ஐபிஎல் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன், வின்டுதாராசிங் உரையாடல் உண்மை என நிரூபனம்?

October 24, 2014 2 views Posted By : AnonymousAuthors
Image

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கில், குருநாத் மெய்யப்பன், வின்டுதாராசிங் ஆகியோர் இடையேயான தொலைபேசி உரையாடல் உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐ.பி.எல் போட்டியின் போது, சூதாட்டம் தொடர்பாக இந்த இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை ஆராய்ந்த போது, அதில் இருக்கும் குரலோடு குருநாத் மெய்யப்பனின் குரல் ஒத்து போவதாக தகவல் கிடைத்துள்ளது.
தொலைபேசி உரையாடலின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகனும் அந்த அணியின் முன்னாள் நிர்வாகியான குருநாத் மெய்யப்பன் டாஸில் யார் வெற்றி பெறுவார்கள், ஆடுகளத் தன்மை,காலநிலை மற்றும் சூதாட்ட விபரங்கள் குறித்து நடிகர் விண்டு தாராசிங்கிடம் விவாதித்தாக கூறப்பட்டுகிறது.
தொலைபேசி உரையாடல்கள் ஒத்து போவதையடுத்து சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முத்கல் கமிட்டி, அறிக்கையை இந்த மாதம் 30-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளது. அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

Categories: Sports
Image
Subscribe to IPL SPOT FIXING