முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 75–க்கும் மேற்பட்ட புலிகள்

November 10, 2014 3 views Posted By : suryaAuthors

முதுமலை மற்றும் பந்திபூர் புலிகள் காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. 
அங்குள்ள புலிகளுக்கு பொதுமக்கள் பெயர் சூட்டி அழைக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திபூர் புலிகள் காப்பகம், இந்தியாவின் சிறந்த புலிகள் காப்பகங்களாக திகழ்ந்து வருகின்றன. புலிகளை பாதுகாக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு புலிகள் காப்பகங்களிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 75 –க்கும் மேற்பட்ட புலிகளும், பந்திபூர் புலிகள் காப்பகத்தில் 100 –க்கும் மேற்பட்ட புலிகளும் உள்ளன. 
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள் T1, T2 என்றும், பந்திபூர் காப்பகத்தில் உள்ள புலிகளை பிரின்ஸ், கவுரி, மீனாட்சி போன்ற பெயர்களை சூட்டியும் வனத்துறையினர் அழைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. குறிப்பாக தற்போது பந்திப்பூர் வனப்பகுதியில் இளவரசராக சுற்றி வரும் பிரின்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட 10 வயது  ஆண் புலி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. 

Categories: Tamilnadu
Image
Subscribe to பந்திபூர்