டாம் சூப்பர் ஸ்டாரானார். பின்னாளில் திமுக-காரராகி புராண / காவிய படங்களில் நடிப்பதை விடுத்து சமூக படங்களில் மட்டுமே நடித்தார். இருப்பினும் தன் முழு அரசியல் நுழைவுக்கு முன்னதாக 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கி நடித்து தோல்வி கண்டார் மக்கள் திலகம். 

1999-ம் ஆண்டு வெளியான படையப்பா படத்திற்கு பிறகு மூன்றாண்டுகள் கழித்து 2002-ம் ஆண்டு பாபா பட பாடல் வெளியீட்டு விழாவில், “இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் இதுவே எனது கடைசி படமாக இருக்கும்” என்றார் ரஜினி. பாபா படம் தோல்வியை தழுவி, வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் பணம் தந்தார் ரஜினி. அந்த தோல்விகளை மறையச்செய்து, தான் ஒரு வெற்றிக்குதிரை என்பதை அடுத்தடுத்த படங்களில் நிலைநாட்டினார்.

இருப்பினும் நெகட்டிவ் ஹீரோவாக, வில்லனாக அறிமுகமான மில்லீனியல்ஸ்களின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு சிறப்பான தரமான வில்லன்கள் அமைய வேண்டும். அவர்களை வெற்றி கொள்வதன் மூலம் சூப்பர் ஸ்டாராகவே, அந்த பிம்பத்துடனேயே அவர் திரையுலகில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது தான் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் தலைவர் வெறி ஊறிப்போன ஒரு ரசிகனின் விருப்பம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்!" - ஹெச்.ராஜா

1 hour ago

போலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி

1 hour ago

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது!

2 hours ago

பழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்

4 hours ago

ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்?; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

4 hours ago

சீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்

4 hours ago

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை

4 hours ago

600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு

4 hours ago

திமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்

4 hours ago

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

12 hours ago

பொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

20 hours ago

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி

20 hours ago

பாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா? -கே.எஸ்.அழகிரி

20 hours ago

தமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்!

21 hours ago

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

21 hours ago

குடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா

1 day ago

வில்சன் கொலை - முக்கிய நபர் கைது

1 day ago

நிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

1 day ago

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!

1 day ago

பாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு

1 day ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..!

1 day ago

2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

1 day ago

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

1 day ago

12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்!

1 day ago

நிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்!

1 day ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்!

1 day ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு!

1 day ago

கொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை!

1 day ago

பயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கருப்பணன்

1 day ago

சீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு!

1 day ago

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்!

1 day ago

CAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

1 day ago

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் !

1 day ago

வில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு

2 days ago

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது!

2 days ago

எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..!

2 days ago

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

2 days ago

பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

2 days ago

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.

2 days ago

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.

2 days ago

"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு!" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2 days ago

இந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து

2 days ago

தயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்!

3 days ago

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது!

3 days ago

கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை! - திமுக பொருளாளர் துரைமுருகன்

3 days ago

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்!

3 days ago

கள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு!

3 days ago

சீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்!

4 days ago

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

4 days ago

கவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்

4 days ago

தற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

4 days ago

“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்!” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

4 days ago

நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்!

4 days ago

மும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

4 days ago

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

4 days ago

திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி

4 days ago

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

4 days ago

தேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்!

4 days ago

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு!

4 days ago

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

4 days ago

தமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்

4 days ago

மண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை

4 days ago

போகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது!

4 days ago

மதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

4 days ago

மதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்!

4 days ago

தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி

4 days ago

சென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது

4 days ago

அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து! - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.

5 days ago

மூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்!

5 days ago

வடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...!

5 days ago

சென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..!

5 days ago

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...!

5 days ago

இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...!

5 days ago

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்!

5 days ago

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து!

5 days ago

“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை!” - நெல்லை கண்ணன்

5 days ago

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு!

5 days ago

எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்! - குளச்சல் எம்.எல்.ஏ.

5 days ago

கும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு!

5 days ago

அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

5 days ago

சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

5 days ago

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை!

5 days ago

சென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

5 days ago

ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது!

6 days ago

சபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....!

6 days ago

குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா

6 days ago

போலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி

6 days ago

ஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

6 days ago

கொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு!

6 days ago

பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு!

6 days ago

ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது!

6 days ago

ஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...!

1 week ago

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...!

1 week ago

மத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி

6 days ago

பரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா!

1 week ago

27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு!

1 week ago

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 week ago

வாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து!

1 week ago

எடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு!

1 week ago

மதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை