ஸ்ரீபெரும்புதூர்: பன்னாட்டு கார் ஆலை தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

January 11, 2015 1 view Posted By : sathisAuthors
Image

ஸ்ரீபெரும்புதூர் பன்னாட்டு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை தலைமை நிர்வாகியை கைது செய்யாத காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து ஆலை தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  கொரிய நாட்டு பண்ணாட்டு தொழிற்சாலையில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தின் காரணமாக தொழிலாளரை நிறுவனத்தின் தென்கொரிய மேலாண் இயக்குனர் கடுமையாக தாக்கிய பிரச்சனையை தொடர்ந்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் முடிவடைந்தும் தொழிலாளரை தாக்கிய தென்கொரிய தலைமை நிர்வாகியை கைது செய்யாத காவல் துறை மற்றும் தமிழக அரசினை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to ஆலை