பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடும் திட்டத்தை கைவிட வேண்டி பேரணி

February 01, 2015 0 views Posted By : suryaAuthors
Image

பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஐஎன்டியுசி சார்பில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர். பேரணியை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்தவும், தொழிற்சாலைகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories: Tamilnadu
Image

பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் அடையாள உண்ணாவிரம்

January 27, 2015 0 views Posted By : suryaAuthors

பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி முதல் பாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தி கொண்டது. இதனால் 1700 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இதனைக் கண்டித்து ஆலை தொழிலாளர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாக்ஸ்கான் நிறுவனம் முக்கிய செல்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. தற்போது இயங்கி வரும் ஆலை குறித்து எந்த தெளிவான தகவலையும் அளிக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to பாக்ஸ்கான்