Skip to main content

தென்னக தீர்ப்பு மோடிக்கு எதிரானதா?

March 29, 2019
Image

கா. அருண்

கட்டுரையாளர்

Image

இந்தியாவில் மிகவும் தனித்துவமாக விளங்குபவர்கள் தென் மாநிலத்தவர்கள், பழக்கவழக்கம் மட்டுமல்லாது அரசியலிலும் தென்னக மக்கள் வித்தியாசமான சிந்தனை உடையவர்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் சேர்ந்ததே தென்னகம். இங்கு ஒவ்வொரு மாநில மக்களின் சிந்தனையும் வித்தியாசமானது, கேரளாவில் இடதுசாரி சிந்தனை அதிகம் என்றால் தமிழகத்தில் திராவிட சிந்தனை, கர்நாடகாவில் வலதுசாரி, இடதுசாரி என இரண்டும் சேர்ந்த கலவை. 

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 130 தொகுதிகள் தென்னகத்தில் உள்ளன. இந்தியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள தென்னகத்தில் தேசிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாக உள்ளது. தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளே பிரதான சக்திகளாக திகழ்ந்தாலும், தென்னக மாநிலங்கள் பலவற்றில் மாநில கட்சிகளின் ஆதரவில்லாமல் அவை பலம்குறைந்ததாகவே காணப்படுகின்றன.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதுள்ளன? அவற்றின் சாதக பாதகம் என்ன? சற்று விரிவாகவே பார்க்கலாம்.

கர்நாடகா:

பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த முதல் மற்றும் ஒரே தென்னக மாநிலம் என்ற பெருமை கர்நாடகத்திற்கு மட்டுமே உண்டு.

பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை தவிர்த்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மாநில அரசியலை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறது. இக்கட்சியின் நிறுவனரான தேவகவுடா கர்நாடக முதல்வராகவும், நாட்டின் 11வது பிரதமராகவும் பதவிகளை வகித்துள்ளார்.

28 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடகாவில் சாதிவாரி அரசியலும் முக்கியத்துவம் பெருகிறது. அங்கு வோக்கலிகா, லிங்காயத்துகள், பட்டியலினத்தவர்களின் வாக்கு வங்கி மட்டுமே மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பாதியளவு உள்ளன. 16% இஸ்லாமியர்களும், 7% குருபா இனத்தவர்களும் கணிசமான வாக்குவங்கியை கொண்டுள்ளனர்.

கடந்த 2013ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி முழு மெஜாரிட்டியுடன் வென்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அடுத்த ஆண்டிலேயே (2014) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வீசிய மோடி அலையை பயன்படுத்தி 17 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வென்றன.

சென்ற தேர்தலில் நாட்டிலேயே ஒட்டுமொத்தமாக 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை பெற்றுத்தந்த இரண்டாவது பெரிய மாநிலம் கர்நாடகம் என்பது நினைவுகூறத்தக்கது. வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் பிரபலங்கள் நாடாளுமன்றத்திற்கு இங்கிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாஜக - காங்கிரஸ் என்ற நேரடி மோதலை சந்தித்து வந்த இம்மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாஜக, காங்கிரஸ், மஜத என மும்முனை போட்டி நிலவிய நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத போது, யாரும் எதிர்பாராத வகையில் 78 இடங்களில் வென்ற காங்கிரஸும், 38 இடங்களில் வென்ற மஜத-வும் கைகோர்த்ததால் பெரும்பான்மை நிரூபிக்க இயலாமல் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. தன்னைவிட குறைந்த தொகுதிகளில் வென்ற மஜகவிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து காங்கிரஸ் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டது. (இத்தேர்தல் சமயத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பாஜகவின் பி-டீம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது நினைவுகூறத்தக்கது)

இந்தக் கூட்டணி தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருகிறது. 21 தொகுதிகளில் காங்கிரஸும், 7 தொகுதிகளில் மஜதவும் போட்டியிடுகின்றன. பாஜக வலிமையான போட்டியை சந்திக்கும் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. காங்கிரஸை எதிர்த்து உருவானது தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு தான் அவர்களது பிரதான கொள்கை என்பதால் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி உருவான தொடக்கத்தில் இருந்தே இரண்டு கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே உரசல் இருந்து வருகிறது. தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஏற்பட்ட உரசல் வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது. இந்த சலசலப்பை பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. 

பாஜகவிற்கு சாதமகான ஒரே தென்மாநிலம் என்பதை இந்தத் தேர்தல் மெய்ப்பிக்குமா என்பதை மே 23 வரை காத்திருந்தே தெரிந்துகொள்ளமுடியும்..

தமிழ்நாடு:

தமிழகத்தை பொருத்தவரையில் தேசிய கட்சிகளுக்கு பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. திராவிட இயக்கம் வளர்ச்சியடைய தொடங்கிய போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது காங்கிரஸ். அதுவரை காங்கிரஸுக்கு மாற்று இல்லை என்ற நிலை தான் இருந்தது. திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து திமுகவை அண்ணா உருவாக்கியபோது அரசியல் ரீதியாக திராவிட இயக்கம் வலுப்பெற்றது. ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பதிவு செய்த திமுக, அதன்பிறகு 1957 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு, திமுகவின் அசுரவளர்ச்சியில் தொடங்கியது தான் காங்கிரஸின் வீழ்ச்சி. அதன் பிறகு திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் அதிமுகவை தோற்றுவித்தார். 

இங்கிருந்து திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே தேசிய கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டன. 

பாஜக தோற்றுவிக்கப்பட்டு 1996ல் வாஜ்பாய் தலைமையில் அடைந்த முதல் வெற்றி வெகுநாட்கள் நீடிக்கவில்லை, 1998ல் மீண்டும் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைய உதவியது தமிழ்நாடு தான். திமுக உதவியுடன் பாஜக ஆட்சியை நடத்தியது. அந்த தேர்தலுக்கு பிறகு தான் பாஜக தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை பெறத்தொடங்கியது. பின்னர் 2004 மற்றும் 2009 தேர்தலில் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தது தமிழகம் தான்.

அதுவரை திமுக, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்துவந்த தேசிய கட்சிகள் 2014ல் தனித்து விடப்பட்டன. இந்த சூழலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் தனித்தும், விஜயகாந்தின் தேமுதிக தலைமையில் பாஜகவை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி தனித்தும் என நான்கு முனை தேர்தல் நடைபெற்றது. ‘மோடியா அல்லது இந்த லேடியா’ என முழங்கிய ஜெயலலிதா 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். 

ஆனால் இதுவரையில் இருந்த நிலை வேறு, தற்போதைய நிலை வேறு. கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் மறைவையடுத்து தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது.

இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி என பிரம்மாண்ட கூட்டணி ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, பாஜக, த.மா.க. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என்ற பிரம்மாண்ட கூட்டணி மறுபுறமும் ஏற்பட்டுள்ளன. 

இதே போல ஜெயலலிதா மறைவையடுத்து ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய டி.டி.வி.தினகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை புதிதாக களம் காணுகின்றன.

இதுதவிர 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கூடுதல் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. முக்கிய கட்சிகள் மட்டுமல்லாது புதிதாக களம் காணும் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் அமில சோதனை என்பது நிதர்சனம். 

புதுச்சேரி:

ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய புதுச்சேரியின் அரசியல், பெரும்பாலும் தமிழக அரசியலை சுற்றியே நகர்ந்து வருகிறது.

காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சி புரிந்துள்ள புதுவையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாராயாணசாமி முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை 2011ல் என்.ரங்கசாமி தொடங்கினார். 2015ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15-ஐ கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைந்தது. அக்கட்சியின் சபாநாயகராக இருந்த ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதே பிரதான கூட்டணி கணக்குகள் தான் புதுச்சேரிக்கும் பொருந்தும், என்றாலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரியில் மட்டுமே செயல்படும் என்.ஆர்.காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. 

இந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நாராயணசாமியும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும் எதிரெதிர் முகாமில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கு இடையில் தான் பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 முறை எம்.எல்.ஏவாக இருந்து திமுகவில் இருந்து விலகிய சுப்பிரமணியன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் புதுவையில் போட்டியிடுகிறார். அமமுகவின் சார்பில் தமிழ்மாறன் போட்டியிடுகிறார். 

புதுவை மக்கள் தொகையில் 43% வன்னியர்கள் என்பதால் இத்தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு இது சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கேரளா:

இந்தியாவின் படிப்பறிவு மிகுந்த (93.91%) மாநிலம், ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் (1,000 ஆண்களுக்கு 1084 பெண்கள்) சிறந்த மாநிலம், சராசரியாக நீண்ட ஆயுட்காலம் (77 ஆண்டுகள்) கொண்ட மக்கள் மிகுந்த மாநிலம் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது கேரள மாநிலம்.

‘கடவுளின் சொந்த நாடு’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இந்த மாநிலம் இயற்கை எழில் நிறைந்தது. மிளகு, இயற்கை ரப்பர், தேயிலை, காபி, தென்னை, நறுமனப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாக கேரளா விளங்குகிறது. சுற்றுலா மூலம் இந்த மாநிலம் பெரும் வருவாய் மிக முக்கியமானதாகும்.

கேரளாவின் அரசியலானது இரண்டு மையங்களை சுற்றியே நகர்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி (UDF) ஒன்றும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி (LDF) மற்றொன்றும் ஆகும். 1982 முதல் இந்த கூட்டணிகள் தான் மாறி மாறி அம்மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து இதர கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டணிகளில் ஏதேனும் ஒன்றில் ஐக்கியமாகி உள்ளன.

இந்த மாநில மக்கள் பொதுவாகவே இடதுசாரி சிந்தனைமிக்கவர்கள் என்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கு செல்வாக்கு மிகுந்தவையாக திகழ்கின்றன, குறிப்பாக கன்னூர் மற்றும் பாலக்காடு ஆகியவை கம்யூனிஸ்ட்களின் மையப்பகுதியாக உள்ளன. கம்யூனிஸ்ட்களை ஆட்சியில் அமர்த்திய முதல் மாநிலம் என்ற சிறப்பையும் கேரளா பெற்றுள்ளது.

பெரிய கட்சிகள் வரிசையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலிடத்தையும், காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. எர்ணாகுளம், கோட்டயம் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் மையப்பகுதிகளாக உள்ளன. இருப்பினும் எந்த ஒரு கட்சியும் இங்கு தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற நிலையே உள்ளது, கூட்டணி அரசை உருவாக்குவதிலேயே இந்த மாநில மக்களின் மனப்பாங்காக உள்ளது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளையும் அதன் கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளையும் கைப்பற்றின, கம்யூனிஸ்ட் கூட்டணி 8 தொகுதிகளில் வென்றன. 

இந்த தேர்தலை பொருத்தவரையில் காங்கிரஸுக்கு நம்பிக்கைக்குரிய மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் எதிரிகளாக மோதிக்கொள்ளும் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழகத்தில் நண்பர்களாக உள்ளன. இவ்விரண்டு கட்சிகளும் அருகருகே உள்ள பாலக்காடு மற்றும் கோவை தொகுதிகளில் எதிரிகளாகவும், நண்பர்களாகவும் தேர்தலை சந்திப்பது சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பருவ வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் பரபரப்பான தீர்ப்பு கடந்த ஆண்டு வெளியானதில் இருந்து அம்மாநில அரசியலிலும் அது எதிரொலிக்கத்தொடங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஆதரவாக ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சி செயல்பட்டது, இதனை கண்டித்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டம் இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடும். காங்கிரஸ் கட்சியும் இதனை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தது அக்கட்சிக்கு சாதகமாக அமையலாம்.

சபரிமலை போராட்டங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும் எனவும், திரிபுரா தேர்தல் போன்று பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக நம்புகிறது. அந்த நம்பிக்கை மெய்யாகிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 நமக்கு வெளிப்படுத்தும்.

ஆந்திரா & தெலங்கானா:

2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலே ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் சந்தித்த கடைசி தேர்தல். இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பிரிவிணைக்கு பின்னர் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் முதல் முறையாக சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது சிறப்புக்குரியதாகும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

2009 முதல் 2014 வரை ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா தனி மாநில கோரிக்கை வலுப்பெற்று போராட்டங்கள் வெடித்தன. 2014 மக்களவை தேர்தல் முடிந்த ஒரு சில தினங்களிலேயே ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. இங்கு தமிழகம் போன்றே தேசியக் கட்சிகளை விட மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே அதிகம்.

தற்போதைய ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகியவையே பிரதான கட்சிகள். இவை இரண்டுக்குமிடையே தான் நீயா, நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக, நடிகர் பவன் கல்யானின் ஜனசேனா ஆகியவையும் குறிப்பிடத்தக்க கட்சிகளாக உள்ளன. 

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) கட்சி செல்வாக்குமிக்கதாக உள்ளது, பிரிவினைக்கு பின்னர் TRS கட்சி தெலங்கானாவின் ஆட்சியை பிடித்தது, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து அங்கு அசைக்கமுடியாத சக்தியாக விளங்குகிறது. அசாவுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் முஸ்லீமன் கட்சியும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது.

2014 தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் இடம்பிடித்திருந்தன. சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி காங்கிரஸுடன் சேர்ந்து கடந்த முறை தேர்தலை சந்தித்தன. 

ஆனால் இந்த இரண்டு கூட்டணிகளிலுமே இப்போது காட்சிகள் மாறிவிட்டன.

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிறைவேறாததால் வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சியுடன் அக்கட்சி கைகோர்த்துள்ளது. மேற்குவங்கம் உட்பட எதிர்கட்சிகள் சார்பில் நடைபெற்ற சில பொதுக்கூட்டங்களில் ராகுல்காந்தியுடன் சேர்ந்து கலந்துகொண்டார் சந்திரபாபு நாயுடு. எனினும் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. 3,600 கிமீ தூர பாதயாத்திரை நடத்தி முடித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி மாநில மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றுள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் மற்றொரு முக்கிய அரசியல் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகை நீண்ட நாட்கள் கலக்கிய பவன் கல்யாணுக்கும் ஆந்திர மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். சமீபத்தில் பல முக்கிய பிரபலங்கள் அவரது ஜனசேனா கட்சியில் இணைந்து வருவது அவருக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

தெலங்கானாவை பொருத்தவரையில் TRS மற்றும் ஓவைசி கட்சி கூட்டணி அமைத்துள்ளது, காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்து களம் காணுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் அதிகபட்சமாக 16 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சி வென்றது, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 11,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 9, பாஜக 3, காங்கிரஸ் 2, ஓவைசி கட்சி ஒரு தொகுதியிலும் வென்றிருந்தது.

தற்போது ஆந்திரா 25 தொகுதிகளும், தெலங்கானா 17 மக்களவை தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

பாஜக:

130 தொகுதிகளை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து பாஜகவிற்கு சாதகமான மாநிலம் என்று எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இணைந்திருந்தாலும் பாஜகவுக்கு அது வாக்குகளாக மாறுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சபரிமலை விவகாரமும், புதுவையில்  கூட்டணி வேட்பாளரையும் நம்பியுள்ளது பாஜக. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏற்படலாம் என்பதே யதார்தம்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சி கேரளவையே மலைபோல நம்பியுள்ளது. தமிழகத்தில் திமுகவும், ஆந்திராவில் தெலுங்கு தேசமும், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளமும் என அக்கட்சிக்கு சாதமகான கூட்டணி அமைந்துள்ளது அக்கட்சிக்கு நம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமாக புதுவை இருப்பதால் அங்கும் நம்பிக்கையுடன் களம் காணுகிறது. தெலங்கானவை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு தென் மாநிலங்கள் சாதகமான சூழலையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.

கூட்டணி கணக்கு கைகொடுக்குமா? ஆட்சி மாற்றம் ஏற்படுமா? விடை தெரியா கேள்விகளுக்கு மே 23 வரை காத்திருப்போம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

நெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை!

4 hours ago

அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி!

5 hours ago

மறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

5 hours ago

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு!

9 hours ago

பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி!

9 hours ago

எஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி!

9 hours ago

காலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்!

1 day ago

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.

1 day ago

அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.

1 day ago

அகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

1 day ago

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.

1 day ago

சட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

1 day ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

பாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்!

1 day ago

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

2 days ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

2 days ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

2 days ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

2 days ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

2 days ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

2 days ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

2 days ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

3 days ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

4 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

4 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

4 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

4 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

4 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

4 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

4 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

5 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

5 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

5 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

5 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

5 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

5 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

6 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

6 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

6 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

1 week ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 week ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 week ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 week ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 week ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

1 week ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

1 week ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை