Skip to main content

ஹிந்தி கட்சி, வட இந்தியக் கட்சி என்ற அடைமொழிகளை தூக்கி எறிந்த மோடி – அமித் ஷா!

May 31, 2019
Image

எஸ்.ஜி.சூர்யா

அரசியல் விமர்சகர்

Image

பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே ஹிந்தி பேசும் மக்களின் கட்சியாகவே அறியப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் 29 மாநிலங்களில் 27 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.


 ஹிந்தி பேசும் 10 மாநிலங்களில் 225 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. ஹிந்தி பேசாத மற்ற இடங்களில் 150 தொகுதிகள் அதாவது மொத்தம் வென்ற தொகுதிகளில் 42% இடங்களை வென்று நாடு முழுவதும் மொத்தம் பா.ஜ.க கூட்டணி 353 இடங்களை பிடித்துள்ளது. இதில் பா.ஜ.க மட்டும் தனியே வெற்றி கண்டது 303 தொகுதிகள் ஆகும்.


ஹிந்தி பேசும் 10 மாநிலங்களில் வென்ற தொகுதிகளாவன: 

பீகார் (39/40), சத்தீஸ்கர் (9/11), ஹரியானா (10/10), ராஜஸ்தான் (25/25), உத்தரப்பிரதேசம் (64/80), உத்தரகாண்ட் (5/5), டெல்லி (7/7), இமாச்சலப் பிரதேசம் (4-4), ஜார்கண்ட் (12/14), மத்திய பிரதேசம் (28/29).


தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இதர 150 இடங்களில் மேற்கு வங்காளம் (18/42), அருணாசல பிரதேசம் (2/2), அசாம் (9/14), சண்டிகர் (1/1), கோவா (1), குஜராத் (26/26), ஒடிசா (8/21), ஜம்மு காஷ்மீர் (3/6), கர்நாடகா (26/28), மகாராஷ்டிரா (41/48), மணிப்பூர் (1/2), நாகாலாந்து 1/1 (தேசியவாத ஜனநாயக வளர்ச்சி  கட்சி), பஞ்சாப் (4/13), சிக்கிம் (1/1, சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா), தமிழ்நாடு (1/38 அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்), தெலங்கானா (4/17), திரிபுரா 2/2).

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வென்றது 91 இடங்களை மட்டுமே, இது 2014-ஆம் ஆண்டில் அந்த கூட்டணி பெற்ற 60 இடங்களை காட்டிலும் இப்போது பரவாயில்லை. 
அடுத்ததாக மற்ற எதிர் கட்சிகள் மேற்கு வங்கம், ஓடிஸா, உ.பி, ஆகிய எல்லா இடங்களையும் சேர்த்து அவர்களால் 113 இடங்களுக்கும் மேல் தாண்ட முடியவில்லை.
 இது ஒரு மாபெரும் வெற்றி.


மொத்தத்தில், இது மிகப் பெரிய வெற்றியாகும். 2014-ஆம் ஆண்டின் மோசடிகள் மற்றும் ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அளித்த வெற்றி இது அல்ல. இந்த வெற்றி பா.ஜ.க-வின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்திறனுக்கு ஆதரவாக மக்கள் அளித்த வெற்றி, பா.ஜ.க தலைவர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் வெற்றி என்பதை உறுதிப்படுத்துகிறது. தற்போதைய சகாப்தத்தின் செல்வாக்கு மிக்க அரசியல் சக்தி பா.ஜ.க தான் என்பதை நிரூபித்துள்ளது.


பா.ஜ.க கடந்த 30 ஆண்டுகளில், 2014-ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் முதல் பெரும்பான்மையை பெற்ற போதிலும், அதன் பெரும்பாலான இடங்கள் வட இந்திய பகுதிகளில் இருந்து தான் வந்தன. ஆனால் இப்போது 2019-ல் பெற்ற வெற்றி கிட்டத்தட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருக்கும் பிரம்மாண்ட வெற்றியாகும். 
இதன்மூலம், ஓன்று மட்டும் நிச்சயம். இனி பா.ஜ.க-வை ஹிந்தி பிரதேச கட்சி என யாரும் சொல்லி விட முடியாது. அது அகன்ற நிலையில் அனைத்து இந்தியர்களின் நெஞ்சத்தில் குடி கொண்ட கட்சியாக மாறியுள்ளது. 
 


புதிய பிரதேசங்கள் 
பா.ஜ.க நரேந்திர மோடி என்கிற ஒரு வலுவான, திறமையுள்ள ஒருவரை அடையாளம் காட்டி, பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் இல்லாத இடங்களில் கூட தனது செல்வாக்கை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியங்களில் நேரடியாகவும், சில கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் கூட்டு சேர்ந்தும் ஆட்சி அமைத்துள்ளது இதற்கு சான்றுகளாகும். கிழக்கிந்திய பகுதிகளில் மேற்கு வங்கம், ஒரிசா மாநிலங்களில் அதிகப்படியான லோக்சபா தொகுதிகளை வென்றதன் மூலம் பா.ஜ.க அங்குள்ள மாநில ஆட்சியை பிடிப்பப்பதற்கும் தன்னை தகுதியாக்கிக் கொண்டுள்ளதை அறியலாம். இது கிழக்குப் பகுதிகளில் பாஜவுக்கு கிடைத்த புதிய செல்வாக்காகும். 


