விறுவிறுப்பாகும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்

November 04, 2014 0 views Posted By : editor5Authors
Image

நடிகர் ரித்திக் ரோஷனின் எப் சி புனே சிட்டி அணி ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், வெற்றிக்காக கடுமையாகப் போராடி வருகிறது. புனே அணி தனது முதல் போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை எதிர்கொண்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடி ஏமாந்தன. அந்த ஆட்டம் கோல் எதுவும் இன்றி  டிராவில் முடிந்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோல் விழாத முதல் ஆட்டம் இதுதான்.

இரண்டாவது ஆட்டத்தில் புனே அணி மும்பை அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி அடுத்தடுத்து கோல் அடித்து புனே அணியை திணறடித்தது. ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 5 கோல் அடித்து நிலையில் இறுதி வரை போராடிய புனே அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 

மூன்றாவது போட்டியில் புனே அணி, கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. மும்பையுடனான போட்டியில் படுதோல்வி அடைந்த புனே அந்த தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் சொந்த மண்ணில் களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய புனே அணி 2-0 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தி ஐ.எஸ்.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

4-வது போட்டியில் டெண்டுல்கரின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை புனே அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இறுதியில் கேரளா அணி 2-1 என்ற கணக்கில் புனேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 4 போட்டிகளில் ஆடிவுள்ள புனே ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

Categories: Sports
Image
Subscribe to ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்