Skip to main content

உரிமைக்காக உயரும் கருப்பு

July 11, 2020
Image

ஜெய்லானி

ஊடகவியலாளர்

Image

கொரோனா அச்சுறுத்தலை மீறி மீண்டும் தொடங்கியிருக்கும் கிரிக்கெட் போட்டி வேறொரு விஷயத்திற்காக கவனம் ஈர்த்திருக்கிறது.  அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டிற்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். தங்கள் ஜெர்சியில் BLACK LIVES MATTER என்ற வாசகங்களை தாங்கி விளையாடியதோடு கறுப்புக் கையுறைகளை அணிந்த கைகளை உயர்த்தியிருக்கிறார்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள். 

 

ஜார்ஜ் பிளாய்டின் வார்த்தைகளை என் நரம்புகளில் உணர்ந்தேன் என்றிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர்.  விளையாட்டுக்களங்கள் மனித உரிமைக்கான குரலை உரக்க எழுப்பும் போராட்டக் களங்களாவதும் கறுப்புக் கையுறைகள்   உயர்த்தப்படுவதும் புதிதல்ல. நிறவெறியினாலும் இனவெறியினாலும் மக்கள் ஒடுக்கப்படுவதும் அதற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் குரல் கொடுப்பதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. 

 

ஒரு கலைஞன் அடிமையாக இருப்பது, அல்லது அதிகாரத்திற்கு எதிராக போராடுவது ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அமெரிக்க மக்கள் கலைஞர் பால் ராப்சன். அந்த வரையறைக்குள் விளையாட்டுக்களும், விளையாட்டு வீரர்களும் அடங்குவர். ஹிட்லருக்கும், ரூஸ்வெல்டையும் ஒரே மாதிரி எதிர்கொண்ட ஜெஸ்ஸி ஓவன்ஸ் தொடங்கி, பிளாய்டின் வலியை தன் நரம்புகளில் உணர்ந்த ஹோல்டர் என மக்கள்  பக்கம் நிற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்  நீள்கிறது.

 

1936ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப்பதக்கம் வென்றார். ஆரிய இனமே உயர்ந்தது என்று இனத்தூய்மைவாதம் பேசிய ஹிட்லரால் ஒரு நீக்ரோ தங்கப்பதக்கம் வென்றதை சகித்துக் கொள்ள முடியாதததால், பதக்கமளிக்கும் போது ஜெஸ்ஸி ஓவன்ஸோடு கைகுலுக்காமல் புறக்கணித்தார். ஹிட்லரை எதிர்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவும் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால் பதக்கம் வென்று அமெரிக்கா திரும்பிய ஜெஸ்ஸி ஓவன்ஸை வரவேற்க கூட ஆள் இல்லை. அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஜெஸ்ஸி ஓவன்ஸை சந்திக்க மறுத்தார்.“என்னை ஹிட்லர் தவிர்த்தார் என்று சொல்கிறீர்கள். அமெரிக்க ஜனாதிபதியும் அதையே செய்கிறார்.” என்று தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார் ஓவன்ஸ்.  “என்னால் பேருந்தின் முன்பக்கம் இப்போதும் போக முடியவில்லை; நான் என் நிறத்தால் எடை போடப்படுகிறேன். நினைத்த இடத்தில் என்னால் வாழ முடியவில்லை. எதுவுமே மாறவில்லை” என ஒடுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் குரலாக ஒலித்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ்.

 

இதுபோன்ற இன்னும்  பலரின் குமுறல்கள் ஒருநாள் விளையாட்டுக்களத்தில் கறுப்புக் கையுறைகளாக உயர்ந்தன. 1968ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஆப்ரோ அமெரிக்கர்களான டாம் ஸ்மித் தங்கப் பதக்கத்தையும், ஜான் கார்லோஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் நார்மன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். பரிசளிப்பு விழாவின் போது டாம் ஸ்மித்தும் ,ஜான் கார்லோஸும் செய்த செயல் உலகின் கவனத்தை ஈர்த்தது.  பதக்க மேடையில் நின்ற போது ஒரு கையில் கறுப்புக் கையுறையும், இன்னொரு கையில் காலணியையும் மாட்டிக் கொண்டு நின்றனர். கறுப்பின மக்களின் துயரங்களை உலகிற்குச் சொல்வதற்காக இவ்வாறு அவர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. பதக்கம் வழங்கிய போது கையுறை மற்றும் காலணி அணிந்த கைகளை உயர்த்திக் காட்டினர்.

 

அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக் கையுறை அணிந்த கையை மட்டும் உயர்த்திக் காட்டினர். ஒருகட்டத்தில் ஆப்ரோ அமெரிக்க தொழிலாளர்களின் வறுமையை உணர்த்தும் விதமாக தனது மேல்சட்டையையும் கழற்றினார் ஜான் கார்லோஸ்.  அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டாம் ஸ்மித் ”நான் வெற்றிபெற்றால் அமெரிக்கன் என்பார்கள், தோற்றுவிட்டால் கறுப்பின அமெரிக்கன் என்பார்கள், அவர்களுக்கு எதிராக எதையாவது செய்தால் நீக்ரோ என்பார்கள். நாங்கள் கறுப்பர்கள்தான், நாங்கள் கறுப்பாய் இருப்பதில் பெருமை கொள்கிறோம். அமெரிக்காவின் கறுப்பினத்தவர்கள் நாங்கள் இன்று செய்ததை புரிந்து கொள்வார்கள்” என்றார். நிறவெறிக் கொடுமைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இருவரின் அமைதிப் போராட்டம் உலகை உலுக்கியது.

 

இப்படிப்பட்ட போராட்டங்களை அதிகார வர்க்கங்கள் எப்போதும் ரசிக்காது. டாம் ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகிய இருவரையும் அணியிலிருந்து நீக்கிய அமெரிக்க தடகள சங்கம் அவர்கள் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதித்தது. இந்தப் போராட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு நபர்  பீட்டர் நார்மன். டாம் ஸ்மித்தும், கார்லோஸும் போராடிய போது மனித உரிமை சின்னத்தை சட்டையில் அணிந்து ஆதரவு தெரிவித்த பீட்டர் நார்மன் பின்னாளில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால்  மிகக் கொடூரமாக பழி வாங்கப்பட்டார். 1972ம் ஆண்டின் ஒலிம்பிக்கிற்கு 13 முறை தகுதி பெற்ற போதும் அவரை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா அனுமதிக்கவில்லை.  2000ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் போது மிகக் கடுமையாக அவமதிக்கப்பட்டார் நார்மன். 

 

ஆஸ்திரேலியா சார்பில் பதக்கம் வென்றவர்கள் எல்லாம் அணிவகுத்த போது அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள நார்மனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் வரலாறு வேறு வகையில் திரும்பியது. சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மனித உரிமைக்கான தூதராக அணிவகுத்துச் செல்ல நார்மனுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் ஜான்சன் நார்மனைக் கட்டியணைத்து நீங்கள் தான் என்னுடைய ஹீரோ எனப் புகழாரம் சூட்டினார்.  BLACK POWER SALUTE என்று அழைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை HUMAN RIGHTS SALUTE என  தனது சுயசரிதையில் குறிப்பிட்டார் டாம் ஸ்மித். 

 

கறுப்புக்  கையுறைகள் உயர்த்தப்படுவதை போல  I CANT BREATHE என்பதும் புதிதல்ல. ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே 2014ம் ஆண்டும் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. நியூயார்க் நகரில் சட்டவிரோத சிகரெட் விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு எரிக் கேமர் என்பவரைக் கைது செய்யக் காவல்துறை முயன்றது. அப்போது எரிக் மரணமடைந்தார். காவல்துறையினர் கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறி அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. 

 

இறப்பதற்கு முன்னர் அவர் பேசிய கடைசி வார்த்தையாக I CANT BREATHE என்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனை எதிர்த்து நடந்த போராட்டங்களில் NBA தொடரின் புகழ்பெற்ற வீரரான லெப்ரான் ஜேம்ஸ் கலந்து கொண்டார். எரிக் கேமரின் கடைசி வார்த்தையான I CANT BREATHE என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீசர்ட்டுகளை அணிந்ததோடு, இந்தக் கொடுமை நடந்த நகரத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால் அந்தப் பிரச்சனைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.  


