Skip to main content

பொக்கிஷங்களை மீட்ட பொன்.மாணிக்கம்!

November 30, 2018
Image

நந்தகுமார்

கட்டுரையாளர்

Image

"கண்ணுக்கு முன்னால தப்பு நடக்குதா, குற்றம் செய்யறவன் மேல அந்த இடத்துலயே நடவடிக்கை எடு. அக்யூஸ்ட்டு எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் கவலைப்படாத, அத கோர்ட்டு பாத்துக்கும், விட்டுட்டு மட்டும் வந்துடாத, அப்படி வந்தா நீ போலீசே இல்ல” இது ஏதோ தமிழ்சினிமாவில் போலீஸாக நடிக்கும் ரீல் ஹீரோக்கள் பேசும் வசனமில்லை. 22 வருடங்களாக தன்னுடைய  காவல்துறை வாழ்க்கையில் களத்தில் சக போலீஸாரிடம் இதே கருத்தை வலியுறுத்தியும், தன்னுடைய காவல்துறை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்தும் வாழ்ந்து காட்டி தமிழக இளைஞர்களின் ரியல் ஹீரோவாக மாறியிருக்கும் ஐஜி பொன்.மாணிக்கவேலின் வாரத்தைகள்தான் இவை.

 

சட்டத்த தெரிஞ்சிகிட்டா சண்டைக்கு இடமில்லை; நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்களை பார்த்து போலீஸ் பயப்பட தேவையில்லை; விக்டிம்களை மதிக்கனும் அவர்களை மேலும் வருத்தக் கூடாது போன்ற அறிவுரையுடன் நீள்கிறது பொன்.மாணிக்கவேலின் பிரிவு உபசரிப்பு விழா உரை. சட்டம் குற்றவாளிக்கும், விக்டிம்கும் என்னென்ன உரிமைகளை வழங்கியுள்ளது. அதை விசாரிக்கும் காவல்துறையினர் பங்கு என்ன? என சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்துள்ளார். சிலைகடத்தல் வழக்கில் அது பெரிதும் அவருக்கு கை கொடுத்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக ஏவப்பட்ட அனைத்து அம்புகளையும் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார் பொன்.மாணிக்கவேல். சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என உத்தரவிட்டதே இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

 

அதிரடி மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற குரூப் 1 அதிகாரியான ஜஜி பொன்.மாணிக்கவேல், 1996 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர். ராமநாதபுரத்தில் காவல்துறை காண்காணிப்பாளராக(எஸ்.பி) தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கினார் பொன்.மாணிக்கவேல். அதன்பின்பு, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் காண்காணிப்பாளராக பணியாற்றியனார். 

 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாக செயல்பட்டார். சேலத்தில் எஸ்.பியாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார். இந்த வழக்கை முன்னுதரணமாக வைத்து நேற்றைக்கு சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் நடந்த பிரிவு உபசரிப்பு விழாவில், ஒரு வழக்கில் எப்படி துப்பறிய வேண்டும் என சக போலீசாரிடம் தனக்கே உண்டான பாணியில் நகைச்சுவையாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

 

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் சேலம் கொலை வழக்கு போன்ற பல வழக்குகளை சிறப்பாக கையாண்டார். பின்பு விழுப்புரம் DIG, சென்னை மத்திய குற்றப்பிரிவு, திருச்சி ரயில்வே காவல்துறை, தமிழக பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட உயர் பதவிகளில் பொன்.மாணிக்கவேல் பணியாற்றியுள்ளார். 

 

2011 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் SPயாக இருந்தபோது காவல்துறையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் என்ற திட்டத்தை தொடங்கினார். பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் காவல்துறை உயரதிகாரிகளிடம் பாராட்டை பெற்றது.

 

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் 2012-ம் ஆண்டிலிருந்து பணியிலிருக்கிறார் பொன்.மாணிக்கவேல். இடையில், ரயில்வே ஐ.ஜியாக மாற்றினார்கள். ஆனாலும், நீதிமன்றத் தலையீடு காரணமாக, 2017 ஜூலை முதல் கூடுதல் பொறுப்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார்.

 

சிலைக்கடத்தல் வழக்கை கையிலெடுத்த 90 நாட்களிலேயே 1013 ஆண்டு பழமையான முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் உலக மகாதேவியின் சிலையை கண்டுப்பிடித்து அசத்தினார் பொன்.மாணிக்கவேல். தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவது முறியடிப்பு என தமிழகத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டு ஒரு முழுமையான போலீஸ் ஆபிசராக தன் பதவிக்காலம் முழுவதும் வலம் வந்துள்ளார் ஜ.ஜி.பொன்.மாணிக்கவேல்.

 

எந்தவொரு பிரச்சனைக்கும் சரியான தீர்வை தருபவர் என்பதால் வரலாற்று கதைகளில் வரும் மன்னன் சாலமன் என பெயரிட்டு சக காவலர்கள் அழைப்பதுண்டு.

