Skip to main content

தோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்!

October 29, 2019 65 views Posted By : krishnaAuthors
Image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வந்த, சுஜித் வில்சன் எனும் 2 வயது குழந்தை கடந்த அக்டோபர் 25ம் தேதி வெள்ளியன்று தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான். பின்னர் குழந்தையின் பெற்றோர் தேடியபோது, சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றினுள் விழுந்தது தெரியவந்தது.

முதலில் பத்து அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித், பின்னர் மண்ணில் இருந்த ஈரப்பதம் காரணமாக 30 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்து ஆழ்துளை கிணற்றில் விழுபவர்களை மீட்கும் மணிகண்டன் என்பவர் வரவழைக்கப்பட்டார். அவரது கருவியை பயன்படுத்தியும் சிறுவனை மீட்க முடியாத நிலையில்,
சுஜித்தின் இரு கைகளிலும் கயிற்றைக் கட்டி வெளியே இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கையில் கயிற்றை வெற்றிகரமாக கட்டிவிட்ட நிலையில் மறு கையில் கயிற்றை கட்ட முடியாததால், சிறுவனை மீட்கமுடியாமல் மீட்புக் குழுவினர் தவித்து வந்தனர்.

இதற்கிடையில், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் குழிதோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஜேசிபி இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கிவந்தன. இயந்திரங்கள் குழி தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக, ஈரமாக இருந்த மண் உள்வாங்கியதில் சிறுவன் சுஜித் 88 அடிக்கும் கீழே சென்றுவிட்டான். மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு தங்கினர்.

Sujith1

விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஆள்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழிதோண்டி அதன் வழியாக சிறுவனை மீட்கலாம் என்ற எண்ணத்தில், நெய்வேலி சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபடும் ரிக் இயந்திரம் அக்டோபர் 26ம் தேதி கொண்டுவரப்பட்டது.

Sujith2

ரிக் இயந்திரம் தோண்ட ஆரம்பித்ததும், சிறிது தூரத்தில் மண்ணின் இடையில் பாறைகள் இருந்ததால், ரிக் இயந்திரத்தால் அவற்றை உடைக்க முடியவில்லை. அதன் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் அக்டோபர் 27ம் தேதி நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே அக்டோபர் 26ம் தேதி மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிக்காக நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தடைந்தனர்.

Sujith3

மீட்பு பணிகளை துவங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்னும் அரை மணிநேரத்தில் குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டுவதற்கு பாறைகள் தடையாக இருந்ததால், ரிக் இயந்திரம் அகற்றப்பட்டு போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டு பின்னர் ரிக் இயந்திரம் மூலம் 98 அடிக்கு குழிதோண்டி சிறுவனை மீட்கலாம் என்று திட்டமிடப்பட்டது. அதனையடுத்து, போர்வெல் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

Sujith5

ரிக் இயந்திரத்தில் இருந்த பற்கள் உடைந்ததால், மாற்று வழியை தேடும் முயற்சியில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். அதோடு, எதிர்பார்த்ததை விட பாறைகள் கடுமையாக இருப்பதாகவும், இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை என்று ஆப்பரேட்டர் கூறுகிறார். இரண்டு இயந்திரத்தை பயன்படுத்தியும் 40 அடியைக் கூட தாண்ட முடியவில்லை என்று மேலும் தெரிவித்தார். இதனையடுத்து, மீட்பு பணிகள் குறித்து பேட்டியளித்த பேரிடர் மீட்பு ஆணையர் ராதாகிருஷ்ணன் “பல தரப்பிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் ஆலோசனை வழங்கலாம்; செலவுகளை அரசே ஏற்கும்!” என்று அறிவித்தார்.

Sujith6

சுஜித்தை மீட்கும் பணிகள் மூன்று நாட்களை கடந்துவிட்ட நிலையில், 28ம் தேதி பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித்தின் மீட்புப்பணி முடிய குறைந்த பட்சம் 12 மணியாவது ஆகும். ஆனாலும் முயற்சியை கைவிட மாட்டோம், சவாலாக இருந்தாலும் மீட்புப்பணி தொடரும் என்று நேற்று அக்டோபர் 28ம் தேதி தெரிவித்தார். மேலும், "பலூன் முறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குழந்தை சுஜித் சிக்கியுள்ளான்; நான்கரை இன்ச் போர் குழியில் பலூனை செலுத்த கூட இடமில்லை!" என்று தெரிவித்தார்.

பின்னர் 28ம் தேதி 72 மணிநேரத்தை கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றின் அருகே, 98 அடிக்கு குழிதோண்டிய பின் மற்றொரு வீரர் குழிக்குள் இறங்கி பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்க முடிவு செய்யப்பட்டது. முதலில் 55 அடிக்கு ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்டபட்ட பின்னர், பாறைகளை உடைக்கும் நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் இறங்கினர். 55 அடி குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித் குமார் மண் மற்றும் பாறைகளின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார். பின்னர் ரிக் இயந்திரம் அகற்றப்பட்டு போர் வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்க திட்டமிட்டு பாறைகள் உடைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் ஏற்கனவே 75 மணிநேரத்தை கடந்துவிட்டநிலையில், ரிக் இயந்திரம் மீண்டும் தனது பணியை தொடங்கியது.

Sujith7

மீதமிருக்கும் அடிகளுக்கு குழிதோண்ட மேலும் 12 மணிநேரம் ஆகும் எனவும், பக்கவாட்டில் குழிதோண்ட 7 மணி நேரம் ஆகும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததையடுத்து அனைவரும் நம்பிக்கை இழந்தனர். இந்நிலையில், திடீரென்று ரிக் இயந்திரங்கள் தங்கள் பணியை நிறுத்தினர். இதனால் குழம்பிய செய்தியாளர்கள், மீட்புக்குழுவினரிடம் விசாரித்த போது சிறுவன் விழுந்த ஆள்துளை கிணற்றின் வழியாகவே சிறுவனை மீட்கும் முயற்சியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தனர். 

இதன் பின்னர் 29ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், 28ம் தேதி இரவு 10 மணிமுதல் குழந்தை சுஜித் விழுந்த குழியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து குழந்தை சுஜித் உயிரிழந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது. 88 அடி ஆழத்தில் இருக்கும் சிறுவனின் உடலை முழுமையாக மீட்கும்
பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு 29ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுஜித்தின் உடல் சிதைந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறாய்விற்குப் பிறகு சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sujith8

சுஜித் மீட்கப்பட்டதற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மாவட்ட ஆட்சியர்  சிவராசு, மீட்புப்பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று காலை 8 மணிக்குள் மூடப்படும் என்று தெரிவித்தார்.

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நாள் முதல் இறுதி நாள் வரை அனைத்து தரப்பு மக்களும் சுஜித் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று மனதார வேண்டினர். எனினும், அனைவரது வேண்டுதல்களும், மீட்புக்குழுவினரின் 80 மணிநேர போராட்டமும் பலனின்றி தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் உயிரிழந்ததையடுத்து #RIPSujith, #SorrySujith மற்றும் #SujithWilson ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

58 minutes ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

1 hour ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

1 hour ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

5 hours ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

7 hours ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

8 hours ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

8 hours ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

8 hours ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

10 hours ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

10 hours ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

12 hours ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

13 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

13 hours ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

13 hours ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

13 hours ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

13 hours ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

13 hours ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

1 day ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

1 day ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

1 day ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

1 day ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

1 day ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

1 day ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

1 day ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

1 day ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

1 day ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

1 day ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

2 days ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

2 days ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

2 days ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

2 days ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

2 days ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

2 days ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

2 days ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

2 days ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

2 days ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

2 days ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

3 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

3 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

3 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

3 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

3 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

3 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

4 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

4 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

4 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

4 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

4 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

4 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

4 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

5 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

5 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

5 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

5 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

5 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

5 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

6 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

6 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

6 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

6 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

6 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

6 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

6 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

6 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

6 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

6 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

6 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

1 week ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

1 week ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

1 week ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

1 week ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை