Skip to main content

இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகளின் ஆதிக்கம்!

January 08, 2019
Image

கஜமுகன்

கட்டுரையாளர், சமூக செயற்பாட்டாளர்

Image

பாராளுமன்ற நெருக்கடி, அரசியல் சாசன (யாப்பு) நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை.
 
சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை அதிகரித்தும், தனியார் மயமாக்கலை அதிகரித்துமே தமது ஆட்சியை மேற்கொள்கின்றன. அரசியல் பொருளாதார ரீதியாக எந்தக் கொள்கையின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வது என்பதில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக்கட்சிக்கும் ஒரே நிலைப்பாடுதான் உள்ளது. அதாவது கடன், மற்றும் தனியார் மயப்படுத்தலை அதிகரித்தலே அவற்றின் பிரதான கொள்கைகளாகும். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளிலிலிருந்து கடனைப் பெற்று நாட்டை ஆட்சி செய்தலே இரு கட்சிகளினதும் அடிப்படைப் பொருளாதாரக்  கொள்கையாக உள்ளது. யாரிடம் கடனைப் பெற்றுக்கொள்வது, வாங்கியக் கடனை எவ்வாறு நிர்வகிப்பது என்பதிலேயே இரு கட்சிகளும் மாற்றுக்கருத்து உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவதன் ஊடாக தமது நிலைப்பாடும் அதுதான் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படுத்துகின்றது. ஆகவே கடன் மற்றும் தனியார் மயப்படுத்தலை அதிகரிக்க வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் மாற்றுக்கருத்தில்லை என்பது தெளிவாகின்றது.
 
ஐ.எம்.எப் (IMF) மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியானது அவர்களிடம் கடனைப் பெறுவதிலும், அவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவதையுமே விரும்புகின்றது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருட பட்ஜெட்டையும், மேற்குலக நாடுகளின் நலன்கருதி இயங்கும் ஐ.எம்.எப்-இன் ஆதரவுடனேயே ஐக்கிய தேசியக் கட்சியானது தாக்கல் செய்தது. அதில் ஐ.எம்.எப்-இன் கோரிக்கைகளான தனியார் மயப்படுத்தல், மக்களுக்கான இலவச சேவைகளைக் குறைத்தல் போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே சைட்டத்தினையும் (SAITM) கடந்த வருடம் தனியார் மயப்படுத்த முனைந்தது ஐக்கிய தேசியக் கட்சி. எனினும் மக்களின் கடும் எதிர்ப்பால் பின்னர் அது கைவிடப்பட்டது யாவரும் அறிந்ததே.  

மறுபுறத்தில், மகிந்த ராஜபக்சே சீனாவிடமிருந்து கடன் வாங்குவதையே விரும்புகிறார். இலங்கையில் யுத்தம் நடைபெற்றபொழுது சீன அரசானது அதிகளவு நிதியை மகிந்த அரசுக்கு அளித்தமை யாவரும் அறிந்ததே. அதன் பிரதிபலனாகவே அம்பாந்தோட்டை துறைமுகம், காலி பிரதேசங்கள் ஏற்கனவே சீனாவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. 2௦௦5-இல் இலங்கையின் அந்நிய நேரடி முதலீடுகளில், சீனாவின் முதலீடானது வெறும் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் குறைவானது ஆகும். ஆனால் 2௦14-இல் சீனாவின் முதலீடு 400 மில்லியன் டாலர்கள் ஆகும். மகிந்த ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தொடங்கியிருந்தது சீனா. தனது புதிய பட்டுப் பாதைக்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்பும் சீனா, அதனை தமது நலன்விரும்பியான மகிந்தவின் ஊடாக சாத்தியப்படுத்த முனைகிறது.
 
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்தியாவானது தனது ஆதிக்கத்தையும் இலங்கை அரசியலில் செலுத்துகிறது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக மேற்குலக நாடுகளும், மகிந்தவின் ஊடாக சீனாவும், தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடாக இந்தியாவும் தமக்கிடையிலான ஒரு அதிகாரப்போட்டியினை இலங்கை மண்ணில் நிகழ்த்துகின்றன. அதிலும் குறிப்பாக கடன் வழங்குகிறோம் என்னும் போர்வையில் இலங்கையில் புகுந்த சீனாவும், மேற்குலக நாடுகளும் தமது பலப்பரீட்சையை நிகழ்த்தும் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கையினைப் பாவித்து வருகின்றன. இலங்கையின் பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்நாடுகள் தமது பலத்தை இலங்கையில் நிறுவவே முனைகின்றன.

ஒரு புறம், மகிந்த பிரதமரானதும் சீனத் தூதுவர் மகிந்தவின் கொழும்பு  வாசத்தலத்திற்கு நேரடியாகவேச் சென்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மறுபுறம் அமெரிக்க ராஜாங்க செயலாளர்கள் மீண்டும் ரணிலை பிரதமராக்க வேண்டுமெனக் கோரி, மைத்திரி அரசின் மீது தமது அழுத்தத்தை பிரயோகித்தனர். தமது சார்புடையவர்களை அதிகாரத்தில் நிறுத்தவே சீனாவும் அமெரிக்காவும் விரும்புகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகப் புரிகிறது.
 
இவை அனைத்தும் அரசியல் களத்தின் மேல் தளத்தில் இடம்பெறும் பிரச்சனைகள்,  மறுபுறத்தில் மக்களின் எதிர்பார்ப்பானது வேறு வடிவத்தில்  உள்ளது. பாராளுமன்றத்தில் யார் அதிக ஆசனங்களை வைத்திருந்தாலும் அல்லது யார் பிரதமராக வந்தாலும் மக்களுக்கு அது பற்றிக் கவலையில்லை. பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், தமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தமது வாழ்வாதரப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும்  உள்ளது.

ஆனால், மக்களின் இத்தகைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து மக்கள் புதிய திசையை நோக்கி நகருகின்றனர். இதன் விளைவாகவே, ஆட்சியில் பங்கெடுக்காத போதிலும், கடந்த காலத் தேர்தல்களில் கஜேந்திரகுமாருக்கும், மகிந்தவுக்கும் அதிகளவான வாக்குகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாதபொழுது ஒரு சில மக்கள் தொகுதியினர் இன ரீதியாக, பிரதேச ரீதியாக பிளவுபட்டு மதவாத இனவாத பிற்போக்கு அரசியலை நோக்கி தள்ளப்படுவதும் நிகழ்வதுண்டு. இதனால் மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றது. இந்த பிளவையே அரசியல் கட்சிகள் தமது வாக்குவேட்டைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. 

சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும் இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரமானது அபார வளர்ச்சி அடையும் என்றே கருதப்பட்டது. எதிர்பார்த்தது போல் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஓரளவுக்கு அதிகரித்த போதிலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கவில்லை. ஆகவே வீழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைப்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுற்றுலாத் துறையிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டும் போதுமானாதாக இருக்கவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்தக் கட்சியும் சரியான பொருளாதாரக் கொள்கையினைக் கொண்டிருக்கவில்லை. இதனால் கொந்தளிக்கும் மக்களை வேறு பக்கம் நோக்கி திருப்புதலை அதாவது இனவாதம், மதவாதம், அடிப்படைவாதத்தை நோக்கி திருப்பும் செயலையே இரு பெரும் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. 

எக்கட்சியும் மக்கள் நலனை முன்வைத்துத் தமது அரசியலை முன்னெடுப்பதில்லை. மாறாக ஒவ்வொரு அரசியல் தலைமையும் வாக்குகளைப் பெறுவதற்காக தத்தமக்கென ஒவ்வொரு உத்திகளைக் கையாளுகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி அதன் மூலம் தனது வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்ளுதலே மகிந்தவின் அரசியலாகக் காணப்படுகின்றது. ‘’மகிந்தவின் எழுச்சியை தடுக்க வேண்டும் அதற்கு நாங்கள் பலமாக இருக்கவேண்டும் ஆகவே எங்களுக்கு வாக்கு போடுங்கள்’’ என மகிந்த மீதான பயத்தைக் காட்டி தமிழ் மக்கள் மத்தியில்  தமது வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தமிழ் சிங்கள முஸ்லிம் என அனைத்து இன மக்களிடமும் தனது வாலை ஆட்டி அதன் மூலம் அனைத்து இன மக்களிடமும் சிறிது சிறிது வாக்குகளைப் பெற்று, ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்களைக் கைப்பற்றுதலே ரணிலின் அரசியல் ராஜதந்திரமாகக் காணப்படுகின்றது.
 
எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளினதும் பொதுக்கொள்கையாகக் காணப்படுகின்றதே தவிர, மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகின்றது. அண்மையில் பாராளுமன்ற நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் மாறிமாறி தமது ஆதரவாளர்களை வீதிக்கு இறக்கி போராட்டங்களை மேற்கொண்டதைப் பார்த்தோம். தமது பிரச்சனைகளுக்காக மக்களை வீதிக்கு அழைக்கும் இக்கட்சிகள், மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை வீதிக்கு அழைப்பதில்லை.

மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து, மக்களை ஒன்றிணைத்து மக்கள் போராட்டங்களை, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க ஒரு கட்சியும் தயாராகவில்லை. மாறாக மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் விளையும் இனவாத மதவாத அரசியலையே முன்னெடுக்க விரும்புகின்றனர். இது அரசியல் கட்சிகளின் போதாமையினைக் காட்டுகின்றது. இதனைத் தாண்டிச் செல்ல அவர்கள் முயற்சிப்பதில்லை.
 
ஆகவே, இந்திய-சீன அல்லது அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகளின்  நலனுக்கு ஏற்ப இயங்கும் கட்சிகளின் பின்னால் செல்லாமல் மக்கள் முற்போக்கான அரசியலை நோக்கி நகர வேண்டும். மக்கள் திரட்சியானது சரியான அதிகாரத்தை நோக்கி, மக்கள் சார்பான கொள்கை கொண்ட அமைப்பை நோக்கி நகர வேண்டும். அதிகாரம் என்பது பாராளுமன்றத்திலோ அல்லது யாப்பிலோ இல்லை. மாறாக அதிகாரம் என்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனை மக்கள் உணரும்போதுதான் அனைத்து இன மக்களுக்கும் தேவையான விடுதலை எட்டப்படும்.
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

1 hour ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

3 hours ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

6 hours ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

6 hours ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

7 hours ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

11 hours ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

11 hours ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

13 hours ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

13 hours ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

16 hours ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

16 hours ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

16 hours ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

16 hours ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

1 day ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

1 day ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

1 day ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

1 day ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

1 day ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 day ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

1 day ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

1 day ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

1 day ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

1 day ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

1 day ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

1 day ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

2 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

2 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

2 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

2 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

2 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

2 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

2 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

2 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

2 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

3 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

3 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

3 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

3 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

3 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

3 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

3 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

4 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

4 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

4 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

4 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

4 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

4 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

4 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

4 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

4 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

4 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

4 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

4 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

4 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

5 days ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

5 days ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

5 days ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

5 days ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

5 days ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

5 days ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

5 days ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

5 days ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

5 days ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

5 days ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

5 days ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

6 days ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

6 days ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

6 days ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

6 days ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

6 days ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

6 days ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

6 days ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

6 days ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

6 days ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

6 days ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

6 days ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

1 week ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

1 week ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

1 week ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

1 week ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

1 week ago

இந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

1 week ago

வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்

1 week ago

4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்!

1 week ago

வெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

1 week ago

தென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை!

1 week ago

மதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து!

1 week ago

திருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

1 week ago

கடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்!

1 week ago

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.

1 week ago

அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு!

1 week ago

திருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

1 week ago

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது!

1 week ago

தமிழ் திரைப்பட நடிகர் ராஜசேகர் காலமானார் !

1 week ago

தெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை