Skip to main content

ராணுவத்தின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியை பிடித்தது எப்படி?

March 02, 2019
Image

கஜமுகன்

கட்டுரையாளர், லண்டன்

Image

(குறிப்பு : இம்ரான் கான் குறித்து கடந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் மாதம் லண்டனைச் சேர்ந்த கட்டுரையாளர், செயற்பாட்டாளர் கஜமுகன் எழுதிய கட்டுரை. அவரின் ஒப்புதலைப் பெற்று இங்கு பிரசுரிக்கப்படுகிறது.) 

 

கடந்த மாதம் (2018 ஜூலை) பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.டி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம்.

 

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியானது 1996-ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் 342 இடங்களைக் கொண்டது. அதில் 272 இடங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான இடங்களை எவரும் பெறவில்லை. அதாவது 137 இடங்களை எக்கட்சியும் கைப்பற்றவில்லை. பி.டி.ஐ கட்சியானது 117 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எனவே வேறு பலருடன் இணைந்து கூட்டணி வைத்தே இம்ரான் கான் ஆட்சியை அமைத்துள்ளார்.

இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மோசடியான தேர்தல் இது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. நீதியானது அதிகாரங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது அதனை மக்களிடம் கொண்டுவர வேண்டும் என பிரச்சாரம் செய்த இம்ரான் கான், இராணுவ அதிகாரத்தின் துணையுடனேயே ஆட்சிக்கு வந்துள்ளது வேடிக்கையான முரண் நகையாகும்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) போன்ற கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அவற்றினைத் தவிர்த்து இதுவரை ஆட்சியமைக்காத இம்ரான் கானை தமது கைப் பொம்மையாகத் தெரிவு செய்துள்ளது பாகிஸ்தான் ராணுவம் எனப் பேசப்படுகிறது. உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயுடன் இணைந்து பி.டி.ஐ கட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்கும் வேலைகளை, அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினை சிதைக்கும் வேலையினை இராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்தது.

அதன் முதற்கட்டமாக, கடந்த வருடம், பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நாவாஸ் ஷெரிப்பின், லண்டனில் சொத்து வாங்கியமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்து, அவரின் ஊழலை நிரூபித்து அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். 2016-இல் வெளியான பனாமா பேப்பரில், வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிய பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி இருந்தது. அதில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தேர்தலில் நிற்பதற்கு தடை விதித்துள்ளதோடு மட்டுமல்லாமல், கடந்த மாதம் அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது நீதிமன்றம். மேலும், நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானிய இராணுவத்துடன் முரண்பட்ட ஒரு போக்கையே கடைப்பிடித்தார். குறிப்பாக, இராணுவத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்க முயற்சி செய்தார். இராணுவத்தை மக்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது பற்றிப் பேசினார். நவாஸ் ஷெரிப்பினைக் கைது செய்து சிறையில் அடைத்தமைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும் எனச் சொல்லப்படுகிறது.

நவாஸ் ஷெரிப்பிற்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என ஐ.எஸ்.ஐ தனக்கு அழுத்தம் கொடுத்தாதாகவும், நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளிலும் தலையிட்டதாகவும் , இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆசிஸ் சித்திக் தெரிவித்திருந்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் மிகபெரும் கட்சிளில் ஒன்றான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவரான நவாஸ் ஷெரிப்பினை சிறையில் தள்ளி, அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் வாக்கு வங்கியை சிதைத்து, தேர்தலில் இம்ரான் கானுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்தது பாகிஸ்தானிய இராணுவம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

நவாஸ் ஷெரிப் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார் என மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்து வந்தார் இம்ரான் கான். ஆனால் இதுவரை அவரைக் கைது செய்யாத பாகிஸ்தானிய நீதிமன்றம் இப்போதுதான் கைது செய்து சிறையில் அடைத்தது எனின் அதன் பின்னணியில் இருப்பது இம்ரான் கானுக்காக சேவை செய்யும் பாகிஸ்தானிய இராணுவம் ஆகும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். பாகிஸ்தானைக் காப்பாற்றுங்கள் என்ற கோஷத்தை முன்வைத்து 2011-இல் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் ஊழலுக்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தியிருந்தார் இம்ரான் கான். தான்நடத்திய பேரணியின் வெற்றியே நவாஸ் ஷெரிப்பின் கைது என அதைத் தனக்கு சாதமாகப் பயன்படுத்தியும் கொண்டார் இம்ரான் கான்.

இதுதவிர, நவாஸ் ஷெரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை இம்ரான் கானின் கட்சிக்கு சேரச்சொல்லி பல்வேறு மிரட்டல்களை விடுத்தது இராணுவம். அது மட்டுமல்லாது, அக்கட்சியின் சார்பாக நின்ற வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராகிய ரனா இக்பால் சிராஜ், பாகிஸ்தான் இராணுவத்தினால்தான் மிரட்டப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை அண்மையில் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பி.டி.ஐ கட்சியை சாராத பிற கட்சி வேட்பாளர்களது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்தது பாகிஸ்தானிய தேர்தல் ஆணையம். மேலும் வேட்பாளர்களைக் குறி வைத்து குண்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில் ராணுவத்தைப் பொறுத்தவரை பி.டி.ஐ ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது தொங்கு பாராளுமன்றம் அல்லது பலவீனமான கூட்டணியுடன் கூடிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.

வேறு எந்தக் குற்றமும் செய்யாமல் நவாஸ் ஷெரிப்பிற்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மட்டும் 100-கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். அதுவும் குறிப்பாக கடந்த ஜூலை 13-ம் தேதி, நவாஸ் ஷெரிப் கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் தடாலடியாக 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நவாஸ் கைது செய்யப்படும்பொழுது இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் அல்லது போராட்டம் நடத்தலாம் என்ற அச்சத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 17,000-க்கும் மேற்பட்ட நவாஸ் ஷெரிப்பின் ஆதரவாளர்களின் மேல் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், பல முக்கிய தலைவர்களுக்கு எதிராக ஊழல் விசாரணையையும் ஆரம்பிக்கப்பட்டது. இம்ரான் கானுக்கு எதிராக களமிறங்கியிருப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் நீதிமன்றம் ஆகியன ஒன்றிணைந்து பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டது. அதிகாரம் என்பது மக்களுக்காக அல்ல அது மக்களை ஒடுக்குவதற்காக என்பதை பாகிஸ்தான் அதிகார சக்திகள் நிரூபித்துள்ளன.

பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகைகளான டான் (Dawn) என்னும் ஆங்கிலப் பத்திரிகையும், ஜங் (Jang) என்னும் உருதுமொழிப் பத்திரிகையும், நவாஸ் ஷெரிப்பிற்கு தனது ஆதரவை தெரிவித்தமையால் அதன் விநியோகம் முடக்கப்பட்டது. அத்துடன் பி.டி.ஐ-க்கு எதிராக பிரச்சாரம் செய்த பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டார்கள்.

அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் பிரபல கட்டுரையாளர்களாகிய பாபர் சத்தார்க், முஷராப் சைதி போன்றோரின் கட்டுரைகளைப் பிரசுரிக்கக்கூடாது என த நியூஸ் (The News) என்னும் பத்திரிகைக்கு உத்தரவு பிறப்பித்தது இராணுவம்.

கடந்த (2018) பிப்ரவரி மாதம் மீடியாலாஜிக் வெளியிட்ட அறிக்கையின் படி, பாகிஸ்தானில் அதிகளவான மக்களால் பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி சேவைகளில் முதலிடத்தைப் பெற்றிருப்பது ஜியோ டிவி ஆகும். ஜியோ டிவியானது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் பிரச்சாரங்களை ஒளிபரப்பியமையாலும், நவாஸ் ஷெரிப்பினை ஆதரித்து செய்திகளை வெளியிட்டமையினாலும் அதன் சேவை பாகிஸ்தானிய இராணுவத்தினால் முடக்கப்பட்டது. அதனால் நாட்டின் 80 சதவிகிதம் பிரதேசங்களில் அதன் ஒளிபரப்பு தடைப்பட்டது. அதுதவிர ஜியோ டிவியினை அவர்களது கேபிள் சானல்களிலிருந்து நீக்கக்கோரி கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு ஐ.எஸ்.ஐயானது அழுத்தம் கொடுத்தது. எனினும் தாம் எந்த ஒளிபரப்பு சேவையினையும் தடை செய்யவோ அல்லது முடக்கவோ இல்லை என பாகிஸ்தானிய அரசின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் அரசின் ஊடக ஆணையத்தையும் மீறி ஊடக சுதந்திரத்தை முடக்கியுள்ளது ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் இராணுவம்.

பின்னர் ஜியோ நிர்வாகம் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன்போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாவும் அதற்கு நிர்வாகம் உடன்பட்டதாலேயே தொலைகாட்சி சேவையினை மீண்டும் ஒளிபரப்பு செய்ய இராணுவம் அனுமதி அளித்தது என்றும் கூறப்படுகின்றது. எனினும், சேவை நிறுத்தப்பட்டதிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய அல்லது என்ன வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஜியோ தொலைகாட்சியின் தலைவர் அஸ்லாம். ஊடகங்களை மிரட்டி, ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி, கருத்துச் சுதந்திரத்தை சிதைத்து, பத்திரிகைச் சுதந்திரத்தை குழி தோண்டிப் புதைத்து அதன்மேல் தனது வெற்றியை நிலைநாட்டி இருக்கின்றார் இம்ரான் கான்.

