Skip to main content

இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

March 06, 2019
Image

பிரனீஷ் ரங்கன்

கட்டுரையாளர்

Image

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததே இல்லை. 1971 போர், கார்கில் போர், மும்பை தாக்குதல், காஷ்மீர் தாக்குதல், நாடாளுமன்ற தாக்குதல் என்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியா சந்தித்து வரும் சோதனை உலகறிந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் போது, இந்தியா பதிலுக்கு எந்த தாக்குதலையும் நடத்தாது. தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எதிராக கண்டன அறிக்கையை வெளியிடும். பிறகு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும். பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து கொள்ள முயலும். தப்பித்தவறி எப்பொழுதேனும் பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தினால் அதன் பிறகு மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவார்கள். இப்படி தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தை அணுகி வந்தது.

ஒவ்வொரு முறை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்கும் போதும், தக்க பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்திய வீரனுள்ளும் பொங்கி எழும். ஆனால் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனென்றால், இந்தியா, பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினால், சர்வேதச நாடுகள் இந்தியாவை கண்டித்து விடுமோ? பொருளாதார தடை விதித்து விடுமோ? சர்வதேச நெருக்கடிக்கு ஆளாவோமோ? என்ற அச்சம் இந்திய அரசாங்கத்தின் மீது இருந்ததாக தான் தெரிகிறது.

1988-2016 வரை ஜம்மு - காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 6,257 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்த 28 ஆண்டுகளில் 23,103 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் 14,734 பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் தாக்குதல் நடத்தியதில், 19 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அனைத்து ராணுவ மரியாதைகளுடன் நடந்த வீரர்களின் இறுதி சடங்கில், ராணுவ வீரர் ஒருவரின் மகள் இட்ட கோஷமும் வீர வணக்கமும் அனைவரின் வீரத்தையும் தட்டி எழுப்பியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போமா என்ற கேள்வி அனைத்து இந்தியர்களிடையே பொங்கி எழுந்தது. இம்முறை பதிலடி கொடுத்தால் சர்வதேச நாடுகள் இந்தியாவை கண்டிக்காதா என்ற கேள்வியும் எழுந்தது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம், மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் சேர்ந்து நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனையை கூட அமெரிக்கா கண்டித்தது. பொருளாதார தடை விதிப்போம் எனவும் மிரட்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆனால் இம்முறை இந்தியா எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பதிலடி கொடுப்போம் என முடிவெடுத்தது. மிகவும் ரகசியமாக, துல்லியமாக திட்டமிட்டது. இந்திய ராணுவப்படை தயாரானது. இதற்கு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என பெயரிடப்பட்டது. Line of Control (L.O.C) எனப்படும் எல்லை கோட்டை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழித்துக் காட்டுவது என திட்டமிடப்பட்டது. இந்தியா இவ்வாறு திட்டமிடும் என்பதை பாகிஸ்தான் உள்பட எந்த நாடும் எதிர்பார்க்கவில்லை. உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதிலிருந்து 11 ஆம் நாள் அன்று நள்ளிரவில் இந்திய படையினர் எல்லைப்பகுதியை கடந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து, தீவிரவாத முகாம்களை சுட்டு தள்ளினர். திட்டமிட்டபடி தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திவிட்டு இந்திய படையில் உள்ள அனைவரும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக இந்தியா திரும்பினர். இது தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், அதாவது துல்லிய தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. தீவிரவாத முகாம்களை சுட்டுத் தள்ளியதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்தியாவின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்கு வல்லரசு நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்கும். ஆனால் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு எந்த நாடும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றது. சர்வதேச நாடுகளின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா? அந்த மாற்றம் பெரும்பாலான இந்திய மக்களிடம் இருந்து துவங்கியது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வீசிய ஒரு அலை தான் அதற்கு காரணம். அதன் பிறகு இந்தியாவிற்கு கிடைத்தார் ஒரு "உலகம் சுற்றும் வாலிபர்". அவர் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச தலைவர்கள் இடத்தில இந்தியா சந்தித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து எடுத்து உரைத்து வந்தார். சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற இது மட்டும் போதுமாக இருந்தது என்று நினைத்தால் அது சரியாக இருக்காது. உலகம் சுற்றும் வாலிபர் உலக நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஏற்படுத்திய நல்லுறவு இதற்கு அடுத்த முக்கிய காரணம். அந்நிய முதலீடுகள் இந்தியாவில் அதிகமானது. சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி மூலம் சர்வதேச உறவு மேலும் வலுப்பெற்றது. பிறகு, வெளிநாடுகளுடன் இனைந்து இந்திய ராணுவ பயிற்சி எடுக்கும் நடவடிக்கைகள் அதிகமானது. ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளுக்கு இந்தியா உதவி வந்தது. அவர்களின் ஆதரவு இந்தியாவின் பக்கம் முழுமையாக இருந்தது. இந்தியா வெளியிடும் அறிக்கைகளும், இந்தியா எடுக்கும் வளர்ச்சி திட்டங்களும் சர்வதேச அரங்கில் பேசப்பட்டது. இவை அனைத்தும் தான் சர்வதேச நாடுகள் இந்தியா பக்கம் நின்றதற்கு காரணமாக தெரிகிறது. 

