ஸ்ரீரங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்

February 08, 2015 0 views Posted By : sathisAuthors
Image

ஸ்ரீரங்கத்தில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள அம்மா மண்டபம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்து அதிகமுகவினர் பாரதிய ஜனதா கட்சியினரை தாக்கியதாக கூறிப்படுகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் அம்மா மண்டபத்தில் இருந்து வீரேஸ்வரம் வரை பேரணி நடத்தினர் , பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to பாரதிய