​தற்கொலை மாநிலமாக மாறி வரும் தமிழகம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

July 12, 2015 0 views Posted By : arunAuthors
Image

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததால் தமிழகம் தற்கொலை மாநிலமாக மாறி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் கால்வாய்களையும், பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டையில்  8 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தென்னை வணிகவளாகம் செயல்படாமல் இருப்பதையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகள் 90 சதவிகிதம் தென்னை விவசாயத்தை நம்பி உள்ளதால் தேய்காயை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். 

ஆனால் இந்த வளாகம் செயல்படாமல் தற்போது இயந்திரங்கள் வீணாகி உள்ளதாகவும் தெரிவித்த மு,க.ஸ்டாலின், இந்த வணிக வளாகம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். 

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததால் தமிழகம் தற்கொலை மாநிலமாக மாறி வருவதாகவும், தமிழகத்தில் செயல்படாத ஆட்சியும் செயல்படாத முதல்வரும் இருப்பதாகவும் கூறினார்.

Categories: Tamilnadu
Image

​தஞ்சையில் இளம்பெண் போதையில் தள்ளாடிய அவலம்

August 02, 2015 0 views Posted By : arunAuthors

தஞ்சையில், பட்டப்பகலில் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிய பட்டதாரி பெண், ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கிராம பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணான அவர், போதை மயக்கத்தில் தள்ளாடியபடி விளார் பகுதியில் நடந்து வந்தார். அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்த அவர், போவோர், வருவோருடன் உரத்த குரலில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை காவல்துறையினர், அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண், பேராவூரணி பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தஞ்சையில் வந்திறங்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories: Tamilnadu
Image

தஞ்சை: விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

December 15, 2014 0 views Posted By : sathisAuthors

விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பிற்க்கான நிலுவை தொகை தர மறுக்கும் இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழக அரசு கடந்த 2013 - 2014ம் ஆண்டிற்க்கான கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 550 என விலை நிர்ணயித்துள்ள நிலையில், தஞ்சையில் உள்ள இரண்டு தனியார் ஆலைகள் அந்த விலையை தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலைகளின் செயல்பாட்டை கண்டித்தும், ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்தும் தஞ்சையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.  இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு இரண்டு மணி  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories: Tamilnadu
Image

எல்.ஐ.சி.யின் புதிய பாலிசி அறிமுகம்

December 10, 2014 0 views Posted By : suryaAuthors
Image

எல்.ஐ.சியில் தஞ்சை கோட்டம் இந்த ஆண்டு முதலிடத்தை பிடிக்கும் என முதுநிலை கோட்ட மேலாளர் சத்தியாவதி தெரிவித்துள்ளார். 

எல்.ஐ.சி.யின் தஞ்சை கோட்ட அலுவலகத்தில் லிமிடெட் பிரியட் என்டௌமென்ட் என்ற புதிய பாலிசியை முதுநிலை கோட்ட மேலாளர் சத்தியாவதி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர்,  எல்.ஐ.சி.தஞ்சை கோட்டம் இந்த ஆண்டு 4 லட்சம் பாலிசிகளையும், 400 கோடி ரூபாய் முதற்பிரிமிய வருவாயையும் பெற இலக்கு நிர்ணயம்செய்துள்ளது எனவும், எல்.ஐ.சியில் இந்திய அளவில் தஞ்சை கோட்டம் 5வது இடத்திலும் தமிழ்நாடு டிவிசனில் தஞ்சை கோட்டம் 2வது இடத்திலும் உள்ளது என கூறிய அவர், இந்த ஆண்டு தஞ்சை கோட்டம் முதலிடத்தை பிடிக்கும் என தெரிவித்தார். 

Categories: Business
Image

தஞ்சாவூரில் சிறப்பு ஆழ்நிலைப்பயிற்சி

December 10, 2014 0 views Posted By : suryaAuthors

சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான சிறப்பு ஆழ்நிலைப்பயிற்சி தஞ்சாவூரில் தொடங்கி உள்ளது.

தஞ்சை தமிழ்பல்லைக்கழகம், அயல்நாட்டுத் தமிழக் கல்வித்துறை மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த பயிற்சி வகுப்பு கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிங்கப்பூரை சேர்ந்த 27 தமிழராசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். 

தமிழ்பல்கலைக்கழகத்தை சேர்ந்த தமிழ்பேராசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 8 நாட்கள் நடைபெறும் இந்தபயிற்சியில் தமிழ்மொழியின் சிறப்பு பண்பாடு கற்பிக்கப்பட்டு பாரம்பரிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Categories: Tamilnadu
Image

குழந்தைகளுக்கு சிகிச்சை: பெற்றோர்கள் தெரிந்துகொள்ள கண்காணிப்பு காமெரா

December 03, 2014 0 views Posted By : suryaAuthors
Image

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பெற்றோர்கள் உறவினர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட்டுள்ளது.

சமிபகாலமாக மருத்துவமனைகளில் நடந்து வரும் குழந்தைகள் இறப்பு பற்றி அனைவரும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இதற்கு காரணம் சில நாட்களுக்கு முன் தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் சேலம் மருத்துவமனைகளில் அடுத்தடுத்து குழந்தைகள் இறந்தது இதன் பலி எண்ணிகையும் அதிகரித்தது. இதனால் பெற்றோரின் அச்சத்தை போக்க தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளிள் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பெற்றோகள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to Thanjavur