அதன் பிறகு பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் சில ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் நிறைய ஏற்பட்டது இந்தியாவில். இதுவும் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து இருந்ததற்கு காரணமாக கூறப்பட்டது. 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் இன்றும் ஆறாதவடுவாக தமிழர்களின் மனதில் இருக்கிறது. இது நடந்தது 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள். 20 ஆண்டுகளுக்கு பிறகு இதே பிப்ரவரி 14 ஆம் நாள் 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மது என்ற தீவிரவாத அமைப்பு முற்றிலுமாக பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் இந்தியர்களை கொதிப்படைய செய்தது. 40 வீரர்களில் 2 தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் நன்றாகவே எதிர்பார்த்தது.

பாகிஸ்தான் எதிர்பார்த்தது சரிதான். இந்தியா மிகப்பெரிய தாக்குதல் திட்டம் ஒன்றை தீட்டியது. பிப்ரவரி 15 ஆம் நாள், இந்திய விமானப்படையின் தளபதி, தாக்குதல் குறித்த திட்டத்தை பாதுகாப்புத்துறையிடம் சமர்ப்பித்தார். பிப்ரவரி 20 ஆம் நாள், ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கும் பயிற்சி தளங்களும் தாக்குதல் தளங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதல் திட்டத்தின் ப்ளூ பிரிண்ட், பாதுகாப்புத்துறை அமைச்சரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவைகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் போது, பாகிஸ்தான் தனது வான்வழி மற்றும் ராணுவ பாதுகாப்பை வலுப்படுத்தி வந்தது. இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகிப்பக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். கண் அசைக்காமல் இந்தியாவின் தாக்குதலை எதிர்ப்பார்த்து காத்துகொண்டு இருந்தது பாகிஸ்தான். அந்த நிலையில் தான், பிப்ரவரி 26 ஆம் தேதி மாபெரும் தாக்குதலை இந்திய விமானப்படை மேற்கொண்டது. இதில் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாதிகளின் மொத்த கூடாரமும் காலியானது.  

மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. 12 போர் விமானங்கள் சென்று, அதிகாலை 03:30 மணி அளவில் மிகவும் துல்லியமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 1,000 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களை பாகிஸ்தானில் அமைந்திருந்த தீவிரவாத முகாமை தாக்கி அழித்தது. பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், தீவிரவாதிகளின் இருப்பிடம் அழிக்கப்பட்டது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலும், ஸ்ரீநகருக்கு 93 கி.மீ தொலைவிலும் பாலக்கோட் அமைந்திருக்கிறது. இந்திய விமான படையின் விமானங்களை கண்டவுடன் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் துரத்தி வந்தது. ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை கண்டு பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் திரும்பி சென்று விட்டது. 

மிராஜ் 2000 போர் விமானமானது இந்துஸ்தான் ஏரோநட்டிக்கல்ஸ் மற்றும் ரஃபேல் உற்பத்தி செய்யும் பிரெஞ்ச் நிறுவனத்தின் ஒரு கூட்டுத் தயாரிப்பாகும். இந்தியாவிடம் 50 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் மிராஜ் 2000 போர் விமானம் 1985-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. மிராஜ் 2000-க்கு வஜ்ரா என்ற பெயரை இந்திய அரசு சூட்டியுள்ளது. மிராஜ் என்றால் கானல் நீர் என்ற பொருளும் உண்டு. மிராஜ் 2000 அதிகபட்சம் 2,336 கிலோ மீட்டர் வேகத்திலும், 17,060 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியது. ஒரே நேரத்தில் 13,800 கிலோ வெடி பொருட்களை இந்த விமானத்தில் எடுத்துச் சென்று எதிரிகளைத் தெறிக்கவிட முடியும். சிங்கிள் எஞ்சின் கொண்ட 4வது தலைமுறை போர் விமானங்களில் ஒன்று மிராஜ் 2000. இந்த விமானம் முதன் முதலாக 1972-ல் உருவாக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு இதில் முக்கியத் தொழில்நுட்பங்களையும்  இணைத்துள்ளனர். 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் மிராஜ் 2000 போர் விமானம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானத்தை 2030-ம் ஆண்டு வரை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த துல்லிய வான் வழி தாக்குதலை கண்டு பாகிஸ்தான் அரசு மிரண்டு போனது. இந்தியா நடத்திய இந்த வான் வழி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே துல்லியமாக குறி வைத்து தாக்கப்பட்டது. இதில் பொது மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது. பாகிஸ்தானின் முடிவிற்கு சீனா ஆதரவு அளிக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் சீனாவோ பாகிஸ்தான் எதுவும் பதிலுக்கு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானை அறிவுறித்தியது. அந்த அளவிற்கு இன்று இந்தியாவின் சர்வதேச அரசியல் வளர்ந்து இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.  இந்தியா நடத்திய தாக்குதலோ தீவிரவாதிகளுக்கு எதிராக. ஆனால் பாகிஸ்தானோ இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த முடிவெடுத்தது. இதனால் தான் பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு நாடாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. 

இந்திய ராணுவ நிலைகளை குண்டுவீசி தாக்க பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சி மேற்கொண்டன. அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன. இதில் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்தினார் இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன். மிக் 21 போர் விமானம் ரஷ்யா நாட்டிடமிருந்து இந்தியா அரை நூற்றாண்டுக்கு முன்பு வாங்கியது. பாகிஸ்தான் எப்.16 விமானத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது.  மிக் 21 போர் விமானத்தில் சென்று விங் கமாண்டர் அபிநந்தன், எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பது எப்படி இருக்கிறது என்றால், டி.வி.எஸ் 50 யில் துரத்தி சென்று சென்று பெரிய புல்லட் வண்டியை அடித்து சாய்த்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது. இதில் பாராட்ட வேண்டியது விங் கமாண்டர் அபிநந்தனின் போர் விமானத்தை இயக்கும் திறமை தான். வீரத் தமிழர் அல்லவா அபிநந்தன், அப்படி தான் இருக்க வேண்டும். எப்.16 விமானத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவுடன் பயன்பாட்டு ஒப்பந்தம் செய்துள்ளது பாகிஸ்தான். இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது ஒரு பக்கம் இருக்க, ஆதிகாலத்து ரஷ்ய போர் விமானம் மிக் 21 ஆல் அமெரிக்காவின் நவீன எப் 16 போர் விமானம் வீழ்த்தப்பட்டிருப்பது அமெரிக்காவை முகம் சுழிக்க வைத்துள்ளது.   

இதையடுத்து பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, போர் வீரர்களை எதிரி நாடுகள் சிறை பிடித்தால், அவரை விசாரக்க கூடாது. அவர் பற்றிய புகைப்படம், வீடியோ ஆகியவை வெளியிடக்கூடாது. ஆனால், இவை அனைத்தையும் மீறியது பாகிஸ்தான். விங் கமாண்டர் அபிநந்தனை விசாரித்து அவரின் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டது பாகிஸ்தான். எதிரி நாட்டின் பிடியில், ஆயுதம் ஏந்திய எதிரிகளின் முன்பு தனது தாய்நாட்டின் புகழையும் வீரத்தையும் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை விங் கமாண்டர் அபிநந்தன். 

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 
செறினும் சீர்குன்றல் இலர்

என்ற குறளுக்கு ஏற்ப எதிரி நாட்டில் தனது குரலை சற்றும் தாழ்த்தாமல் இருந்தார் விங் கமாண்டர் அபிநந்தன். பிறகு, சர்வதேச நாடுகளின் அரசியல் அழுத்தத்தால், பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது தாய்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் அபிநந்தன். இவை அனைத்திற்கும் பின்னால், இந்திய பாதுகாப்பின் மூலையாக செயல்பட்டு கொண்டிருப்பவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தான். இந்தியா இதோடு நின்று விடாது. பாதுகாப்புத்துறை உள்பட சர்வதேச பொருளாதாரம், சர்வதேச அரசியல் என்று அனைத்திலும் வளரும். இந்தியா ஒரு பலசாலி நாடாக உலக அரங்கில் இன்று பார்க்கப்படுகிறது. சர்வதேச நாடுகள் இந்தியாவின் பக்கம் இன்று நிற்பதற்கு இந்தியாவின் அரசியல் ராஜதந்திரம் ஒரு மிக பெரிய காரணம். விங் கமாண்டர் அபிநந்தனை போல் நெஞ்சம் நிமிர்த்தி, குரலை உயர்த்தி நான் ஒரு இந்தியன் என்று எதிரி நாட்டில் துப்பாக்கி பிடியில் இருக்கும் போது கூட சொல்லும் அளவிற்கு தான் இந்தியா இன்று வளர்ந்துள்ளது. இந்தியனாக அனைவரும் பெருமை பட வேண்டிய தருணமே இது. இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது!

