ஹாக்கி: 20-வது லீக் ஆட்டத்தில் தபாங் மும்பை அணி வெற்றி

February 09, 2015 0 views Posted By : suryaAuthors
Image

ஹாக்கி இந்தியா லீக் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் தபாங் மும்பை அணி வெற்றி பெற்றது. 

மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள மும்பை அணி, 6-வது இடத்தில் உள்ள கலிங்கா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் காலிறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 18-வது மற்றும் 42-வது நிமிடத்தில் தபாங் மும்பை அணி  கோல் முன்னிலை பெற்றது. அதே 42-வது நிமிடத்தில் கலிங்கா அணி முதல் கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தபாங் மும்பை அணி ஹாக்கி இந்தியா லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 7 ஆட்டங்களில் விளையாடிவுள்ள கலிங்கா அணிக்கு இது 6-வது தோல்வியாகும். 

Categories: Sports
Image
Subscribe to ஹாக்கி: 20-வது லீக் ஆட்டத்தில் தபாங் மும்பை அணி வெற்றி