இந்திய பங்குசந்தைகள் இன்று உயர்வை சந்தித்தன

November 14, 2014 0 views Posted By : suryaAuthors
Image

இந்திய பங்குசந்தைகள் இன்று உயர்வை சந்தித்தன. அதே நேரம் இந்திய ரூபாயின் 
மதிப்பு சரிவை சந்தித்து இருக்கிறது

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 48 புள்ளி 37 புள்ளிகள் உயர்ந்து 27,989 ஆகவும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5 புள்ளி 55 புள்ளிகள் உயர்ந்து 8,363 புள்ளி 40-ஆகவும் இருந்தன. ஆட்டோமொபைல், எப்எம்சிஜி., ஐடி தொடர்பான பங்குகள் விலை ஏற்றம் கண்டுள்ளதால் பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து 61 புள்ளி 63 -ஆக இருந்தது. இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

Categories: Business
Image
Subscribe to பங்குசந்தைகள்