வெள்ளை மாளிகை இன்னிசை நிகழ்ச்சி: ஒபாமா பங்கேற்ப்பு

November 07, 2014 11 views Posted By : suryaAuthors

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா பங்கேற்றனர்.

வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பேசிய அதிபர் ஒபாமா, போரில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்திற்கு அமெரிக்கா தலை வணங்குவதாக தெரிவித்தார். இதனை போற்றும் விதமாக, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இசை நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகர்கள் Mary J. Blige மற்றும் Willie Nelson ஆகியோரின் இசையை அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் கண்டு களித்தனர். 

Categories: World
Image
Subscribe to Michelle