ஜிஸ்எல்வி மார்க் 3 முன்னோட்டம் நடைபெற்றது

December 15, 2014 0 views Posted By : sathisAuthors
Image

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் முன்னோட்டமாக இந்தியா ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவுகிறது. இதன்படி ஜி.ஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் ஒத்திகை நேற்று நள்ளிரவு தொடங்கி காலை முடிவடைந்தது.
அதிக எடையுள்ள செயற்கைகோளை தாங்கி செல்லும் வகையிலான ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் ஆளில்லா மாதிரி விண்கலம் பொருத்தி சோதனை செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. இதைதொடர்ந்து ஜி.ஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் ஒத்திகை நேற்று நள்ளிரவு தொடங்கி காலை முடிந்தது.

இது வெற்றிபெரும் பட்சத்தில் அதிக எடைகொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கு  வெளிநாடுகளின் உதவியை இந்தியா நாடத்தேவையில்லை.மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கும் ஜிஎஸ்எல்வி மார்க்3 முன்னோடியாக அமையும். Crew capsule என்று அழைக்கப்படும், விண்வெளி வீர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலத்தை சுமந்து கொண்டு ஜிஎஸ்எல்வி மார்க்3 ஏவப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் இரண்டு விண்வெளி வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வருகிற 18ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.சுமார் 155 கோடி ருபாய் செலவிலான ஜிஎஸ்எல்வி மார்க்3 திட்டத்தின் மூலம் செயற்கைகோளை கொண்டு செல்வது, செலுத்துவதற்கான கட்டணம் என ஒவ்வொரு முறையும் ஆகும் கோடிக்கணக்கான செலவு குறையும்.

 

Categories: India
Image

இந்திய ஆளில்லா விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது

November 30, 2014 0 views Posted By : ganeshAuthors
Image

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் மும்முரம் காட்டிவருகிறது இந்தியா. இதன் முன்னோட்டமாக, ஆளில்லா விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.

பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி வெற்றிக்குப் பிறகு அடுத்த பணியை துவங்கி விட்டது இஸ்ரோ. மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் -3 என்கிற ராக்கெட்டை, ஷ்ரஹரிகோட்டாவில் தயாராகிக்கொண்டு இருக்கிறது. இதுபற்றி சதீஷ்தவான் ஏவுதளத்தில் விஞ்ஞானிகளால் ஒரு விளக்க உரை அளிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் க்ரூ கேப்ஸ்யூல் என்றழைக்கப்படும் மனிதர்களை அழைத்துச் செல்லும் சிறிய விண்கலத்தை சோதனை செய்வதற்காக, ஆளில்லா விண்கலத்துடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3, அடுத்த மாதம் 3 வது வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் திட்டத்தின் மொத்த செலவு 155 கோடி ரூபாய். விண்ணுக்கு சென்று, மீண்டும் விண்கலம் பூமிக்கு பத்திரமாக வந்து சேருவதே இந்த சோதனையின் நோக்கம். இது வெற்றியடைந்தால், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சி வெகுதொலைவில் இல்லை என்றே கூறலாம்.

Categories: India
Image
Subscribe to G SAT Satellite PSLV GSLV MARK3 Space Launch ISRO விண்வெளி பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி இஸ்ரோ விண்கலம்