சில வாக்குச்சாவடி நிலையங்களினுள் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பது மேலிடத்து உத்தரவு. மீறி செல்ல வேண்டும் எனில் இராணுவ உயர் அதிகாரியிடமிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும் என அங்கு கடமையிலிருந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  வாக்குச்சாவடியினுள் நிகழும் மோசடிகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவார்கள் என்ற அச்சத்தினாலேயே பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தனது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றாமல் அதிகாரத்தின் துணை கொண்டு ஒடுக்கு முறைகளைப் பிரயோகித்தே ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார் இம்ரான் கான். இவ்வாறு ராணுவ அதிகாரத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்த இம்ரான் கான் மக்கள் நலனைவிட ராணுவத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் என்பது வெளிப்படை. ஆகவே மீண்டும் மக்கள் ஒடுக்கப்படும் நிகழ்வே தொடர்ந்த வண்ணமிருக்கும்.

பாகிஸ்தானிய இராணுவமானது அதிகாரங்களையும் சொத்துகளையும் தன்னகத்தே கொண்ட மிகப்பெரும் சக்தியாகும். பொதுவாக தன் நாட்டிலுள்ள நிறுவனங்களையும் இராணுவத்தையும் அரசே கட்டுபடுத்தும். ஆனால் பாகிஸ்தானில், நிறுவனங்களையும், அரசையும் கட்டுபடுத்தும் முக்கிய சக்தியாக பாகிஸ்தானிய இராணுவமே விளங்குகின்றது. நாட்டின் மொத்த உற்பத்தித்துறையின் மூன்றில் ஒரு பங்கை இராணுவம் கட்டுப்படுத்துகிறது. ராணுவத் துறையிலுள்ள தனியார் சொத்துக்களின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகும். அதில் பத்து பில்லியன் நிலமாகவும், பத்து பில்லியன் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளாகவும் உள்ளன.

பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள், பேக்கரிகள், பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கோல்ப் மைதானங்கள் போன்றவை பாகிஸ்தானிய ராணுவத்தின் கட்டுப்பாடின் கீழேயே உள்ளது. அதாவது பெரும்பான்மையானவற்றின் உரிமையாளர்களாக இராணுவ அதிகாரிகள், தளபதிகள், முன்னாள் இராணுவ பிரிகேடியர் போன்றவர்களே காணப்படுகின்றனர். பல ராணுவ அதிகாரிகள் பில்லியனர்களாக உள்ளனர்.  ஒருபுறம் வறுமை, ஊழல், வேலையில்லாப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மறுபுறம் இராணுவ அதிகாரிகள் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர்.

பாகிஸ்தானின் அதிகாரமானது அரசின் கையிலும் இராணுவத்தின் கையிலும் மாறிமாறிச் சென்ற வண்ணமுள்ளன. அதிலும் குறிப்பாக, 1947-இல் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான காலகட்டங்களில், 35 வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானானது நேரடியான இராணுவ ஆட்சியிலும், மீதி காலத்தில் மறைமுகமான இராணுவ ஆட்சியின் கீழேயும் இருந்து வந்துள்ளது.
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

15 minutes ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

41 minutes ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

1 hour ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

1 hour ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

10 hours ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

11 hours ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

15 hours ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

15 hours ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

16 hours ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

20 hours ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

20 hours ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

22 hours ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

22 hours ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

1 day ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

1 day ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

1 day ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 day ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

1 day ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

1 day ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

1 day ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

1 day ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

1 day ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 day ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

1 day ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

2 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

2 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

2 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

2 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

2 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

2 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

2 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

2 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

2 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

2 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

2 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

3 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

3 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

3 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

3 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

3 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

3 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

3 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

3 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

3 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

3 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

4 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

4 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

4 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

4 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

4 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

4 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

4 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

4 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

5 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

5 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

5 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

5 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

5 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

5 days ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

5 days ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

5 days ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

5 days ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

5 days ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

5 days ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

5 days ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

5 days ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

6 days ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

6 days ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

6 days ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

6 days ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

6 days ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

1 week ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

1 week ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

1 week ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

1 week ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

1 week ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

1 week ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

1 week ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

1 week ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

1 week ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

1 week ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

1 week ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

1 week ago

இந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

1 week ago

வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்

1 week ago

4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்!

1 week ago

வெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

1 week ago

தென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை!

1 week ago

மதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து!

1 week ago

திருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

1 week ago

கடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்!

1 week ago

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.

1 week ago

அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு!

1 week ago

திருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை