ராணி பேட்டை விபத்து: 3பேர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைப்பு

February 09, 2015 1 view Posted By : suryaAuthors
Image

ராணி பேட்டையில் 10 பேரை பலிவாங்கிய கழிவு நீர் தொட்டி விபத்து தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கபட்டனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, சுத்திகரிப்பு நிலைய மேலாண் இயக்குநர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுப்ரமணி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் மூவரும் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் மூவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Categories: Tamilnadu
Image
Subscribe to 3பேர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைப்பு