பிரான்சில் படகுப் போட்டி தொடங்கியது

November 03, 2014 1 view Posted By : ganeshAuthors
Image

பிரான்சு நாட்டின் ரூட் டு ரம் இடத்தில் மிகப் பெரிய கடற்பரப்பை கடக்கும் பயணப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல படகு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து பிரெஞ்ச் கரீபியன் கடற்கரை வரை கடந்து செல்லும் படகுப் போட்டி பிரான்சில் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியில் உலக அளவில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் 91 படகுகள் கலந்து கொண்டன. வெப்ப நிலை சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இந்த பயண தூரத்தை கடப்பார்கள். கடந்த 2010 ஆண்டு நடந்த போட்டியின் போது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரான்க் காமாஸ்  வெற்றி பெற்றார்.

Categories: World
Image
Subscribe to Yacht