​இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா பதவி விலக போவதாக தகவல்

July 16, 2015 0 views Posted By : arunAuthors

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா பதவி விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கின் தீர்ப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா பதவி விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

அவரது உடல் நலக்குறைவால் இந்த முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக ராஜீவ் சுக்லா, அஜே ஷிர்கே மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர்களில் பி.சி.சி.ஐ தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜீவ் சுக்லாவிற்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ராஜீவ் சுக்லா நேற்று ஜக்மோகன் டால்மியாவை கொல்கத்தாவில் சந்தித்தது குறிப்பிடதக்கது

Categories: Sports
Image

டி.ஆர்.எஸ். முறை வேண்டும் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

December 22, 2014 2 views Posted By : suryaAuthors
Image

நடுவரின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் டி.ஆர்.எஸ். முறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இதில் நடுவரின் சில சர்ச்சைக்குரிய முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முதலாவது டெஸ்டில் ரஹானே, புஜாராவுக்கு தவறான முறையில் அவுட் வழங்கப்பட்டது. 2–வது டெஸ்டில் அஸ்வின், ரோகித் சர்மா மற்றும் டோனி தவறான முடிவால் பாதிக்கப்பட்டனர். எனவே நடுவரின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் டி.ஆர்.எஸ். முறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Categories: Sports
Image

கிரிக்கெட் வாரிய தேர்தல் ஒத்திவைப்பு

November 14, 2014 0 views Posted By : suryaAuthors
Image

மும்பை: ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்த முத்கல் அறிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று வௌியிட்டது. இதில், ஸ்ரீநிவாசன், குருநாதன் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்து நடக்க இருந்த கிரிக்கெட் வாரிய தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளது.

போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டோரை 6 பிரிவுகளாகப் பிரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதாவது, ஒரு குற்றம் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ள நபர்கள் ஒட்டுமொத்த சதியிலும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு குற்றங்களைச் செய்துள்ளதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டோர் முதல் பிரிவில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் மற்றும் பிறர் உள்ளனர்.
13 பேர் உள்ள 3-வது பிரிவில்தான் கிரிக்கெட் வீரர்களான ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கீட் சவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் ஜனவரி 7-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
போலீஸ் தரப்பில் 6,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதல் குற்றப்பத்திரிகையும் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Categories: Sports
Image
Subscribe to இந்திய கிரிக்கெட் வாரியம்