 

அரை நூற்றாண்டு காலம் வேரூன்றி கிடந்த சிலை கடத்தல்களை அதன் ஆணிவேரை பல இன்னல்களுக்கு இடையே தன்னுடைய துப்பறியும் திறனையும், சட்ட நுணுக்கங்களையும் பயன்படுத்தி பலமாக அசைத்து வெளியே எடுத்துப் போட்டு, வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார் பொன்.மாணிக்கவேல். சிலைக்கடத்தல் தொடர்பாக எந்த விஷயமும் வெளியே வந்துவிடக்கூடாது என்று சிபிஐ-க்கு இந்த சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை மாற்றிவிட வேண்டும் என அதிகார வர்க்கம் துடிதுடித்துப்போனது.  

 

சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்கையும் ஜஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் பிரிவே விசாரணை செய்யும் என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என விசித்திரமான வாதத்தை முன்வைத்தது தமிழக அரசு. இருப்பினும் நீதிமன்றம் தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

 

இந்திய பெருமுதலாளிகளின் உருவாக்கத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் குஜராத் மாநில தொழிலதிபர்களின் தோட்டங்களைத் தோண்டி பல சிலைகளை மீட்டெடுத்து அதிகார வர்க்கத்தினை ஆடச் செய்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழகத்தை தன்னுடைய தொழில் நுணுக்கங்களால் சிலைப்போல செதுக்கியவர் சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் தனக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி-யில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பெண் எஸ்.பி ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்து விசாரணை ஆவணங்களைக் கேட்டதாகவும், தான் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்குப் பின்னால் சதி நடப்பதாகவும், தன் குழு குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

 

ஓய்வு பெறும் தேதி நெருங்க நெருங்க சுழன்று வேலை பார்த்தார் பொன்.மாணிக்கவேல். பதவிக்காலம் முடியும் வரை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக சிலை கடத்தல் விஷயங்களை வெளியே கொண்டு வருவேன் என்றும் உறுதி அளித்தார். சொன்னபடியே இயன்றவரை செய்தும் முடித்தார். இப்படியாக கடத்தல் பின்னணிகளை திறமையாகவும் சிறப்பாகவும் கண்டுபிடித்த பொன் மாணிக்கத்திற்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து சம்பளமின்றி கூட சிலைக் கடத்தல் வழக்குகளை கண்காணிக்கத் தயார் என பேட்டியளித்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.

 

90களின் காலகட்டம், அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் அதிவேகமாக பரவிக் கொண்டிருந்தது. எந்த அளவிற்கென்றால், நேர்மையான அரசாங்க அதிகாரிகள் என்றால் அவர்களை ஏளனமாக பார்க்கும்படியாக பரவியிருந்தது. காவல்துறை போன்ற ஒரு துறையில் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், அந்த துறையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெளிய வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், எளிதாக நேர்மையிலிருந்து விலக நேரிடும். 

 

அந்த காலகட்டத்தில் காவல்துறையில் பணிக்கு வந்தவர்தான், இன்று நேர்மையின் உருவமாக விளங்கும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...!

2 hours ago

கோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...!

6 hours ago

ப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

19 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..!

21 hours ago

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ

22 hours ago

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

23 hours ago

“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்!” - மு.க.ஸ்டாலின்

1 day ago

நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....!

1 day ago

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...!

1 day ago

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...!

1 day ago

அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி !

1 day ago

ப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்!

2 days ago

விசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...!

2 days ago

ப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்

2 days ago

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு!

2 days ago

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்!

2 days ago

ப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்!

2 days ago

விரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா? : தமிழிசை

2 days ago

குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

2 days ago

ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்!

2 days ago

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு!

2 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

2 days ago

7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...!

3 days ago

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

3 days ago

ஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா?; இன்று தீர்ப்பு...!

3 days ago

ராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்!

3 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

3 days ago

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

4 days ago

"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

4 days ago

சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....!

4 days ago

துறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....!

4 days ago

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...

4 days ago

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....!

4 days ago

ஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

4 days ago

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

5 days ago

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...!

5 days ago

பூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

5 days ago

நாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...!

5 days ago

திருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...!

5 days ago

அத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...!

5 days ago

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்

6 days ago

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

6 days ago

"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்!" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

6 days ago

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை

6 days ago

தமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்

6 days ago

கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...!

6 days ago

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்!

6 days ago

"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

1 week ago

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

1 week ago

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...!

1 week ago

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...!

1 week ago

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....!

1 week ago

முன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....

1 week ago

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

1 week ago

காஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...!

1 week ago

அண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்

1 week ago

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

1 week ago

21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...!

1 week ago

செங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...!

1 week ago

"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!

1 week ago

நள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்!

1 week ago

நீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்

1 week ago

வேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்

1 week ago

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

1 week ago

முன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்

1 week ago

மேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

1 week ago

“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி

1 week ago

“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்!” - முதல்வர் பழனிசாமி

1 week ago

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு!

1 week ago

தொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி!

1 week ago

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு!

1 week ago

இல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...!

1 week ago

கேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு!

1 week ago

திராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்

1 week ago

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

1 week ago

2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்!

1 week ago

கர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

1 week ago

கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி!

1 week ago

அத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

1 week ago

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு!

1 week ago

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...!

1 week ago

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ

1 week ago

"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி!" - பியர் கிரில்ஸ்

1 week ago

கேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி!

1 week ago

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.

1 week ago

தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

மிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்!

1 week ago

வேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

ஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

வேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

1 week ago

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...!

1 week ago

திமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்

1 week ago

கனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...!

2 weeks ago

இந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி

2 weeks ago

அம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை