ரஷ்யாவில் உறைபனியால் உருவாக்கப்பட்டுள்ள மதுபான விடுதி

January 10, 2015 0 views Posted By : sathisAuthors
Image

ரஷ்யாவின் யாகுட்ஸ்க நகரில் உறைந்து போன பனியினால் உருவாக்கப்பட்டுள்ள மதுபான விடுதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குளிர் காலத்தை ஒட்டி ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் பனிபொழிந்து வருகிறது. உறைந்துள்ள பனிக்கட்டிகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள யாகுட்ஸ்க் நகரில் உள்ள சுற்றுலாதலத்தில் பனிக்கட்டிகளால் ஆன மதுபானவிடுதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு பனிக்கட்டிகளால் உருவான மேஜை, இருக்கை, மதுபானகோப்பை என விடுதி முழுதும் பனியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நகருக்கு வரும், சுற்றுலாப்பயணிகள், இங்கு வந்து செல்வதில் ஆர்வம் காட்சி வருகின்றனர்.

Categories: World
Image
Subscribe to ரஷ்யாவில் உறைபனியால் உருவாக்கப்பட்டுள்ள மதுபான விடுதி