சுற்றுலா துறை சார்பில் மொபைல் அப்ளிகேஷன் வெளியீடு

October 27, 2014 4 views Posted By : yuvarajAuthors
Image

மத்திய சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா திட்டமிடல் தொடர்பான மொபைல் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் tripigator.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. அதில், நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல , எளிமையான முறையில் திட்டமிடும் வசதிகள் உள்ளது.
செலவினங்கள், சுற்றுலா செல்லவுள்ள காலம், உள்ளிட்டவற்றை கொண்டு எங்கு செல்லலாம், எப்படி செல்லலாம் போன்ற விவரங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இதன் மூலம் எளிமையாக திட்டமிட முடியும்.
இந்நிலையில், மத்திய சுற்றுலா துறை, ஆண்டிராய்டு அப்ளிகேஷன் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் உள்ள வரைபடம் உள்ளிட்ட வசதிகள் மூலம் சுற்றுலா செல்ல திட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் தங்கள் திட்டமிடலை மற்றவர்களுக்கு பகிர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: Business
Image
Subscribe to Tripicator