பொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை!

May 05, 2017 6 views Posted By : krishnaAuthors
Image

ஒசூர் அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வனப்பகுதிக்கு குடிநீர் தேடி யானைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஊடே துர்கம் வனப்பகுதியில் இருந்து சானமாவு வனப்பகுதியில் 21 யானைகள் முகாமிட்டுள்ளன. ஏற்கனவே அப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 21 யானைகள் முகாமிட்டதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால், சானமாவும், ஆழியாளம், போடூர், ராமாபுரம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆடு மாடுகள் மேய்ப்பவர்கள் சிலநாட்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வனப்பகுதிகளில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் யானைகள் கிருஷ்ணகிரிக்கு வருவது அதிகரித்துள்ளது.

Categories: Tamilnadu
Image

திரும்பவும் ஊருக்குள் வந்த யானை!

April 15, 2017 1 view Posted By : krishnaAuthors
Image

மேட்டுப்பாளையத்தில் ஒரு மாத பராமரிப்புக்கு பின் காட்டுக்குள் விடப்பட்ட யானை, சில நிமிடங்களிலேயே மீண்டும் சாலைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குட்டியானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. காயத்தோடு சுற்றித்திரிந்த யானை வீடுகள் மற்றும் உணவகங்களில் புகுந்து உணவுகளை தின்று வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த குட்டியானையை மீட்டு முகாமிக்கு அழைத்து சென்று சிகிச்சைகளை அளித்து வந்தனர்.

ஒரு மாத பராமரிப்புக்கு பின்பு மீண்டும் காட்டில் விட முடிவு செய்யப்பட்டது. இதன்படி யானை அத்திக்கடவு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் யானை சிறிது நேரத்திலேயே அங்குள்ள பில்லூர் செல்லும் சாலையில் வந்து நின்றது. இதனால் வாகனங்கள் சாலையின் நடுவே நின்றது. குட்டியானை மனிதர்கள் கொடுக்கும் உணவை உண்டு பழகியாதால் காட்டுக்குள் செல்ல மறுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Categories: Tamilnadu
Image

ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கொடூரமாகக் அடித்துக் கொன்ற மக்கள்!

November 25, 2016 7 views Posted By : JebaAuthors
Image

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் புகுந்த சிறுத்தையை ஊர் மக்கள் எல்லாரும் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குர்கான் மாவட்டத்தில் உள்ள மந்தவார் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று (24-11-2016) காலை சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்தது. 

இதனால் அச்சமடைந்த ஊர் பொதுமக்களில் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். 

ஊருக்குள் நுழைந்த சிறுத்தையோ ஒரு வீட்டிற்கு வெளியே கிடந்த கட்டிலுக்குள் தஞ்சம் புகுந்தது. ஆனால் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததை கேள்விப்பட்ட கிராம மக்களும் பக்கத்து கிராம மக்களும் அவர்களின் கரங்களில் கட்டைகளுடனும், ஆயுதங்களுடனும் வந்து சிறுத்தையை தாக்க ஆரம்பித்தினர். 

இதனால் அச்சமடைந்த சிறுத்தை, தன்னை தாக்க வந்தவர்களை திருப்பி தாக்கியது இதில் பொது மக்களில் 9பேர் காயமடைந்தனர். 

சிறுத்தை திருப்பி தாக்கியதில் ஆத்திரமடைந்த மக்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் அதனை விரட்டி விரட்டி அடித்துக் கொன்றனர். மேலும் ஆத்திரமடங்காத மக்களில் சிலர் சிறுத்தை இறந்த பிறகும் அதனை தொடர்ந்து தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, சிறுத்தை ஊருக்குள் வந்ததை கேள்விபட்டவுடன், அதனை பிடிக்க தகுந்த ஏற்பாடுகளுடன் வனத்துறையினரும், போலீசாரும், கால்நடை மருத்துவர்களும் கிராமத்திற்கு உடனே வந்துவிட்டதாக கூறினார். 

மேலும் சிறுத்தையை தாக்க கிட்டத்தட்ட 1500 பேருக்கும் அதிகமான மக்கள் ஆயுதங்களுடன் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் போலீசார் கூறினர். 

ஆனால் ஊர் மக்களோ வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து பல மணிநேரம் ஆகியும் அவர்கள் வராததால் தான் சிறுத்தையை தாக்கியதாக கூறுகின்றனர்.

விலங்கின ஆர்வலர்களோ சிறுத்தையை யாரெல்லாம் அடித்துக் கொன்றனரோ அவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர். மேலும் நகரமயமாக்கலின் விளைவாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தான் ஹரியானா மாநில காடுகளில் உள்ள விலங்குகள் ஊருக்குள் வருவதாக கூறுகின்றனர்.

Categories: India
Image

​பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கி சாதனை படைத்த 76 வயது முதியவர்!

October 14, 2018 36 views Posted By : shanmugapriyaAuthors
Image

சீனாவில் 76 வயது முதியவர் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனை படைத்துள்ளார். வறுமையிலும் பணத்திற்காக மரங்களை வெட்டாமல் பராமரிப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

ஓங்கிய மலைக்காடு.... அதன் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் காடுகளின் தந்தை என சீனர்களால் அழைக்கப்படும் Wei Fafu... இவரை ஏன் காடுகளின் தந்தை என்று சீன மக்கள் அழைக்கின்றார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால், 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். 1985ல் பனி போர்த்திய அந்த குளிர்காலத்தில் Wei Fafu படித்த நாளிதழ் ஒன்றில் காடுகளை பாதுகாக்க, மரங்களை வளர்ப்போருக்கு அரசு சன்மானம் வழங்கும் என விளம்பரம் இருந்தது.  மரங்களின் காதலனான Wei Fafu-க்கு அது ஒரு இனிப்பு செய்தியாக மாறியது. தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு முதல் செடியை Zunyi மலைப்பகுதியில் நடுகிறார். அந்த நிகழ்வுதான் சீனாவின் இயற்கை அழகிற்கு மணி மகுடமாக மாறியது.  

இந்த மரங்களை தன் குழந்தையைப் போல் வளர்த்த Wei Fafu  காலையில் எழுந்ததில் இருந்து தினமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ராஜாளியைப் போல் அந்த மலைக் காடுகளில் வலசை வருவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு...பல நூறு ஹெக்டர் பரப்பளவிலான பசுமைக்கு வித்திட்டுள்ளது. இந்த காடுகளில் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்து வளப்படுத்திய இந்த முதியவரைக் கண்டால், தினமும் மரங்கள்  தன் தலையில் இலையை உதிர்த்து ஆசிர்வதிப்பதாக மெய்சிலிர்க்கக்  கூறுகிறார் Wei Fafu .  

கடந்த 2009ம் ஆண்டு Wei Fafu மனைவிக்கு புற்று நோய் ஏற்பட்டு படுத்த படுக்கையாக நோயின் பிடியில் சிக்கினார். மரங்களை வெட்டி மனைவிக்கு சிசிக்சை அளிக்க சில நண்பர்கள் அறிவுரைக் கூறுகின்றனர். பணத்திற்காக மரங்களை வெட்டுவதில்லை என்று உறுதி பூண்ட அந்த முதியவர் தன் சொந்த செலவிலேயே மனைவிக்கு சிகிச்சை அளித்தார். மனைவி தன்னை விட்டு பிரிந்தாலும் இந்த மரங்கள் இயற்கையையும் சக மனிதனையும் வாழ வைக்கும் என்பது அவரின் எளியக் கோட்பாடு. இவரது பணியையும், நேர்மையும் பாராட்டிய சீன அரசு, 2015ம் ஆண்டு சிறந்த தொழிலாளருக்கான விருதை வழங்கி கௌரவித்தது. பூமியின் பசுமையை சிலர் கொள்ளை அடிக்கும்  போது இந்த முதியவரோ பூமியின் ஆயுளைக் கூட்டி அழகுபடுத்தி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார். 

Categories: World
Image

​பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டில் விடும் டேவிட்மாறன்!

September 21, 2018 21 views Posted By : manojbAuthors
Image

ஓசூர் பகுதியில் மக்கள் வசிப்பிடத்தில் நுழையும் பாம்புகளை பிடித்து, மீண்டும் வனப்பகுதியில் விடும் பணியை தனியார் தொழிற்சாலை ஊழியர்  ஒருவர் மேற்கொண்டு வருகிறார். 

தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் டேவிட்மாறன் என்பவர், சின்னஎலசகிரி, மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்திய சுமார் 10 அடி கொண்ட சாரை பாம்பு மற்றும் 3 நாகபாம்புகளையும் தனது யுக்தியால் பத்திரமாக பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளை, பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, அவைகளை காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தார். 

இது குறித்து டேவிட் மாறன் கூறும்போது, இயற்கை வளங்களை அழித்து ஆக்கிரமிப்புகள் செய்ததால்
காட்டில் பாம்புகள் வாழவும், வளரவும் வழிவகை இல்லாமல் இரை தேடி மக்கள் நடமாட்டம், மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாம்புகள் படையெடுக்க வேண்டிய அவசியத்தை மக்கள் ஆகிய நாம் தான் அந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம்.

மேலும் நோய்களை பரவலாக ஏற்படுத்தகூடிய எலி இன வகைகளை அறவே ஒழித்து கட்டி மணித சுகாதாரத்தை பாதுகாப்பதும் பாம்புகள் தான் ஆகவே தவறுகளை மனிதன் செய்து விட்டு பாம்பினத்தை அடித்து கொள்வது என்ன நியாயம் தயவு செய்து யாரும் பாம்புகளை கண்டால் அடிக்காதீர்கள் இவ்வாறு டேவிட் மாறன் கூறினார்.

டேவிட் மாறன் பல பாம்புகளை பத்திரமாக மீட்டு காட்டில்  விட்டு படைகளுக்கே படையாக பாம்புகளை வாழவைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றால் அவரை பாராட்டவும் வாழ்த்தவும் வார்த்தைகளே இல்லை என்றே சொல்லலாம். 

Categories: Tamilnadu
Image
Subscribe to காடு