அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது

December 05, 2014 0 views Posted By : suryaAuthors

கருப்பினத்தவரின் கழுத்தை நெறித்துக்கொன்ற போலீசாரின் மீது நடவடிக்கை தேவையில்லை என்ற தீர்ப்பையடுத்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மிசௌரியில் உள்ள ஃபெர்கூசனில் கருப்பின இளைஞர் மைக்கேல் பிரவுனை அமெரிக்க காவல் அலுவலர் டாரென் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த விஷயத்தில் மைக்கேல் பிரவுனுக்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பலகட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இப்போராட்டங்கள் கடந்த சில நாள்களாக ஓரளவுக்கு ஓய்ந்திருந்ததன. இந்நிலையில் இதேபோல மற்றொரு சம்வத்தில் நியூ யார்க்கில் வசித்த எரிக் கார்நெர் என்ற கருப்பினத்தவரை காவல் அலுவலர்கள் கழுத்தை நெறித்துக் கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டிலும் காவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை என்று பெருநடுவர் ஒருவர் தீர்ப்பளித்தார். 
கார்நரின் மரணம் பற்றி எஃப் பி ஐ-யின் ஒரு பிரிவான மனித உரிமை அமைப்பு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உள்ளூர் போலீசாரின் விசாரணைகளும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது உள்ளூர் போலீசாரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன. இந்த விசாரணைகளை நீதித் துறை கவனமாகப் பரிசீலித்து அதன் படி நடவடிக்கை எடுக்கும்.இருப்பினும், பெரு நடுவரின் தீர்ப்பையடுத்து அமெரிக்காவின் பிலடெல்பியா, பெசில்வேனியா உள்ளிட்ட நகரங்களில் பலகட்டப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. ஆகஸ்டில் மைக்கேல் பிரவுன் வெள்ளையினக் காவல் அலுவலரால் சுடப்பட்ட நிலையில் சுமார் நான்கரை மணி நேரம் தரையில் கிடந்ததை நினைவுபடுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் நான்கரை மணிநேரம் இறந்து கிடந்தவர்களைப் போல படுத்திருந்தனர். 
போராட்டம் ஒரு புறம் நடைபெற்று வந்தாலும், அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் வெள்ளையினப் போலீசாரால் கையாளப்படும் விதம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. 

 

Categories: World
Image
Subscribe to மைக்கேல் பிரவுனு