தெலங்கானாவிலும் கூட பா.ஜ.க வலுவாக கால் ஊன்றி வருவதை அங்கு கிடைத்த நான்கு லோக்சபா தொகுதிகளை கொண்டு அறியலாம்.

இந்தியாவின் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, கிழக்கு பகுதிகளில் தன் பலத்தையும், புதிய பலத்தையும் காட்டிய பா.ஜ.க, தென்னிந்திய பகுதிகளில் தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக 6 தொகுதிகளில் முன்னணியில் இருந்து கடைசியாக நான்கு இடங்களை அந்த பிரதேசத்தின் முடி சூடா மன்னனாக இருந்த சந்திரசேகர ராவிடமிருந்து பறித்தது. 18% வாக்கு வங்கியையும் அங்கு உருவாக்கியுள்ளது. 

கர்நாடகத்திலும் பா.ஜ.க இரட்டை சாதனை புரிந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு அங்கு 17 தொகுதிகளை பிடித்த பா.ஜ.க, தற்போது அங்கு மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களை கைப்பற்றி கர்நாடகத்தில் தன் தனிப்பட்ட ஆளுமையை நிலைநாட்டியுள்ளது. மாண்டியா தொகுதியில் பா.ஜ.க ஆதரித்த நடிகை சுமலதா வென்றதன் மூலம் 26 தொகுதிகளை வென்றுள்ளது என்றுக் கூட கூறலாம்.


கேரளாவில் பா.ஜ.க ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை என்றாலும் அங்குள்ள முதன்மை கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் 12% சதவீத வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பல இடங்களில் பிடித்து அங்கு தனது எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது என கூறலாம். 


துரதிஷ்டவசமாக ஆந்திரா, தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை என்றாலும், பா.ஜ.க தனித்தன்மையுடன் இங்கு கால் பதிக்கும் முயற்சிகளை எடுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 


இனி ஹிந்தியன் கட்சியல்ல இந்தியன் கட்சிதான்.. 


பா.ஜ.க பெற்றிருக்கும் இந்த அபாரமான குறிப்பிடத்தக்க வெற்றியால் ஒரு காலத்தில் ஹிந்திகாரர்கள் என்று பெயரிடப்பட்ட  கட்சி தற்போது ஒவ்வொரு இந்தியனின் கட்சியாக மாறியுள்ளது. ஒரிசா, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க பயன்படுத்திய இதே சூத்திரங்களை தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் பயன்படுத்தும்போது நிச்சயம் இந்த வெற்றி நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவி நிற்கும்.
 இந்த வெற்றி மூலம் ராஜ்ய சபா இடங்களை அதிக பெரும்பான்மையுடன் பெரும் வல்லமையை பா.ஜ.க பெற்றிருப்பதால் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை உருவாக்கவும், திருத்தங்களை செய்யவும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 
இந்தியா தற்போது சரியான திசையில் பயணிக்கிறது என்பதை இனி வரும் காலங்களில் உணரலாம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

1 hour ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

1 hour ago

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!

1 hour ago

ரஜினியால் பிற கட்சிகளுக்கே பாதிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்

1 hour ago

இடைத்தேர்தல் : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை!

1 hour ago

BSNL 4-ஜி சேவைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல்!

1 hour ago

“அடுத்து வரும் 2 தினங்களுக்கு மழையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்!” - சென்னை வானிலை ஆய்வு மையம்

9 hours ago

குடிமராமத்து பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: முதல்வர் பழனிசாமி

14 hours ago

கழிவுகளை கையால் அகற்றும் ஊழியர்கள்; கோவை மாநகராட்சியில் அரங்கேறிய அவலம்!

14 hours ago

பள்ளி மாணவர்களை அகழாய்வு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு: முதல்வர் பழனிசாமி

14 hours ago

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!

1 day ago

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி!

1 day ago

“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை!" - கடம்பூர் ராஜூ

1 day ago

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

1 day ago

தீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்!

1 day ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்!

1 day ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

1 day ago

நீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

1 day ago

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

1 day ago

நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

1 day ago

கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

1 day ago

பிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

2 days ago

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...!

2 days ago

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்!

3 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

3 days ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

4 days ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

3 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

4 days ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

3 days ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

3 days ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

4 days ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

3 days ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

5 days ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

5 days ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

4 days ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

5 days ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

5 days ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

4 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

5 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

6 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

6 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

5 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

5 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

6 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

6 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

6 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

5 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

5 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

5 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

6 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

6 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

6 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

1 week ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

1 week ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

1 week ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 week ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

1 week ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

1 week ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 week ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

1 week ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

1 week ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

1 week ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

1 week ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

1 week ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

1 week ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

1 week ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

1 week ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

1 week ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

1 week ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

1 week ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை