Skip to main content

எப்போது ஒலிக்க ஆரம்பித்தது தோனியின் குரல்?

July 07, 2020 140 views Posted By : nirubanAuthors
Image

2007 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நேரம். இந்திய அணி முதல்  சுற்றியிலேயே வெளியேறியது. அதன் பின் ஐசிசி 20  ஓவர் போட்டிக்கான முதல் உலகக்கோப்பை தொடரை அறிவிக்கிறது. அணியின் மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் போன்றவர்கள் விலகி விட்டனர். அனுபவம் வாய்ந்த வீரர்களான சேவாக் யுவராஜ் ஆகியோர் கேப்டன் பதவியை மறுக்கவே , அப்போது இந்திய அணியின் கோச்சாக இருந்த லால்சந்த் ராஜ்புட் தோனியை கேப்டனாக நியமித்தார். தோனி தலைமையில் இளம் வீரர்களை கொண்டிருந்த இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

யாரிந்த தோனி? தோனியின் வரவு தற்செயலாக நடந்ததல்ல. 2000 முதல் 2002 ம் ஆண்டு வரை பீகார் அணிக்கான U-19 மற்றும் ரஞ்சி போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஜார்கன்ட் அணிக்காக ரஞ்சி மற்றும் திலீப் ட்ராபி போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரன்களை குவித்தார்.  இந்திய A அணிக்கு தேர்வாகினார். பின்னர் ஜிம்பாவே , பாகிஸ்தான் ,கென்யா தொடர்களில் ரன்களை குவித்தது மட்டுமல்லாமல்  விக்கெட் கீப்பிங் திறமையையும் வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். ஸ்ரீலங்கா பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 148 மற்றும் 183 என அதிரடி சதங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தன் வரவை அறிவித்தார். 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற பின் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்க படுகிறார்.

அப்போது ஒலிக்க தொடங்கியது  "தோனி !! தோனி !!"  என்ற ரசிகர்களின் கரகோஷம். தோனியின் எதிர்கால சாதனைகளை அன்று பலரும் யூகித்திருக்க வாய்ப்பில்லை. 
2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடர் தோனியின் முக்கியமான மயில்கல்லாக அமைந்தது. ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. அதன் பின் 2009ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் முதல் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. இருப்பினும் தோனி தனது கேப்டன்சிப் மற்றும் ஆட்ட யுக்தியை மாற்றவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடி வந்த தோனி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். அந்த ஆண்டு சிறந்த வீரருக்கான ஐசிசி விருதையும் பெற்றார். 

2008ம் ஆண்டில் ஐபில் தொடர் அறிவிக்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகினார் தோனி. முதல் இரண்டு வருடங்கள் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணி 2010 , 2011 என தொடர்ந்து இரு முறை கோப்பையை வென்றது. அதே ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. அது வரை தோனியாக இருந்தவர் “தல” தோனியாக மாறினார்.  சிஎஸ்கே அணிக்கு ஆடியதன் மூலம் சென்னை மற்றும் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தார். இந்திய அணியில் தற்போது ஆடி வரும் அஸ்வின், ஜடேஜா, ரெய்னா போன்ற வீரர்கள் உருவானதும் வளர்ந்ததும்  தோனியின் தலைமையில் தான்.

2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் சிம்ம சொப்பனமாக அமைந்தது. தனது ஆதர்ஷ நாயகனான சச்சினுக்கு அது தான் கடைசி உலகக்கோப்பை தொடர். 2003,2007  என தொடர்ந்து கோப்பையை வென்று வந்த ஆஸ்திரேலியா அணியை காலிறுதியில் வெளியேற்றியது இந்திய அணி. இறுதி போட்டியில் 91* ரன்களை அடித்து ஸ்ரீலங்காவை வீழ்த்த வழி வகுத்தார் தோனி. இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது. 

120 கோடி மக்களின் ஏக்கத்தையும் கனவையும் நிறைவேற்றினார் தோனி. வரலாற்றுச்சாதனை படைத்தது இந்தியா. பல வருடங்கள் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த சச்சினுக்கு அது வரை கிடைக்காத மகுடம் உலகக்கோப்பை மட்டுமே. அந்த மகுடத்தை சூட்டியவர் தோனி தான். அது வரை சச்சினை தவிர வேறு எந்த வீரரையும் இந்திய ரசிகர்கள் இந்த அளவு கொண்டாடியதில்லை.

"தோனி !! தோனி !!"  என்ற ரசிக கூட்டத்தின் கரகோஷம் மீண்டும் ஒலித்தது, இம்முறை பலமாக. 

