Skip to main content

‘பொறியாளர்’ மோகன், ‘கிரேஸி’ மோகனாக மாறிய கதை...!

June 11, 2019 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

தமிழ் திரையுலகை நகைச்சுவையால் கலகலக்க வைத்த பிரபல நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார். பொறியாளராக இருந்து கிரேஸியாக மாறிய அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றி தெரிந்துகொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அவ்வை சண்முகி படத்தைப் பார்த்தவர்கள் கமலின் சண்முகி கதாபாத்திரத்தை எப்படி ரசித்தார்களோ, அதற்கு இணையாக அந்த படத்தின் வசனத்தையும் ரசித்திருப்பார்கள். அதற்குக் காரணம் கிரேஸி மோகன். அவர்தான் அவ்வை சண்முகி படத்தின் வசனகர்த்தா. 

1952-ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த மோகன் ரங்காச்சாரிதான், பிற்காலத்தில் கிரேஸி மோகனாக தமிழ் நாடக உலகில் பலகாலம் கோலோச்சினார். தமிழ் நாடக உலகத்தை தன்னுடைய நகைச்சுவையால் கட்டிப் போட்டவரும் கிரேஸி மோகன்தான். மாணவ பருவத்தில், ஓவியத்தில் அதிக நாட்டம் இருந்ததால் ஓவியக் கல்லூரியில் சேரவே அவர் விரும்பினார். ஆனால், நினைத்ததை விட்டு தடம் மாறி, அவர் பொறியியல் படித்தார். கல்லூரி விழாவிற்காக, 1972 ஆம் ஆண்டு, ’கிரேட் பேங்க் ராபரி’ என்ற நாடகத்தை அவர் எழுதி நடித்தார். அந்த நாடகமே அவருக்கு சிறந்த ஒரு அடையாளத்தை அமைத்துக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல், சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகர் விருதை அந்த நாடகம் கிரேஸி மோகனுக்குப் பெற்றுக் கொடுத்தது. விழாவுக்கு வந்து நாடகத்தைப் பாராட்டி, கிரேஸிக்கு பரிசளித்தவர், திரையுலகில் அப்போது காதல் இளவரசனாக வலம் வந்த கமல்ஹாசன் தான்.

இந்த தூண்டுதலால், அதன் பிறகு பல நாடகங்களை அவர் எழுதத் தொடங்கினார். தனது தம்பி பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரி விழாவுக்காக, ஓரிரு நாடகங்களை எழுதிக் கொடுத்த கிரேஸி, பின்னர், எஸ்.வி.சேகரின் நாடகக் குழுவிற்காக, ’கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகத்தை 1976-ல் எழுதிக்  கொடுத்தார். இந்த நாடகத்தின் பிரமாண்ட வெற்றியே, பொறியாளர் மோகன் ரங்காச்சாரியை கிரேஸி மோகனாக அடையாளப்படுத்தியது. 

தொடர்ச்சியாக, எஸ்.வி. சேகரின் நாடகப் பிரியாவிற்காக பல நாடகங்களை எழுதிய அவர், அடுத்ததாக, தில்லை ராஜன் குழுவிற்காக ‘36 பீரங்கி லேன்’, காத்தாடி ராமமூர்த்தி குழுவினருக்காக ‘அப்பா அம்மா அம்மம்மா’ என, மற்ற கலைஞர்களின்  நாடகங்களுக்காக கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். பல நாடகங்களை எழுதி கிடைத்த அனுபவத்தில் அடிப்படையில், 1979ல் கிரேஸி மோகனே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்து விட்டார்.

கிரேஸியின் நாடகங்களில் அவரது தம்பி பாலாஜி, தொடர்ந்து மாது என்ற கதாபாத்திரத்தின் பெயரிலேயே நடித்ததால், அவர் மாது பாலாஜி என்றே அழைக்கப்பட்டார். ரமேஷ் என்பவர் தொடர்ந்து அப்பா வேடத்திலேயே நடிக்க, அவர் அப்பா ரமேஷ் ஆகவே மாறிவிட்டார். சுந்தரராஜன் என்பவர் பாட்டி வேடத்திலேயே நடித்ததால், அவர் பாட்டி சுந்தர்ராஜன் என்றே அடையாளப்படுத்தப்பட்டார். கிரேஸி மோகனின் தனித்துவ பாத்திரங்களுக்கும், அவரது ஆழமான நாடகத் திறமைக்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கூறலாம். 

தொடர்ந்து நாடகங்களை எழுதி, அதில் நடித்துக் கொண்டிருந்தவரை, வெள்ளித்திரையில் முத்திரை பதிக்க வைத்த பெருமை, நடிகர் கமல்ஹாசனையே சாரும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம், கிரேஸி திரையுலகில் வசனகர்த்தாவாக அடியெடுத்து வைத்தார். 

‘அபூர்வ சகோதரர்கள்' வசனம் கிரேஸிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததால் அவர், அடுத்தடுத்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என கமல் நடித்த படங்களில் கதை-வசன கர்த்தாவாக கோலோச்சினார். எந்த வசனமானாலும், நகைச்சுவை மேலோங்கி நிற்பதே கிரேஸி மோகனின் தனிச்சிறப்பு. 

பொறியியல் கல்லூரி படிப்பை முடித்து, ஒரு பொறியாளராக, ’சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கிரேஸியை, முதலில் அடையாளம் கண்டு திரைத்துறைக்கு அழைத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். வசனகர்த்தாவாக வலம் வந்த கிரேஸி மோகன் , பல படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கவும் செய்தார். வசன கர்த்தா, நாடக நடிகர், திரைப்பட நடிகர் என பல பரிணாமங்களைக் கொண்ட கிரேஸி மோகன், தற்போது விடைபெற்றுக் கொண்டார். கிரேஸி மோகன்  மறைந்தலும், தமிழ் நாடகம் எனும் வரலாற்றில் அவர் எழுதிய பக்கங்கள் என்றும் உயிர்ப்புடனேயே இருக்கும்.

Categories: Cinema
Image
தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 3வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி!

9 hours ago

ராமாயணம் குறித்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சோனாக்சி!

23 hours ago

மகன், மனைவியுடன் சேர்ந்து, மருமகளை தாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி!

23 hours ago

அமெரிக்காவில் இன்று பிரம்மாண்டமான "ஹவுடி மோடி" நிகழ்ச்சி!

23 hours ago

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்!

1 day ago

உலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா!

1 day ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 day ago

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு!

1 day ago

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...!

1 day ago

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

1 day ago

சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்

1 day ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

1 day ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

1 day ago

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு!" - இஸ்ரோ தலைவர்

1 day ago

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...!

1 day ago

கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

1 day ago

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு!

1 day ago

சென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...!

1 day ago

பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு!

2 days ago

போராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்

2 days ago

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

2 days ago

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்

2 days ago

நிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்!

2 days ago

சென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு!

2 days ago

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

2 days ago

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

3 days ago

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்!

3 days ago

வாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

3 days ago

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்!

3 days ago

“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்!" - வானிலை மையம்

3 days ago

ராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

3 days ago

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

3 days ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

3 days ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

3 days ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

3 days ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

4 days ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

4 days ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

4 days ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

4 days ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

4 days ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

4 days ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

4 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

4 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

4 days ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

4 days ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

4 days ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

4 days ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

4 days ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

5 days ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

5 days ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

5 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

5 days ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

5 days ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

5 days ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

5 days ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

5 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

5 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

5 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

5 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

5 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

6 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

6 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

6 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

6 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

6 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

6 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

6 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

6 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

6 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

1 week ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

1 week ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

1 week ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

1 week ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

1 week ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

1 week ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

1 week ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

1 week ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

1 week ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

1 week ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

1 week ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

1 week ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

1 week ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

1 week ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

1 week ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

1 week ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

1 week ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

1 week ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

1 week ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

1 week ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

1 week ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

1 week ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை