​இந்தியாவில் எய்ட்ஸ் மரணம் குறைந்து வருவதாக ஐ.நா. அறிவிப்பு!

July 21, 2018 4 views Posted By : shanmugapriyaAuthors
Image

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஐ.நா. அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2010 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, வியாட்நாம் நாடுகளில் எச்ஐவி பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் மரணங்கள் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த எண்ணிக்கை பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகரித்தாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2010ல் இந்தியாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,20,000 ஆக இருந்தது. இது 2017-ல் 88 ஆயிரமாக குறைந்துள்ளது. 

மேலும், எய்ட்ஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரமாக குறைந்துவிட்டது. எச்ஐவி பாதிப்புடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தில் இருந்து 21 லட்சமாக குறைந்துள்ளது என்றும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: India
Image

​மாசடைந்த காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியல்!

July 15, 2018 7 views Posted By : shanmugapriyaAuthors
Image

மாசடைந்த காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில், தலைநகர் டெல்லி 3 வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து, தாய்லாந்து, சிங்கப்பூரைச் ஆராய்ச்சியாளர்களுடன், மும்பை ஐஐடி  ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, முக்கிய நகரங்களில்  ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில், 2016 ஆம் ஆண்டில், காற்றில் உள்ள நச்சுத்துகள்களால் டெல்லியில்  14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அந்நகரங்களில் பட்டியலில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பெய்ஜிங்கில் 18 ஆயிரத்து 200 பேரும், ஷாங்காய் 17 ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

இதேபோன்று, கராச்சியில் 7 ஆயிரத்து 700 பேரும், மும்பையில் 10 ஆயிரத்து 400 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும்,  பெங்களூரு மற்றும் சென்னையில் மொத்தம் 4 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Categories: India
Image

தற்கொலைக்கு முயன்ற தனியார் பள்ளி மாணவன்..!

July 14, 2018 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பஞ்சுபேட்டை தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ரகு. பள்ளிக்கு தாமதமாக சென்ற ரகுவை, அவரது ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனைப்பார்த்த சக மாணவர்கள் ரகுவை கேலி செய்துள்ளனர்.  இதனால், மனமுடைந்த ரகு, மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  

3வது மாடியில் இருந்து கீழே குதித்ததால், உடலில் பலத்த காயங்களுடன், மோசமான நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார். தனியார் பள்ளியில் மாணவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்கதையாக இருக்கிறது. 

Categories: Tamilnadu
Image

​இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் பரிதாப பலி!

July 12, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

பூந்தமல்லி அருகே இருசக்கரவாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் இருவர் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பூந்தமல்லி, குளக்கரை தெருவை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் முரளி இருவரும் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தனர். இருவரும் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் அருகே இருவரும் அதிவேகமாக இருசக்கரவாகனத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கீழே விழுந்தனர். 

இதில் தலையில் பலத்த காயமடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Categories: Tamilnadu
Image

​தொழிலதிபர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பணிப்பெண்!

July 05, 2018 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

சென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில், பணிப்பெண் ரத்தகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெசன்ட் நகரில் வசித்துவரும் தொழிலதிபர் முருகானந்தம், காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி, கடந்த ஒரு வருடமாக பணிப்பெணணாக வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் மகாலட்சுமி உடலில் ரத்தகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொழிலதிபர் முருகானந்தத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: Tamilnadu
Image

ஊட்டி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது!

June 15, 2018 4 views Posted By : krishnaAuthors
Image

உதகையில் அரசு பேருந்து 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 

உதகையில் இருந்து குன்னூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மந்தடா என்ற பகுதிக்கு சென்ற போது மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உதகை மருத்துவமனையில் ஒருவரும், கோவை மருத்துவமனையில்  ஒருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

Categories: Tamilnadu
Image

​கொள்ளையர்கள் தாக்கியதில் நகை வியாபாரி கீழே விழுந்து உயிரிழப்பு!

June 04, 2018 3 views Posted By : shanmugapriyaAuthors
Image

சென்னையில், கொள்ளையர்கள் தாக்கியதில், நகை வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை வேப்பேரியில், கடந்த 25 ஆம் தேதி, ரெங்கராஜன் என்ற நகை வியாபாரி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரை தாக்கி, 500 கிராம் தங்கக் கட்டிகளை பறித்துச் சென்றனர். 

இந்த தாக்குதலில், தலையில் பலத்தக் காயம் அடைந்த ரெங்கராஜன், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சித்திக், ராஜ்குமார், மகேந்திரன், ஆனந்த் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image

உடல்நலக்குறைவோடு கிராமத்திற்குள் புகுந்த யானை உயிரிழந்தது!

June 04, 2018 4 views Posted By : krishnaAuthors
Image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

வனத்தில் இருந்த பெண் யானை ஒன்று, நீலகிரி மாவட்டம் பந்தலூருக்கு அருகில் உள்ள, படச்சேரி என்ற கிராமத்திற்குள் நுழைந்து, பின்னர் நிற்க முடியாமல் அங்கேயே படுத்துவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், 40 வயது மதிக்கத் தக்க அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். எனினும், அந்த யானை உணவு உட்கொள்ளவில்லை.

கடந்த சில வாரங்களாகவே அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே, யானை பலவீனமடைந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி அந்த யானை இன்று உயிரிழந்தது. 

Categories: Tamilnadu
Image

​குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

May 09, 2018 13 views Posted By : shanmugapriyaAuthors
Image

உத்தமபாளையம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள குறும்ப பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் ஹரிபாலனும், பரத்தும் அங்குள்ள குளித்தில் குளிக்க சென்றுள்ளனர். குளிக்க சென்ற இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர். 

இதனிடையே குளத்தின் கரையில் சிறுவர்களின் சட்டைகள் இருந்ததையடுத்து, அவர்கள் நீரில் மூழ்கியதை அறிந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளத்தில் இறங்கி இரண்டு சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். 

Categories: Tamilnadu
Image

​ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

May 09, 2018 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே லாரியும், ஆம்னி வேனும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோட்டை பகுதியைச் சேர்ந்த சசி-விஜியம்மா தம்பதி தங்களது பேரன்கள் இருவர் மற்றும் உறவினர்களுடன் வேனில் பழனி நோக்கி வந்தனர். திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிர் திசையில், தேனி நோக்கி இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் பெரும் போராட்டத்திற்கு பின் வேனையும், லாரியையும் பிரித்து எடுத்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் பலியாகினர். 

பெண் ஒருவரும், சிறுவன் ஒருவனும் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெரியகுளம் தென்கரையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஐயப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to Death