கலிஃபோர்னியாவில் பாண்டாவின் வித்தியாசமான பிறந்த நாள்

August 02, 2015 0 views Posted By : arunAuthors
Image

கலிஃபோர்னியா மிருகக்காட்சி சாலையில் பாண்டாவின் மூன்றாவது பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அந்த பாண்டாவுக்குப் பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்ந்தனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ மிருகக்காட்சி சாலையில் மிஸ்டர் வூ என்ற பாண்டாவின் மூன்றாம்பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பாண்டாவின் உண்மையான பெயர் ஷ்யாவோ லீ வூ என்றாலும், பாண்டாவின் ரசிகர்கள் செல்லமாக மிஸ்டர் வூ என அன்புடன் அழைக்கின்றனர். பிறந்த நாளன்று ஏராளமான பரிசுப் பொருட்களுடன் மிஸ்டர் வூ மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தது.

வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழாவில், பொருட்களை வண்ணமயமான பெட்டிக்குள் மறைத்து வைத்து அதை பாண்டா தேடிக்கண்டுபிடிப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. 

புதையலைத் தேடிக்கண்டுபிடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டிகளுக்குள் ஏராளமான பழங்கள், மூங்கில் சருகுகள், பல வண்ண ஐஸ் கட்டிகள் என பல்வேறு விதமான பரிசுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 

மிஸ்டர் வூவின் பிறந்த நாள் சிறப்புப் பரிசாக சிறிய ஊஞ்சல் ஒன்றும் பூங்காவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க பாண்டா ஆர்வலர்கள் அளித்த பொருட்களைக் கொண்டு உருவாக்கிய இந்த ஊஞ்சல் மிஸ்டர் வூவின் பிறந்த நாளன்று பார்வையாளர்களைக் கவர்ந்த பரிசு என பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Categories: World
Image

​சீனாவில் நீண்ட நாட்கள் வாழ்ந்து பாண்டா கரடி உலக சாதனை

July 14, 2015 11 views Posted By : arunAuthors
Image

சீனாவில் பாண்டா கரடி ஒன்று நீண்ட நாட்கள் வாழ்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சீனாவின் தேசிய விலங்காக கருதப்படும் பாண்டா கரடிகள், அங்குள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் Jia Jia என்று பெயரிடப்பட்ட பாண்டா கரடி 37 வருடங்கள் உயிர் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளது. 

நல்ல உடல்நலத்துடன் உள்ள இந்த பாண்டா கரடியை, ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். இதற்கு முன்னர் 37 வருடங்கள் உயிர்வாழ்ந்து சாதனை படைத்த Du Du என்ற பாண்டா கரடி கடந்த 1999 ஆம் ஆண்டு உயிரிழந்ததை அடுத்து இந்த பாண்டா கரடி சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பிடித்துள்ளது. 

Categories: World
Image

மல்யுத்தம் செய்த பாண்டாக்கள் - சீனாவில் சுவாரசியம்

November 04, 2014 0 views Posted By : suryaAuthors
Image

சீனாவில் இரண்டு பாண்டா கரடிகள் சண்டையிட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள செங்டு பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் இந்த இரண்டு பாண்டாக்களும் விளையாடின. இந்த இரண்டு பாண்டாக்களும் மல்யுத்தம் செய்து கொண்டு பல்வேறு யுத்திகளை கொண்டு ஒன்றை ஒன்று வெற்றிபெற முயன்றது. உருண்டும் ஒன்றுக்கொண்று சண்டைபோட்டுக் கொண்ட காட்சியை மற்றொரு பாண்டா பார்வையாளரை போன்று அமைதியாக பார்த்து ரசித்து கொண்டிருந்தது. பாண்டாக்களின் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Categories: World
Image
Subscribe to Panda