Skip to main content

மாஸ்டர் பிளான்:  பிரியங்காவின் வருகையின் பின்னணி...!

January 24, 2019
Image

சரோஜ் கண்பத்

கட்டுரையாளர்

Image

இந்திய அரசிலுக்கு கொள்கையை விட முகமே முக்கியம். நேரு குடும்பத்தையும் காந்தி குடும்பத்தையும்(இந்திரா-ராஜீவ்) அப்படியே உரித்துவைத்திருக்கும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து துணைத்தலைவராகி பின்னர் கட்சியின் தலைவரானவர் ராகுல் காந்தி. இப்படி ஒவ்வொரு படியாக வந்தவர் தான் ராகுல் காந்தி. இதே வழியில் பிரியாங்கா வருகிறார். ஆனால் இரண்டே வயது வித்தியாசமுள்ள தங்கை பிரியங்கா வருகை தாமதம் ஏன்?


ராகுல் காந்தி அரசியலுக்கு வருவதற்கு முன்பும் பின்பும் அவரது சகோதிரி பிரியங்கா காந்தியையும் அரசியலில் வருவதை ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு பின்னர் வாரீசாக ராகுல் காந்தியை சோனியா காந்தி தேர்ந்தெடுக்க பிரியங்கா காந்தியின் வருகை தாமதமானது. இதற்கு முக்கிய காரணம் எதிர் கட்சிகள் வைக்கும், வாரீசு குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகள் வரும் என்பதல்ல… பிரியங்கா காந்தியை முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டாலோ அல்லது ராகுலோடு பிரியங்கா காந்தியும் வந்தாலோ அது ராகுல் காந்தியின் வளர்ச்சியை தடுக்கும் என்று தான் கட்சியும், கட்சித் தலைவரான சோனியா காந்தியும் நினைத்தனர். 


பிரியங்காவின் கரீஷ்மாவில் ராகுல் காந்தி பின் தங்கும் சூழ்நிலை உணரப்பட்டது. இதில் பிரியங்கா மட்டுமல்ல சோனியா காந்தி தலைமையில் கட்சி இருக்கும் நிலையில் கூட கட்சியின் கவனம் (ஃபோகஸ்) சோனியா காந்தி மீதே இருக்குமே தவிர அது ராகுல் காந்தி நோக்கி முழுமையாக திரும்பாது என்கிற கவலை ஏற்பட்டது. இதனால் பதவியை விரைவாக விட்டுக்கொடுத்ததோடு, பின்னரும் சோனியா காந்தி பாராளுமன்றத்தில் விவாதிப்பதோ அல்லது பொது மேடையில் ராகுலோடு அமருவதோ மிகக் குறைவாக இருந்தது. சமீபத்தில் தெலங்கானா தேர்தலிலும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியிலுமே இரண்டு பேரும் ஒன்றாக இருந்தனர். இதே சூழ்நிலை தான் பிரியங்கா காந்தியின் நுழைவும் ராகுல் காந்தியை பாதிக்கும் என்கிற எண்ணத்திலேயே தாமதமானது. ஆனால் இப்போது பிரியங்கா காந்தி கட்சியின் பொது செயலாளராக நியமனம் செய்யப்படது, அவரது வருகை அரசியலில் முழு வீச்சில் காங்கிரஸ் செயல்படப் போகிறது என்கிற கோணத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருப்பார்கள் என்கிற கோணத்தில் சிந்திக்கப்படுகிறது.

ராகுல் மென்மையானவர், பிரியங்கா துணிச்சலான பேசும் ஆற்றலுடையவர். பிரியங்கா காந்தி டீ - கப் என்றால் ராகுல் காந்தி சாசராக இருப்பவர். ஆனால் ராகுல் காந்தி மோடியை விளாசித்தள்ளும் “சோக்கிதார் சோரே ” (நாட்டின் காவலன் திருடனாக இருக்கிறார்) என்று முழங்குவதைப் போன்று பிரியங்கா காந்தி முழங்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. காரணம் அவருக்கு பின்னால் இருக்கின்ற வதேரா பெயர் விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பும். பிரியங்காவின் வருகையை எதிர்ப்பார்த்தே நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டது.
இதனாலோ என்னவோ கட்சியின் அகிலஇந்தியாவும் கரீஷ்மா தலைவி பிரியங்காவின் வருகை எதிர்பார்க்கும் நிலையில் அவரது பொதுச் செயலாளர் நியமனம் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே பொறுப்பேற்க வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில்  அவரது பங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொதுச் செயலாளர்கள் உண்டு. கட்சியின் அமைப்புகளுக்கு, இளைஞர்கள் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் என்கிற அமைப்புகளுக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்கான பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பது உண்டு. இதில் இரண்டு மூன்று மாநிலத்திற்கு ஒருவர் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதுண்டு. ஆனால் கட்சியின் அகிலஇந்தியாவும் பிரியங்காவின் வருகை எதிர்பார்க்கும் நிலையில் அவரது பொதுச் செயலாளர் நியமனம் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே. இது ராகுல் முடிவு, என்று சொல்லுவதை விட சோனியா காந்தி எடுத்த முடிவே என்று சொல்லப்படுகிறது. 
உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக இருந்தவர் குலாம் நபி ஆஸாத். தற்போது அவர் ஹரியானாவிற்கு  மாற்றப்பட்டுள்ளார். உபியில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தலைவர் ஒருவரும் உண்டு. அவர் நடிகர் ராஜ்பப்பர். இப்படி ஒரு தலைவரும் இருக்கின்ற நிலையில் மாநிலத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு உபி கிழக்கு மாநில பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியும் உபி மேற்கு பகுதிக்கு முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியாவும் மற்றொரு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உபி யின் கிழக்கு பகுதிதான் சவால் நிறைந்தது. மோடியின் வாரணாசி, உபி முதல்வர் யோகிஆதித்யநாத்தின் செல்வாக்கும் உள்ள பகுதி. மேற்கு பகுதியில் மீரட்  போன்ற பகுதியில் ஜாட் இனத்தவர்கள் அதிகம்.  
ராகுல் காந்தியின் பேட்டியில், ‘இது தேர்தலுக்காகவோ அல்லது இரண்டு மாதத்திற்கான நியமனம் இல்லை’ என்றும் உபியிலுள்ள மக்களை ஒன்றிணைக்கவே பிரியங்காவும் சிந்தியாவும் யல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இப்படி நாடு முழுக்க எதிர்பார்க்கப்படும் ஒரு கரீஷ்மா தலைவி உபி யில் அதிலும் ஒரு பகுதிக்கு நியமனம் என்பது ஒரு சிறிய அளவிலான  பணியே. 
ஏனெனில், மிகப்பெரிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டு அதில் சிக்கல்  ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் ராகுலுக்கும் சோனியாவிற்கும் உண்டு என்கின்றனர்.  ஆனால் தற்போதைய பொறுப்பிற்கான பின்னனி , சோனியாவின் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கச் செய்வதற்கான ஆயத்த பணிகள் என்கின்றனர். ஏற்கனவே தேர்தல்களின் போது அமேதி தொகுதியையும் ரேபரேலி தொகுதியையும் பிரியங்கா காந்தி தான் கவனித்து வந்தார். ஆனால் கடந்த மூன்று தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில் அங்கு எதிர்ப்பு அலை ஏற்படலாம் என்கிற எச்சரிக்கை உணர்வில் பா.ஜ.க தலைவர்கள் சுஸ்மா சுவராஜ்,  உமாபாரதி போன்றவர்கள் வரிசையில் சோனியா காந்தியும் உடல் நிலை கருதி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க  இருக்கின்றார் என்பதால் ரேபரேலியில் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்கும் விதமாகவே உபியில் களம் இறக்கிவிடப்படுகிறார் என்கின்றனர்.  


பிரியங்கா காந்திக்கு இதுவரை கட்சியில் அதிகாரபூர்வமாக பதவி அறிவிக்கப்படவில்லையென்றாலும் அவர் தலையிடாமல் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட போதும் குறிப்பாக சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் அமைச்சர்கள் தேர்விலும் கூட பிரியங்காவின் பங்கு இருந்ததை காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் பேசப்பட்டவை. இப்படி மறைமுகமாக பிரியங்காவின் பங்கு கட்சியில் இருந்த நிலையில், இப்போது நேரடியாக களத்தில் உபியை குறி வைத்து களம் இறங்கப்பட்டுள்ளார். 
மேலும் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி  மற்றும் சமாஜ் வாதி கட்சியோடு தான் இணக்கமாக இருப்பதாக குறிப்பிட்டாலும் இந்த இரு கட்சிகளும் காங்கிரஸை விட்டுவிட்டு தனித்து சென்றதில் ராகுல் காந்திக்கு உள்ளுக்குள் கடுமையான மனவருத்தம் என்றும் சொல்லப்படுகிறது. பிரியங்கா காந்தியை இறக்கிவிடுவதற்கான முக்கிய காரணம் பாஜக விற்கு மட்டுமல்ல இந்த இரு கட்சிக்கும் சரியான போட்டியை காங்கிரஸ் கொடுக்கவேண்டும் என்பதற்கு தான் என்கின்றனர்.  *தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் பிரியங்கா காந்தி பிப்ரவரி மாதம் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ’இந்திரா காந்தி நிலை’க்கு கொண்டு வரும் ஆர்வத்தில் இருக்கிறார் என்கின்றனர். நேரு இருந்த போது தந்தை  - மகள் கூட்டணி; இந்திரா காந்தி இருந்த போது அம்மா – மகன்கள் கூட்டணி ; பின்னர் இடையில் நரசிம்மராவ் சீத்தாராம் கேசரி டீம்மினால் சரிவு; பின்னர் சோனியா காந்தி தலைமையில் அம்மா – மகன் கூட்டணியில் இரு முறை ஆட்சி. இப்போது  மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஏற்படுத்த குடும்பத்தை ஒன்று திரட்டி முழு நேரு-காந்தி குடும்பம் ஒன்றாக திரளவேண்டும் என்கிற யோசனையை பிரியாங்கா காந்தி வைக்கிறார்* என்கின்றனர். குறிப்பாக தற்போது ராஜீவ் காந்தி குடும்பம்  சஞ்சய் காந்தி குடும்பம் பிரிந்து இருக்க பிரியாங்கா, சஞ்சய் காந்தி மகனும் தன்னுடைய ஒன்றுவிட்ட தம்பி வருண் காந்தியை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு வற்புறுத்தி வருகிறார். பிரியங்கா காந்தி மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியிலுள்ள சஞ்சய் காந்தி ஆட்களும் வருண் காந்தியை காங்கிரஸ் கட்சியில் வந்து சேருமாறு வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் தாயார் மேனகா காந்தி காங்கிரஸில் சேரும் வருண் காந்தியின் முயற்சிக்கு தடையாக இருக்கிறார்.  

ஆனால் வருண் காந்தி தற்போது தான் எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உபி யில் சுல்தான் பூரில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லையென்றால் பிரியங்காவின் அழைப்பின் படி காங்கிரஸில் சேர தயாராக இருக்கிறார் என்கின்றனர். இதன் மூலம் இந்திரா காந்தி,காந்தி சமயத்தில் இருந்தைப் போன்று ஒட்டு மொத்த  நேரு குடும்பம் ஒன்று இணைந்து அரசியலை கலக்கலாம் என்கிற எண்ணத்தில் பிரியங்கா திட்டமிடுகிறார்.  ஆனால் வருண் காந்தி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை வைத்து பா.ஜ.க பயமுறுத்தி வருகிறது என்கின்றனர்.  
இத்தோடு சோனியா காந்தியோடான பகைமையில் மேனகா காந்தி வருணை நேரு குடும்பத்தை கைகோர்க்க அனுமதிக்க மறுக்கிறார் என்கின்றனர்.

இதனால் வருண் காந்தியின் திட்டமும் தள்ளி போகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில்  உபியிலுள்ள தங்கள் குடும்பத்து தொகுதிகளை தக்க வைப்பதே முதல் பணியாக காங்கிரஸுக்கு உள்ளது. எனவே தான் உபியை விட்டு வெளியே போவதற்கும் பிரியங்காவிற்கு வாய்ப்பு கொடுக்கபடவில்லை. குறைந்தபட்சம் உபியில் உள்ள காங்கிரஸ் கேடர்களுக்கு உற்சாகம் கொடுக்கவே பிரியங்காவின் பொது செயலாளர் நியமனம் என்கின்றனர்.


ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க,தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து ஆட்சியின் அதிகாரம் விட்டு போகும்  சமயத்தில் பிரியங்காவின்  மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர். 


 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 3வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி!

9 hours ago

ராமாயணம் குறித்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சோனாக்சி!

23 hours ago

மகன், மனைவியுடன் சேர்ந்து, மருமகளை தாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி!

23 hours ago

அமெரிக்காவில் இன்று பிரம்மாண்டமான "ஹவுடி மோடி" நிகழ்ச்சி!

23 hours ago

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்!

1 day ago

உலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா!

1 day ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 day ago

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு!

1 day ago

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...!

1 day ago

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

1 day ago

சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்

1 day ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

1 day ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

1 day ago

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு!" - இஸ்ரோ தலைவர்

1 day ago

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...!

1 day ago

கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

1 day ago

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு!

1 day ago

சென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...!

1 day ago

பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு!

2 days ago

போராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்

2 days ago

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

2 days ago

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்

2 days ago

நிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்!

2 days ago

சென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு!

2 days ago

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

2 days ago

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

3 days ago

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்!

3 days ago

வாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

3 days ago

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்!

3 days ago

“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்!" - வானிலை மையம்

3 days ago

ராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

3 days ago

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

3 days ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

3 days ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

3 days ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

3 days ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

4 days ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

4 days ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

4 days ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

4 days ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

4 days ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

4 days ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

4 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

4 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

4 days ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

4 days ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

4 days ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

4 days ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

4 days ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

5 days ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

5 days ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

5 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

5 days ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

5 days ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

5 days ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

5 days ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

5 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

5 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

5 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

5 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

5 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

6 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

6 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

6 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

6 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

6 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

6 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

6 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

6 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

6 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

1 week ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

1 week ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

1 week ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

1 week ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

1 week ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

1 week ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

1 week ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

1 week ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

1 week ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

1 week ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

1 week ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

1 week ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

1 week ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

1 week ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

1 week ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

1 week ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

1 week ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

1 week ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

1 week ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

1 week ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

1 week ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

1 week ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை