சென்னையில் கட்டடம் இடிந்து 2 பேர் பலி

November 17, 2014 0 views Posted By : ganeshAuthors
Image

சென்னை பாரிமுனையில் மலைபெருமாள் தெருவில் உள்ள வெல்லம், புளி குடோன் கட்டடம் இடிந்து விழுந்தது. தொடர் மழை காரணமாக வலுவிழந்து நின்ற இந்த கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து தரையில் விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளார்
தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 5 தீயணைப்பு வாகனங்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். காயமடைந்த நிலையில் மீட்கபட்ட ராஜா என்ற வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக பூக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறை விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் திரு வொற்றியூரை சேர்ந்த குமார் என்பதும் மற்றொருவர் சுபாஷ் என்பதும் தெரிய வந்தது. மேலும் இடிந்த கட்டடம் 80 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கட்டிட உரிமையாளரான சிவ பிரகாசத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
தொடர் மழை காரணமாக கட்டிம் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டாலும், அஜாக்கிரதையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கட்டடத்தை பராமரிக்காமல் விட்டு வைத்தால் இன்று அது 2 உயர்களை பலி கொண்டுள்ளது என்பதே அப்பகுதி மக்களின் குற்றசாட்டு.

Categories: Tamilnadu
Image
Subscribe to Chennai Building Collapse சென்னை கட்டடம் இடிபாடு