விளையாட்டரங்கில் அரசியல் குரல்கள் முன்னெடுக்கப்படுவதும், அடக்குமுறைக்கு எதிரான குரல் ஒலிக்கும் களங்களாக விளையாட்டுக் களங்கள் மாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எரிக் கேமர்களுக்கும், ஜார்ஜ் பிளாய்டுகளுக்குமான உரிமைகள் மறுக்கப்படும் வரை டாம் ஸ்மித்களும், பீட்டர் நார்மன்களும், ஜேசன் ஹோல்டர்களும் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள். மனிதத்தின் குரல்வளைகள் சுவாசிக்க  முடியாமல் நெரிக்கப்படும்  போதெல்லாம் அதனை மீட்க கறுப்புக் கையுறைகள் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்!

14 hours ago

எவ்வித தாமதமும், தடையுமின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்! - முதல்வர் பழனிசாமி

16 hours ago

தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பாரதிராஜா

17 hours ago

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்: எல்.முருகன்

18 hours ago

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!

19 hours ago

அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

19 hours ago

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்!

19 hours ago

கொரோனாவால் பாதிக்கபட்ட 17,51,555 பேர் குணமடைந்துள்ளனர்!

20 hours ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 48,040 பேர் உயிரிழப்பு!

20 hours ago

ராஜஸ்தானில் காங்., எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு!

22 hours ago

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.கவின் இலக்கு: ஓபிஎஸ்

22 hours ago

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு: கே.பி.முனுசாமி

22 hours ago

பூடானில் முதல்முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்!

1 day ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 119 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

நடிகை நிக்கிகல்ராணி கொரோனாவால் பாதிப்பு.

1 day ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா

1 day ago

எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு!

1 day ago

திமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்!

1 day ago

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது - தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல்!

1 day ago

வரி செலுத்தும் முறையில் முதல் நிலை சீர்திருத்தம் இது - பிரதமர் மோடி

1 day ago

அந்நிய நேரடி முதலீடுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன - பிரதமர் மோடி

1 day ago

இந்திய மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

1 day ago

38 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்கின்றனர்!

1 day ago

கேரளாவில் வரும் 17ம் தேதி முதல் கோவில்கள் திறப்பு!

1 day ago

முல்லை பெரியாறு அணை இன்று திறப்பு!

1 day ago

சுதந்திர தின விழாவிற்கு பொதுமக்கள் வர வேண்டாம் - தமிழக அரசு

1 day ago

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!

1 day ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து!

2 days ago

ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்!

2 days ago

இலங்கை புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

2 days ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு கனிமொழி எம்.பி வாழ்த்து!

2 days ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு!

2 days ago

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

2 days ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா!

2 days ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தேர்வு!

2 days ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

2 days ago

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

3 days ago

உலகளவில் கொரோனாவால் 2.02 கோடி பேர் பாதிப்பு; 7.38 லட்சம் பேர் உயிரிழப்பு, 1.31 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

3 days ago

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்; ராகுல் காந்தியை சந்தித்து பேசி சமரசத்தை ஏற்றார் சச்சின் பைலட்.

3 days ago

தமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

3 days ago

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.

3 days ago

பெய்ரூட் வெடிவிபத்தால் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; பிரதமர் ஹாசன் தியாப் பதவி விலகுவதாக அறிவிப்பு.

3 days ago

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா!

4 days ago

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு!

4 days ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

4 days ago

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

4 days ago

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

4 days ago

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு!

5 days ago

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று!

5 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்!

5 days ago

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச!

5 days ago

இந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

5 days ago

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு!

5 days ago

“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.

5 days ago

சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.

5 days ago

விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு!

5 days ago

கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு!

5 days ago

கர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

5 days ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்!

5 days ago

பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்!

6 days ago

கேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு!

6 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

6 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு!

6 days ago

விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்

6 days ago

கேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்!

1 week ago

உலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா

1 week ago

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்!

1 week ago

கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

1 week ago

தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று!

1 week ago

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி

1 week ago

திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி

1 week ago

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி

1 week ago

21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி

1 week ago

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

1 week ago

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

1 week ago

இலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே!

1 week ago

இ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 week ago

கொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி!

1 week ago

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

1 week ago

இன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி

1 week ago

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

1 week ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

1 week ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

1 week ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

1 week ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

1 week ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

1 week ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

1 week ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை