தங்கச்சிமடத்தில் மீட்கப்பட்ட ஆயுதக் குவியலை ஆயுதக் குடோன்களுக்கு மாற்ற உத்தரவு!

July 18, 2018 0 views Posted By : nandhakumarAuthors
Image

ராமேஸ்வரம் அருகே மீட்கப்பட்ட ஆயுதக் குவியலை கோவில்பட்டி, சிவகங்கை, திருத்தங்கல் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள ஏதேனும் ஒரு ஆயுதக் கிடங்கிற்கு மாற்றுமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கச்சிமடம் அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவர் கடந்த மாதம் 25-ஆம் தேதி தனது வீட்டிற்கு கழிவு நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது, துப்பாக்கி தோட்டாக்கள், வெடி மருந்து உள்ளிட்ட ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது. அவை அதே பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால், அச்சத்தில் எடிசன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அப்பகுதி மக்களும் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில், அவற்றை செயலிழக்கச் செய்வது குறித்து அதிகாரிகளும், திருவாடானை நீதிபதியும் ஆய்வு செய்தனர். இதனைக் கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், ஓரிரு நாட்களில் ஆயுதக் குவியலை அகற்றவுள்ள அதிகாரிகள், அவற்றை கோவில்பட்டி, சிவகங்கை, திருத்தங்கல் ஆகிய ஊர்களில் உள்ள ஏதேனும் ஒரு ஆயுதக் கிடங்கிற்கு கொண்டு செல்லவுள்ளனர்.

Categories: Tamilnadu
Image

வனத்திற்குள் தீத்தடுப்பு தளவாடங்களை அமைக்க தமிழக அரசு முடிவு!

May 30, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

வனப்பகுதிகளில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள  50 லட்சம் ரூபாய் செலவில் உயர்நிலைப் படை அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

வன பாதுகாப்பை உறுதி செய்ய வனத்திற்குள் தீத்தடுப்பு தளவாடங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கம்பியில்லா தந்தி கருவிகள் மற்றும் இதர பாதுகாப்பு கருவிகளை  பணியாளர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக வனத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியான நிலையில் மீண்டும் இது போன்று விபத்துக்கள் நிகழ்வதை தடுக்க அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளில்லா விமானம் , புவி நிலை அமைப்புக் கருவி, தனிப்பட்ட புவியிடம் காட்டும் அமைப்பு போன்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வனப்பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வனப்பகுதிகளில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள  50 லட்சம் ரூபாய் செலவில் உயர்நிலைப் படை அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதற்கிடையே ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பவியல் பூங்கா அமைக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை கொள்கைவிளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இணைய வழி கணினித் தமிழ்ப் பாடத்திட்டம் 20 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்றும், சென்னையில் நிதி தொழில் நுட்ப சிறப்பு மையம் 11.50 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

Categories: Tamilnadu
Image

மீன்பிடி இறங்குதளம் அமைக்க உடனடி நடவடிக்கை - ராமேஸ்வரம் மினவர்கள் கோரிக்கை!

April 08, 2018 0 views Posted By : arunAuthors
Image

ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

கடந்தாண்டு அப்துல் கலாமின் நினைவிடத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். 

இதனை அடுத்து, ராமேஸ்வரம் அடுத்த குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க மத்திய அரசு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட்டிலும் இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Categories: Tamilnadu
Image

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு நூற்றுக்கணக்கான RSS, VHP, BJP தொண்டர்கள் வரவேற்பு!

March 21, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

மதுரை வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பக்தர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். 

மதுரை மாநகர் எல்லையான திருநகர் பகுதிக்கு ரதம் வந்தபோது, நூற்றுக்கணக்கான RSS, VHP, BJP உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கூடி நின்று வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்த்புரம் பகுதிகள் வழியாக, மதுரை அய்யர் பங்களா பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு ரதம் சென்றடைந்தது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரதம், இன்று காலை 9.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. 

ரத யாத்திரை உடன், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, ரத யாத்திரைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. 

Categories: Tamilnadu
Image

பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைப்பு!

March 13, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

ராமேஸ்வரம் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

தென்கிழக்கு கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், தூத்துக்குடியில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்ட இரண்டு கப்பல்கள் பாம்பன் தூக்குபாலத்தை கடக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

காற்றின் வேகம் குறைந்த பிறகே அனுமதியளிக்கப்படும் என தெரிவித்துள்ளதால், இரண்டு கப்பல்களும் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே ராமேஸ்வரம் கடல்பகுதியில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories: Tamilnadu
Image

இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

March 04, 2018 0 views Posted By : nandhakumarAuthors
Image


கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.

மேலும், கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். 

இதனால், படகு ஒன்றுக்கு 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாரம்பரிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். 

Categories: Tamilnadu
Image

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு!

March 04, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

இவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். மேலும், கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். 

இதனால், படகு ஒன்றுக்கு 30 ஆயிரத்தில் இருந்து 40,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாரம்பரிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Categories: Tamilnadu
Image

​சண்டிகரில் தமிழக மாணவர் மர்மமாக உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை!

February 27, 2018 0 views Posted By : elangoAuthors
Image

சண்டிகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மாணவரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுநிலை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் படித்துவந்தார்.

கல்லூரி விடுதி அறையில் தங்கி முதுநிலை முதலாமாண்டு மருத்துவம் படித்து வந்த மாணவர் கிருஷ்ணபிரசாத், விடுதி அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஹிந்தி மொழி பிரச்சனையால் கிருஷ்ணபிரசாத் உயிரிழந்திருக்கலாம் என அவரது சித்தப்பா குமார் தெரிவித்துள்ளார். கிருஷ்ண பிரசாத் மரணம் குறித்து மத்திய மாநில அரசுகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்களும், நண்பர்களும் வலியுறுத்தினர். 

Categories: Tamilnadu
Image

கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளை அனுமதிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு!

February 22, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

கச்சத்தீவு திருவிழாவிற்கு அடுத்தாண்டு முதல் நாட்டு படகுகளை அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியைச் சேர்ந்த பிரின்சோ ரெமெண்ட் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்தது.

மேலும், இந்தியா-இலங்கை ஒப்பந்த பிரிவு 5-ன் கீழ் எந்தவொரு போக்குவரத்து ஆவணங்கள் இல்லாமல் கச்சத்தீவிற்கு, மீனவர்கள் அவர்களது குடும்பங்களுடன் நாட்டுப் படகில் செல்ல சட்டம் உள்ளதை சுட்டிகாட்டினார்.

இதனையடுத்து கச்சத்தீவு திருவிழாவிற்கு அடுத்தாண்டு முதல், நாட்டு படகுகளை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

மேலும் தற்போது போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால், இந்தாண்டு நாட்டுபடகு மீனவர்கள் கச்சதீவு செல்லமுடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

Categories: Tamilnadu
Image

பிப்ரவரி 21ல் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கும் கமல்ஹாசன்!

February 17, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ம் தேதி, தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,


➤ வரும் 21-ம் தேதி காலை 7.45 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு நடிகர் கமல் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும்,

➤ பகல் 2.30 மணிக்கு சொந்த ஊரான பரமக்குடியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ 21-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு, மானாமதுரையில் ஸ்ரீப்ரியா தியேட்டர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பதாகவும், 

➤ மாலை 6 மணிக்கு, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில், கமல் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு கட்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அரசியல் பயணத்தின் முதல் நாளிலேயே, 4 பொதுக்கூட்டங்களில் நடிகர் கமல்ஹாசன் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்தகட்ட திட்டம் குறித்து, வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, சென்னை சிஐடி நகரில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கமல்ஹாசன், இந்த சந்திப்பு, கட்சிக்கு அப்பாற்பட்ட சந்திப்பு எனக் குறிப்பிட்டார்.

மக்கள் சேவையில் அர்ப்பணிப்புணர்வுடன் நேர்மையாக செயல்பட்ட நல்லகண்ணுவிடம், தனது அரசியல் பயணத்திற்கு உத்தரவு வாங்கியதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்

கமல்ஹாசனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நல்லகண்ணு, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக் கூறினார். கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளை கூறியதாக குறிப்பிட்ட நல்லகண்ணு, நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையில், அவர்களது கொள்கை குறித்து அறிவித்த பின்னர் கருத்து கூறுவதாக தெரிவித்தார்.

Categories: Tamilnadu
Image
Subscribe to ராமேஸ்வரம்