கடும் பனிப்பொழிவால் கருகிய பல்லாயிரம் ஹெக்டேர் தேயிலைச் செடிகள்!

January 04, 2018 10 views Posted By : krishnaAuthors
Image

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் பனிப்பொழிவால் 7,500 ஹெக்டர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு தினந்தோறும் 5 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவதால், தேயிலை செடிகள் மோசமாக கருகி வருகின்றன.  மேலும் பல்வேறு இடங்களில் கருகும் நிலை உள்ளதால், முன்கூட்டியே தாகை செடிகள் மற்றும் கோரை புற்கள், செடி கொடிகளை வைத்து மூடி, பனியில் இருந்து தேயிலை பயிர்களை தொழிலாளர்கள் தற்காலிகமாக பாதுகாத்து வருகின்றனர்.

இருந்தபோதிலும், குன்னூர் பகுதிகளில் மட்டும் சுமார் 7,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகியுள்ளன. இதனால் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு பணிகள் வழங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Categories: Tamilnadu
Image

கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய குன்னூர் ரயில்வே ஊழியர்கள்!

August 19, 2018 5 views Posted By : wasimAuthors
Image

 கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. உண்ண உணவின்றி, தங்க இருப்பிடம் இன்றி கேரள மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், குன்னூர் ரயில்வே துறை ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தையும் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள், உடைகள், குடிநீர் பாட்டில்கள் போன்ற நிவாரண பொருட்களை கேரளாவுக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

இதே போல கேரள மக்களுக்கு தமிழக மக்கள், ஊடகங்கள், சினிமா நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் என பலரும் நிவாரண நிதி, மற்றும் பொருட்களை திரட்டி வழங்கி வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image

​ராணுவம் சார்பாக மாதிரி கிராமங்கள் உருவாக்கும் திட்டம் தொடக்கம்

August 14, 2015 1 view Posted By : arunAuthors
Image

அனைத்து கிராமங்களும் வளர்ச்சி பெற மத்திய, மாநில அரசுகளுடன் ராணுவத்தினர் 
இணைந்து மாதிரி கிராமங்களை உருவாக்கும் திட்டம் குன்னுாரில் இன்று துவக்கப்பட்டது. 

குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் சார்பில் பேரட்டி ஊராட்சியில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

இதன் துவக்க விழாவில் உரையாற்றிய ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டினென்ட்
ஜெனரல் காட்யோக், ஒவ்வொரு கிராமங்களிலும் தூய்மை மற்றும் நலனில் அக்கறை செலுத்த 
வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். 

நாட்டில் முன்மாதிரியான கிராமங்களை உருவாக்க, மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து  
ராணுவம் முயற்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Categories: Tamilnadu
Image

குன்னூரில் வனவிலங்குகளுடன் ​செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

August 12, 2015 7 views Posted By : arunAuthors
Image

குன்னூர் வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்து என தெரிந்தும், வனவிலங்குகளுடன் "செல்பி" எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில், யானை, காட்டெருமை, கரடி, போன்ற வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கை. 

குறிப்பாக யானைகள், காட்டெருதுகள் தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடந்து செல்லும். அப்போது, வாகனங்களை நிறுத்தும் சுற்றுலா பயணிகள், அவற்றை புகைப்படம் எடுப்பதிலும், காட்டெருதுகள் அருகில் நின்று 'செல்பி’ எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர் சுற்றுலா பயணிகள். 

இதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருப்பதை சுற்றுலா பயணிகள் உணர்ந்தும், விதிகளை மீறி புகைப்படம் எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

விதிகளை மீறி இவ்வாறு புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. 

Categories: Tamilnadu
Image

தற்காப்பு கலைகளை பாதுகாக்க வலியுறுத்தி குன்னூரில் சாகச நிகழ்ச்சி

August 08, 2015 7 views Posted By : arunAuthors
Image

தற்காப்பு கலைகளை பாதுகாக்க வலியுறுத்தி குன்னூரில் ராணுவ வீரர்களும் பள்ளி மாணவர்களும் சாகச நிகழ்ச்சி நடத்தினர். 

நாட்டில் உள்ள பாரம்பரிய விளையாட்டுகளை இளைய சமுதாயத்தினரிடையே மீண்டும் பறைசாற்றும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

குன்னூரில் உள்ள ராணுவ வீரர்களுடன் அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நமது நாட்டின் வீர விளையாட்டுகளை விளையாடி பார்வையாளர்களை அசத்தினர். 

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிலம்பாட்டம், நெருப்பு நடனம், குழல் விளக்கு உடைத்தல், யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட சாகசங்களை செய்து காண்பித்தனர். 

இதுபோன்ற நிகழ்ச்சிகள் வருங்கால இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஈடுபட ஏதுவாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Categories: Tamilnadu
Image

​பலாப்பழத்தை சுவைக்க வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு

July 13, 2015 4 views Posted By : arunAuthors
Image

குன்னூர் சாலையில் பலாப்பழத்தை சுவைக்க காட்டு யானைகள் அணிவகுத்து வந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறமும் பலாப்பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அவற்றை சுவைப்பதற்காக சமவெளி பகுதிகளான காரமடை, சிறுமுகை வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் வருகின்றன. 

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமதித்திற்குள்ளானதுடன் சில மணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Categories: Tamilnadu
Image

குன்னூரில் தொடர்மழை: இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பு

December 13, 2014 0 views Posted By : suryaAuthors
Image

குன்னூரில் 4 வது நாளாக இரவு நேரங்களில் பெய்த தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் பெய்த மழையால் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் காந்திபுரம் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சியினர் சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால் பகுதிகளை சீர்படுத்தி வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to Coonoor