சில மாதங்களுக்குப் பின் இங்கிலாந்து தொடருக்கான அணி தேர்வு நடை பெறுகிறது. அணி தனக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த தோனி சில மூத்த வீரர்களை தவிர்த்து அணியை தேர்வு செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தோனி அமைதி காத்திருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து 2013 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரை  வென்றதன் மூலம் அதற்கான பலனை இந்தியா அனுபவித்தது. 20 ஓவர், 50 ஓவர் , சாம்பியன்ஸ் ட்ரோபி என மூன்று கோப்பைகளை வென்ற ஓரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார் தோனி. கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்றார். 

"தோனி !! தோனி !!"  என்ற கரகோஷம் மீண்டும் ஒலித்தது, இம்முறை சர்வதேச அரங்கில்.. இன்னும் பலமாக.. 

அனைத்தும் நன்றாக அமைந்து விட்டால் கடவுள் எதற்கு என்பது போல , தோனியின் டெஸ்ட் கேரியர் ஒரு திருஷ்டி புள்ளியாக அமைந்தது. தோனி தலைமையில் தான் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1  இடத்தை பிடித்தது. இருப்பினும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது. இந்திய மண்ணிலும் தொடரை இழந்தது.  தோனி முழு பொறுப்பையும் ஏற்றார். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடரின் போது தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபில் தொடரில் மூன்றாவது முறையாக சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. 

தோனியின் ஆட்டம் படையப்பா படதைதில் வரும் அப்பாஸின் வசனத்தை தான் நினைவூட்டியது- "உங்களுக்கு இன்னும் வயசாகல சார்" 
( விக்கெட் கீப்பிங்கில் அதிக ஸ்டம்பிங்ஸ் , அதிக கேட்சேஸ் , பேட்டிங்கில் நம்பர் 5,6,7 இடங்களில் அதிக ரன்கள், ஆவரேஜ் மற்றும் கேப்டனாக அதிக வெற்றி , அதிக ரன்கள் என சாதனைகளின்  பட்டியல் நீண்டு செல்லும் என்பதால் இங்கு எதையும் குறிப்பிடவில்லை )

கபில் தேவின் 1983 உலகக்கோப்பை  வெற்றியின் கதைகளை மட்டுமே கேட்டு வளர்ந்த எங்களுக்கு கோப்பையை வென்று தந்த தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 39 ஆவது வயதில் இன்றும் இளமையாக இருக்கும் தோனி தொடர்ந்து பல சாதனைகளையும் கோப்பைகளையும் வெல்ல வாழ்த்துக்கள்.

 

-பிரபுசங்கர் தங்கராஜ்

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

20 minutes ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

50 minutes ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

2 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

2 hours ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

2 hours ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

3 hours ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

3 hours ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

4 hours ago

மும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை!

4 hours ago

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்!

4 hours ago

தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்!

4 hours ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு!

4 hours ago

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

18 hours ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

22 hours ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

22 hours ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

22 hours ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

22 hours ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

22 hours ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

22 hours ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

22 hours ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

22 hours ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

22 hours ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

22 hours ago

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

23 hours ago

திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு!

23 hours ago

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது!

23 hours ago

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

1 day ago

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

1 day ago

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்

1 day ago

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

1 day ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.

1 day ago

இந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

தேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

அமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்!

1 day ago

தமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை!

1 day ago

”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

2 days ago

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

2 days ago

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.

2 days ago

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.

2 days ago

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

2 days ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

2 days ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

3 days ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

3 days ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.

3 days ago

புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

3 days ago

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

3 days ago

சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.

3 days ago

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

3 days ago

மத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.

3 days ago

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

3 days ago

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - முதல்வர் பழனிசாமி

3 days ago

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

3 days ago

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு!

4 days ago

உத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.

4 days ago

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.

4 days ago

கடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.

4 days ago

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.

4 days ago

ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.

4 days ago

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது!

5 days ago

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு!

5 days ago

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

5 days ago

சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து!

4 days ago

ஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா!

5 days ago

தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்!

5 days ago

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது! - தமிழக அரசு

5 days ago

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

5 days ago

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

5 days ago

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு!

5 days ago

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுகிறது

6 days ago

புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; தமிழக அரசின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பு.

6 days ago

"பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை" -யுஜிசி

6 days ago

"சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - திமுக

6 days ago

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்.

6 days ago

ஆக.16 ல் நடக்கவிருந்த வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

6 days ago

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97பேர் உயிரிழப்பு!

6 days ago

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

6 days ago

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

6 days ago

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு!

6 days ago

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி

6 days ago

இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை - தமிழக அரசு

6 days ago

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

6 days ago

கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் - முதல்வர்

6 days ago

பிற மாவட்டங்களிலும் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது - முதல்வர்

6 days ago

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது - முதல்வர்

6 days ago

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி!

1 week ago

பிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா!

6 days ago

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி; முதல் நாளிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டம்.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை