பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலடி!

April 05, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

காஷ்மீர் விவகாரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிநபர்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை, என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும், ஐநா இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

இதற்கு இந்திய அணி தரப்பில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் பதிலடி அளித்த நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கரும் பதில் அளித்துள்ளார். நமது நாட்டை நிர்வகிக்க திறமையான நபர்கள் உள்ளனர் என்றும், நமது நிர்வாகம் குறித்து வெளி நபர்கள் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை எனவும் சாடியுள்ளார். 

இதற்கிடையே, அப்ரிடி யார்? அவருக்கு நாம் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Categories: India
Image

மாநிலங்களவையில் பேச எண்ணியதை பேஸ்புக்கில் பேசிய சச்சின்!

December 22, 2017 0 views Posted By : krishnaAuthors
Image

மாநிலங்களவையில் நேற்று தமது கன்னிப்பேச்சு எதிர்கட்சிகளின் அமளியால் தடை பட்டதையடுத்து தாம் பேச எண்ணியதை பேஸ்புக் மூலம் கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படுத்தியுள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினரான பின் முதன் முறையாக நேற்று தனது கன்னிப் பேச்சை டெண்டுல்கர் பேச முயன்றார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் நாடாளுமன்றத்தில் அவரது கன்னிப் பேச்சு தடைபட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டு சச்சின் டெண்டுல்கர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். நேற்று மாநிலங்களவையில் தான் பேச நினைத்ததை அதில் அவர் கூறியுள்ளார்.

விளையாட்டை விரும்பும் இந்தியாவை, விளையாட்டை திறம்பட விளையாடும் இந்தியாவாக மாற்றுவதே தனது இலக்கு என்று அதில் கூறியுள்ளார்.  பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் என பல்வேறு  விஷயங்களில் நாடு கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறியுள்ள டெண்டுல்கர், ஒரு விளையாட்டு வீரராக  அத்துறையில் இந்தியா பெற வேண்டிய மேம்பாடு மற்றும் மக்களின் ஆரோக்கியம் குறித்து தாம் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

சுகாதாரமான, ஆரோக்கியமான இந்தியா உருவாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது போல் விளையாட்டு உரிமைச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தினார். 

Categories: India
Image

வைரலாகப் பரவும் சச்சின் வீடியோ!

November 04, 2017 0 views Posted By : krishnaAuthors
Image

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம், தலைகவசம் அணியுமாறு சச்சின் டெண்டுல்கர் தமது காரில் இருந்து கொண்டு அறிவுரை வழங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் வரும் 17-ம் தேதி கொச்சியில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், கேரளாவில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரம் நகரில் பேட்டா - சாகா சாலையில், டெண்டுல்கர் காரில் சென்ற போது இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். உடனே, தமது காரில் இருந்து கொண்டே ஹெல்மெட் அணியுமாறு சச்சின் அறிவுரை வழங்கினார். 

இதனை வீடியோவாக தமது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு, ‘வண்டியின் முன்னால் இருப்பவரோ, பின்னால் இருப்பவரோ இரண்டு உயிரும் முக்கியம்தான் என்றும், தயவு செய்து  தலைகவசம் அணியும் வழக்கத்துக்கு வாருங்கள்’ எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

மிக வைரலாக பரவிய இந்த வீடியோவில், பலர் சச்சின் கார் சீட் பெல்ட் அணியாமல் இருக்கிறார் என பதில் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, சீட் பெல்ட் அணிந்தது போல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் சச்சின் பதிவிட்டுள்ளார்.

Categories: India
Image

​20 வயதில் மருத்துவப் பட்டம் பெற்றார் சச்சின் மகள் சாரா!

September 08, 2018 7 views Posted By : manojbAuthors
Image

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா தனது இருபதாவது வயதில் மருத்துவப் பட்டம் பெற்றிருக்கிறார். 

’என்னையும் உன் தாயையும் பெருமைப்படுத்திவிட்டாய் சுதந்திரமாகப் போ... உலகை வென்று வா சாரா...’

தனது மகள் சாரா குறித்து ட்விட்டரில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா தனது இருபது வயதில் மருத்துவப் பட்டம் பெற்றிருக்கிறார். பொதுவாகவே பிரபலங்களின் குழந்தைகள் மீது விழும் வெளிச்சம் அதிகமாகவே இருக்கும். அதிலும் கிரிக்கெட் ஒரு மதம் என்ற அளவுக்குக் கொண்டாடப்படும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களோடு இணைந்து அவர்களின் குழந்தைகளும் அதிக புகழைப் பெறுவார்கள். 

தோனியின் மகள் ஜிவா அதற்கு ஒரு உதாரணம். அப்படி ஒரு வெளிச்சம் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சினின் குழந்தைகள் மீதும் உண்டு. சச்சினின் மகன் அர்ஜுன் இந்திய இளையோர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அதற்கு சச்சினின் புகழ் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் பிரபலங்களின் குழந்தைகள் பெற்றோர் சாராத துறையில் சாதிக்கும் பொழுது அது விமர்சனங்களை சந்திப்பதில்லை என்பதை விட பேசு பொருளாகக் கூட ஆவதில்லை. 

அப்படித்தான் சாரா டெண்டுல்கர் மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்ற செய்தியும் அதிகம் பேருக்கு தெரியாமலே இருக்கிறது. சாரா டெண்டுல்கர் சினிமாவிற்கு வருவார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. பல பத்திரிக்கை செய்திகளும் அப்படியே வெளிவந்து கொண்டிருந்தன. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. பேஷனில் மிகவும் ஆர்வம் மிக்கவர் சாரா. சமூக வலைதளங்களில் அவருக்கு தனி வரவேற்பு உண்டு.

சில நாட்களுக்கும் முன்பு மும்பையில் நடைபெற்ற தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் மகன் நிச்சயதார்த்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர். அந்த விழாவில் அதிகம் பேரால் கவனிக்கப்பட்டவராக சாரா இருந்தார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட சாராவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியது. சாரா சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாவது அது முதல் முறையல்ல.

சில ஆண்டுகளுக்கும் முன்பு ரன்பீர் கபூர் ஜோடியாக பாலிவுட் படத்தில் சாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சாரா படிப்பில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாக பதிலளித்தார் சச்சின் டெண்டுல்கர். அது இப்போது நிஜமாகி இருக்கிறது. லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றிருக்கிறார். 

இருபது வயதில் சாரா பட்டம் பெற்றிருப்பது பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பெற்றிருக்கிறது. 

Categories: Sports
Image

​இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார் சச்சின் மகன்!

June 07, 2018 0 views Posted By : manojbAuthors
Image

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இலங்கை செல்லும் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 நாட்கள் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். எனினும், அவர் இரண்டு 4 நாள் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆல்ரவுண்டரான அர்ஜுன், பவுலிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். நீண்ட நாட்களாக இந்திய ஜூனியர் அணியில் இடம் பெற அர்ஜுன் போராடி வந்த நிலையில் தற்போது அவர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அவரது தந்தையைப் போலவே இவரும் சிறப்பாக செயல்படுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Categories: Cricket
Image

சச்சின் சுயசரிதையில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்கள்

November 06, 2014 0 views Posted By : suryaAuthors
Image

கிரிக்கெட் உலகில் இதுவரை சர்ச்சைக்குள் சிக்காதவரும், சாதனைகளை சத்தமில்லாமல் செய்தவருமான, கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக கோப்பை போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன் சச்சினை பார்ப்பதற்காக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் வீட்டிற்கு வந்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ராகுல் டிராவிட்டிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அதிர்ச்சி தகவலை அவரிடம் தெரிவித்ததாகவும் மேலும் இருவரும் இந்திய அணியை ஒன்றாக கட்டுக்குள் வைத்து கொள்ளலாம் என சேப்பல் கூறியதாகவும் அந்நூலில் வெளியிட்டார். கேப்டனுக்கு உரிய மரியாதையை பயிற்சியாளர் அளிக்காததை கண்டு திகைப்படைந்த சச்சின், சேப்பலின் கருத்தை முற்றிலும் நிராகரித்து விட்டாராம். 

இது போன்ற சர்ச்சைக்குரிய நிறைய விஷயங்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சச்சின் சுயசரிதை புத்தகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த கிரேக் சேப்பல் 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: Sports
Image

டெண்டுல்கரின் சுயசரிதை

November 04, 2014 2 views Posted By : suryaAuthors
Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை 6ஆம் தேதி வெளியாகிறது. Playing It My Way என்ற பெயரில் டெண்டுல்கர் தனது ஆரம்ப நாட்கள் குறித்தும், 24 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாகவும் சுயசரிதை எழுதியுள்ளார். மேலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது மற்றும் 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது தொடர்பாகவும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சுயசரிதை வரும் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசரிதையில் டெண்டுல்கர் குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: Sports
Image
Subscribe to sachin