மான் கொம்புகள் மீட்பு

November 04, 2014 4 views Posted By : editor5Authors
Image

நாகப்பட்டினம் அருகே குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புள்ளி மான் கொம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் சரணாலயத்தை ஒட்டியுள்ள குளத்தில் சாக்கு மூட்டைகளில் 23 புள்ளி மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மான் கொம்புகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to deer