மாடிப்படிக்கட்டுகளில் நடத்தப்பட்ட வித்தியாசமான மராத்தான் ஓட்டப்பந்தயம்

September 20, 2015 0 views Posted By : ashwiniAuthors
Image

மராத்தன் ஓட்டப்பந்தயம் சமதளப்பாதைகள் மற்றும் மலைப்பாதைகள் ஆகியவற்றில் நடத்தப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.  ஆனால் சீனாவில் உயரமான கட்டிடத்தின் மாடிப்படிக்கட்டுகளில் ஓடும் வித்தியாசமான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. 

சீனாவின் பெய்ஜிங் நகரில் கட்டிடத்தின் மாடிப்படிக்கட்டுகளில் ஓடும் வித்தியாசமான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அந்நகரத்தில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான இந்த கட்டிடன் 82 மாடிகளை கொண்டது. 

பந்தய தூரமானது கீழ்தளத்தில் தொடங்கி 82 வது மாடியில் நிறைவடைகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். 
ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. 330 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 2ஆயிரத்து 41 படிக்கட்டுகள் உள்ளன.  மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனை சூசி வால்ஷம் முதலிடம் பிடித்தார்.

Categories: World
Image

மேட்டுப்பாளையத்தில் பசுமையை வலியுறுத்தி மராத்தான் போட்டி

January 04, 2015 0 views Posted By : sathisAuthors
Image

மேட்டுப்பாளையத்தில் பசுமையை வலியுறுத்தி நடைபெற்ற மராத்தான் போட்டியில் ஏராளாமானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை குந்தா காலனியில் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை வலியுறுத்தி மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. காரமடை ரயில்வே கேட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 

Categories: Tamilnadu
Image
Subscribe to மராத்தான்