4 hours ago

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று தொடக்கம்!

4 hours ago

பஹ்ரைன் நிகழ்ச்சியில் தமிழ் பேசி அசத்திய பிரதமர் மோடி!

4 hours ago

இன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல்!

4 hours ago

தமிழகத்தின் முதல் நிதிஅமைச்சர் சண்முகம் செட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்: ஓபிஎஸ்

1 day ago

மூன்றரை மணி நேரத்தில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இந்திய மருத்துவர்கள் சாதனை!

1 day ago

காஷ்மீரின் நிலைமையை ஆராய சென்ற எதிர்க்கட்சித்தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!

1 day ago

சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து!

1 day ago

முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு!

1 day ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்!

1 day ago

"எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்!" - அருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி

1 day ago

“என்னை வழிநடத்திவந்த குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டேன்!” - அமித்ஷா

1 day ago

எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் - பிரதமர் மோடி இரங்கல்

1 day ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது...!

1 day ago

தமிழகத்தில் ஊடுருவி உள்ள தீவிரவாதிகள் தாமாக வெளியேற வேண்டும்: அமைச்சர் அன்பழகன்

1 day ago

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440 ஆக விற்பனை...!

2 days ago

விவசாயிகளுக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு 600 ரூபாய்: முதல்வர் பழனிசாமி

2 days ago

உ.பி: கால்நடை திருட வந்ததாகக் கூறி இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.

2 days ago

யுனிசெப் நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா நீடிப்பார்: ஐநா

2 days ago

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: விடிய விடிய காவல்துறையினர் சோதனை.

2 days ago

பங்குச் சந்தைகளில் முதலீடுகள் செய்வதற்கு ஊக்கம் தரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2 days ago

அரசு நிறுவனங்கள் புதிய வாகங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: நிர்மலா சீதாராமன்

2 days ago

வட்டி குறைப்பு பலன்களை இனி வங்கிகள் மக்களுக்கு நேரடியாக வழங்கும்: நிர்மலா சீதாராமன்

2 days ago

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

2 days ago

பங்குச்சந்தையில் குறுகிய, நெடுங்கால முதலீடுகள் மீதான மூலதன உபரி வரி ரத்து: நிர்மலா சீதாராமன்

2 days ago

ஆதார் மூலம் தகவல்களை பெற்று சிறு, குறு நிறுவனங்கள் கடன் வழங்கலாம்: நிர்மலா சீதாராமன்

2 days ago

தொழில் நிறுவனங்களை இணைக்கவும், வாங்கவும் எளிதில் அனுமதி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

2 days ago

பொருளாதார சீர்திருத்தம்தான் எங்களின் முதல் கொள்கை: நிர்மலா சீதாராமன்

2 days ago

யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி பேச்சு!

2 days ago

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...!

2 days ago

கோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...!

3 days ago

ப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

3 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..!

3 days ago

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ

3 days ago

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

3 days ago

“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்!” - மு.க.ஸ்டாலின்

3 days ago

நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....!

3 days ago

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...!

3 days ago

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...!

4 days ago

அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி !

4 days ago

ப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்!

4 days ago

விசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...!

4 days ago

ப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்

5 days ago

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு!

5 days ago

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்!

5 days ago

ப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்!

5 days ago

விரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா? : தமிழிசை

5 days ago

குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

5 days ago

ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்!

5 days ago

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு!

5 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

5 days ago

7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...!

5 days ago

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

6 days ago

ஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா?; இன்று தீர்ப்பு...!

6 days ago

ராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்!

6 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

6 days ago

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

6 days ago

"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

6 days ago

சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....!

1 week ago

துறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....!

1 week ago

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...

1 week ago

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....!

1 week ago

ஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

1 week ago

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

1 week ago

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...!

1 week ago

பூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

1 week ago

நாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...!

1 week ago

திருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...!

1 week ago

அத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...!

1 week ago

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்

1 week ago

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

1 week ago

"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்!" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

1 week ago

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை

1 week ago

தமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்

1 week ago

கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...!

1 week ago

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்!

1 week ago

"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

1 week ago

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

1 week ago

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...!

1 week ago

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...!

1 week ago

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....!

1 week ago

முன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....

1 week ago

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

1 week ago

காஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...!

1 week ago

அண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்

1 week ago

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

1 week ago

21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...!

1 week ago

செங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...!

1 week ago

"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!

1 week ago

நள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்!

1 week ago

நீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்

1 week ago

வேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்

1 week ago

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

1 week ago

முன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்

1 week ago

மேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

1 week ago

“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி

1 week ago

“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்!” - முதல்வர் பழனிசாமி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை