Skip to main content

எங்கே போனது தீபாவளி கொண்டாட்டங்கள்?

October 27, 2019
Image

கிருஷ்ண குமார்

கட்டுரையாளர்

Image

தீபாவளிக்கு இன்னும் மொத்தமாக 4 நாட்களே மீதம் இருக்கின்றன. ஆனால், தீபாவளிக்கு இருக்கும் எந்த பரபரப்பையும் காணும்.

பொருளாதார மந்த நிலை, தொழில்களில் ஏற்பட்ட சுணக்கம் வேலையின்மை என்பது போன்ற பல்வேறு காரணங்களை சொல்லி, வியாபாரம் ஏதுமில்லாமல் துணிக்கடைகள், பட்டாசுக் கடைகள் காத்துவாங்குவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தீபாவளி கொண்டாடுவதில் இருக்கும் சுணக்கம் இந்த ஆண்டு திடீரென்றெல்லாம் ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்கிறது. கொண்டாட்ட மனநிலை குறைந்துவிட்டதோ அல்லது தலைமுறை இடைவெளியோ ஏதோ ஒரு காரணமாக கூட இருக்கலாம். ஆனால் 90ஸ் கிட்ஸ்களின் தீபாவளி நிச்சயம் இப்படி இல்லை.

90ஸ் கிட்ஸ் தீபாவளி: 

தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று கவுண்டவுன் வைத்து எண்ணிய காலம் ஒன்று இருந்தது. 90ஸ் கிட்ஸ்களின் காலம் தான். வரவிருக்கும் ஆண்டின் காலண்டர் கைக்கு வந்ததும் முதலில் தேடுவது அனேகமாக தீபாவளி எப்போது என்பதாக தான் இருக்கும். தமிழர்கள் பொதுவாகவே கொண்டாட்டங்களை விரும்புபவர்கள் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீபாவளி மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பொங்கல், சித்திரைத் திருநாள், கார்த்திகை என்று பண்டிகைகள் வரிசை கட்டி இருந்தாலும் தீபாவளி மீதான ஈர்ப்பு அதிகம் இருப்பதற்கு காரணம் அது கொண்டாடப்படும் விதம் என்றே சொல்லலாம்.

தீபாவளிக்கு இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கிறது என்ற கவுண்டவுன் குறைந்து, நாளுக்கு மாறும்போது பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எப்போது புதிய உடை வாங்குவது, எவ்வளவுக்கு பட்டாசு வாங்குவது, என்னென்ன பலகாரம் செய்வார்கள் என்ற எண்ணம் தான் ஓடும். பிஜிலி வெடி, ஓலை பட்டாசு பெட்டிக்கடைகளில் விற்பனைக்கு வரும் நாளிலிருந்தே தீபாவளி தொடங்கி விடும். 10 ரூபாய்க்கு ஒரு பிஜிலி வெடி பாக்கெட்டை வாங்கினால் ஒரு நாள் முழுவதும் வெடிக்கலாம். மாலையில் கொஞ்சம் வெடி, காலையில் எழுந்து பள்ளிக்குப் போகும் முன் கொஞ்சம் வெடி, திரும்ப பள்ளி விட்டு வந்ததும் கொஞ்சம் வெடி என்று பார்ட் பார்ட்டாக பிரித்து வெடிப்பார்கள். யானை வெடி, லட்சுமி வெடி, வெங்காய வெடி எல்லாம் கொஞ்சம் பெரியவர்களின் சமாச்சாரம். விலையும் கொஞ்சம் அதிகம் என்பதால், பிஜிலி வெடியின் சத்தத்திற்கிடையே எப்போதாவது பெரிய வெடிகளின் சத்தம் கேட்கும். சிறுவர்கள் பொட்டுவெடியை வாங்கி கல்லால் நசுக்கி வெடிப்பது தொடங்கி, நாள் ஆக ஆக ரோல் கேப்புக்கு மாறும். 

‘எப்படா தீபாவளி வரும் என்ற ஏக்கம்’

பொங்கல் பண்டிகைக்கு புதிய உடை எடுத்தாலும், தீபாவளிக்கு புது உடை எடுப்பதில் தான் ஆர்வம் இருக்கும். இப்போது, தீபாவளிக்கு முதல் நாள் வரை எடுக்கிறார்கள். ஆனால், தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் போதே புதிய உடைகளை எடுத்துவைத்து, தினமும் ஒரு முறை எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் வைக்கும் போது, எப்படா தீபாவளி வரும் என்ற ஏக்கத்தை இப்போதிருக்கும் குழந்தைகள் அனுபவித்திருப்பார்களா என்று தெரியாது. ஆனால், அந்த உடையை போடப்போகும் நாளுக்காக ஆர்வத்தோடு காத்திருந்ததும் ஒரு சுகமான அனுபவமே.

தீபாவளிக்கு முதல் நாள் கடைத்தெருவிற்கு போய் எதுவுமே வாங்காவிட்டாலும், நள்ளிரவு வரை கட்டுக்கடங்காத தீபாவளி கூட்டத்தில் நன்றாக சுற்றிவிட்டு ஹோட்டல்களில் பரோட்டா வாங்கித் தின்றுவிட்டு வீடுவந்து சேரும் சந்தோசத்தை, கூட்டத்தைப் பார்த்தாலே அலர்ஜியாகும் இப்போதைய தலைமுறை அனுபவிப்பதில்லை.

முறுக்கு, அதிரசம், சோமாஸ், சீடக்காய், ஓலை பக்கோடா என்று நீளும் பலகாரங்களை இப்போது முறுக்கு, குலோப்ஜாமுன்களோடு முடிந்துவிடுகிறது. அடுப்பை பற்றவைத்து, இரண்டு மூன்று தவணையில் முறுக்கு சுட்டது போய், தற்போது பேக்கரியில் மொத்தமாக ஆர்டர் கொடுத்துவிட்டு அடுப்பங்கறை அனலில் வேகும் நிலையை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், முறுக்கு சுடும்போதே சுடசுட எடுத்து திண்ணும் இருந்த மகிழ்ச்சி, பேக்கரியில் பேக் செய்து வரும் முறுக்கை திண்ணும்போது நிச்சயம் இருக்காது.

தீபாவளி அன்று காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசுகளை கொளுத்திவிட்டு, காலை சாப்பிட இட்லி, சட்னி, பஜ்ஜி இனிப்புகள் என்று இலை நிரம்பும். மதியத்திற்கு பெரும்பாலானோர் வீடுகளில் மட்டன் மணக்கும். சாப்பிட்டு விட்டு அக்கம்பக்கத்தினருக்கு வீட்டில் செய்தவற்றை பகிர்ந்து கொடுத்துவிட்டு, நண்பர்கள், உறவினர்களை சந்தித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தால், மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம். பின்னர் மாலை எழுந்து பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை நீளும். அதன் பிறகு யார் வீட்டில் அதிகம் பட்டாசு வெடிக்கப்பட்டது என்ற கணக்கெடுப்பு தொடங்கும். தங்கள் வீட்டில் தான் பட்டாசு அதிகம் வெடிக்கப்பட்டது என்பதை காட்டிக்கொள்ள, பக்கத்து வீட்டு பட்டாசு குப்பைகளை நம்வீட்டு வாசலில் தள்ளுவது, கேட்பதற்கு கோமாளித்தனமாக இருந்தாலும், அதெல்லாம் நடக்கதான் செய்தது.

ஒவ்வொருவரது பணபலத்திற்கு ஏற்றவாறு தீபாவளி கொண்டாட்டம் இருக்கும். செல்வந்தர்கள் வீடுகளில் வான வேடிக்கைகள் இருக்கும். நடுத்தர குடும்பத்தினருக்கு ராக்கெட் தான் அதிகபட்சம். நடுத்தர குடும்பத்திற்கு கீழே இருப்பவர்களுக்கு புஸ்வானம் தான் அதிகபட்சம். அப்போது 5000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் ஒரு அட்டைபெட்டி முழுதும் வரும். தற்போது ஒரு கேரி பேக்கிற்குள் அடக்கும் அளவிற்கு தான் இருக்கிறது. அதிகப்படியான விலை, பட்டாசு வெடிப்பதில் குறைந்த ஆர்வம் போன்றவற்றால் இந்த தீபாவளிக்கு பட்டாசு கடைகள் காத்து வாங்குகிறது.

பண்டிகைகள் மீதான ஆர்வம் குறைய காரணம் என்ன?

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் ஆர்வம் குறைந்து வருவது கொஞ்சம் வருத்தத்திற்குரிய உண்மை.  துணிகளை வாங்க, கடை கடையாக ஏறி இறங்கியவர்கள் தற்போது ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு, பண்டிகைகள் மீதான ஆர்வம் குறைந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய பண்டிகைகளின் போது பெரும்பாலும் அந்த வீட்டின் முதல் தலைமுறையாக படிக்கச் சென்றவர்களாக இருந்தனர். அவர்கள் பட்டதாரிகளாகி தற்போது ஓரளவிற்கு சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு, தங்களுக்கு தேவையான நேரத்திற்கு கொண்டாடப் பழகிக்கொண்டனர். வீக் எண்ட் பார்ட்டி, அவுட்டிங், ஷாப்பிங், நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்கி சாப்பிடும் அளவிற்கு உணவகங்கள் என்று எல்லாம் எளிதாகியிருக்கிறது. தீபாவளியை கடன் வாங்கி கொண்டாடிய நிலைகளில் தற்போது அவர்கள் இல்லை என்பதே உண்மை. அதோடு, FDFS என்ற வார்த்தைகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ் அறிந்திராத்து. இப்போது தீபாவளி எதிர்பார்ப்புகளைத் தாண்டி, FDFS டிக்கெட்டுகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறது காலம். தீபாவளி நாளன்று வெளியே சுற்றியது போய் “இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக" போடப்படும் திரைப்படங்கள் வீட்டினுள்ளேயே முடக்குகிறது.

இவைமட்டுமல்லாமல்  அலைச்சல் ஆகியவையே கொண்டாட்டத்தின் மீதான ஆர்வத்தை குறைத்திருக்கிறது. அதோடு தலைமுறை இடைவெளியும் முக்கிய காரணம். ப்ளாக் அண்ட் ஒயிட் டிவியிலிருந்து LED டிவி வரையிலான பெரும் மாற்றத்தை 90ஸ் கிட்ஸ் பார்த்தனர். ஆனால் 2K கிட்ஸிற்கு இந்த இடைவெளி மிக மிக்குறைவு. தலைமுறை இடைவெளி என்பது தற்போது இரண்டு ஆண்டுகள் என்ற அளவிற்கு சுருங்கியிருப்பதும், நாங்கள் தான் கஷ்டப்பட்டோம் தங்கள் பிள்ளைகள் அதை படக்கூடாது என்று பெற்றோர்கள் அதிகப்படியாக செலவழிக்க தொடங்கியது கூட காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, தீபாவளி அப்படியே தான் இருக்கும். வழக்கம்போல ஆண்டுதோறும் வரும். அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்னமும் 90ஸ் கிட்ஸ் கைகளில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

டிசம்பர் 27,30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்! -மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.

1 hour ago

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் சென்னை வந்தடைந்தார்!

2 hours ago

குழந்தைகள் ஆபாச படம் பார்பவர்களின் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயராக உள்ளது! - ஏடிஜிபி ரவி தகவல்

2 hours ago

"ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தெலுங்கு,ஃபிரஞ்ச் மொழி கற்பிக்க முடிவு" - அமைச்சர் பாண்டியராஜன்

4 hours ago

"உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டது" - அமைச்சர் பாண்டியராஜன்

4 hours ago

உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி!

5 hours ago

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

6 hours ago

தெலங்கானா விவகாரம்: தொடர்புடைய போலீசார் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றத்தில் மனு!

6 hours ago

புதிய அறிவிப்பாணை வெளியிடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

6 hours ago

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி உடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை!

7 hours ago

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

9 hours ago

ஜார்கண்ட் மாநிலத்தின் 2ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்...!

9 hours ago

முதல் டி20 போட்டி - கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி சாதனை வெற்றி

9 hours ago

சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை...!

9 hours ago

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

22 hours ago

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து !

1 day ago

தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த முடிவு என தகவல்!

1 day ago

“உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்ததால் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்”- முத்தரசன்

1 day ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, வரும் 8ம் தேதி திமுக ஆலோசனை!

1 day ago

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது மாநில தேர்தல் ஆணையம்!

1 day ago

4 மாதத்திற்குள் சட்டப்பூர்வ பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 day ago

உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை; 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம்

1 day ago

பெண்மருத்துவரை பாலியல் வன்கொடுமைசெய்து எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

1 day ago

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

2 days ago

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 37 தங்கப்பதங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்!

2 days ago

9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி

2 days ago

பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தி.மு.க.வில் இணைந்தார்.

2 days ago

தென்மேற்கு அரபிக் கடலில் பவன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய புயல்!

2 days ago

தஞ்சையில் உள்ள சசிகலாவின் பழுதடைந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ்!

2 days ago

நீர் வரத்து சீரானதையடுத்து கம்பம் சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி!

2 days ago

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம்!

2 days ago

5வது நாளாக பெட்ரோல் விலையிலும், 7வது நாளாக டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை!

2 days ago

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது!

2 days ago

நெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது!

2 days ago

மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர் குற்றச்சாட்டு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!

2 days ago

சூடான் - தீ விபத்தில் சீக்கி 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

2 days ago

தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாதர் சங்கத்தினர் கைது!

2 days ago

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே மோதல். 6 வீரர்கள் உயிரிழப்பு. இருவர் காயம்!

2 days ago

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

2 days ago

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

2 days ago

மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்!

2 days ago

மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், நீரின் அளவு 22.4 அடியை எட்டியது!

3 days ago

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு!

3 days ago

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7500 கன அடியிலிருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு!

3 days ago

கிருஷ்ணகிரி: லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

2 days ago

தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது!

3 days ago

சிறை தண்டனை அனுபவித்து வரும் லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் RJD தலைவராக தேர்வு!

3 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

3 days ago

சுவர் விழுந்து பலியான குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்!

4 days ago

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல்!

3 days ago

கொடைக்கானல் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தர தடை!

3 days ago

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.ஆக அன்பு ஐ.பி.எஸ். நியமனம்.

4 days ago

மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது

3 days ago

வைகை அணை 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

4 days ago

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

3 days ago

தி.நகர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்!

4 days ago

சென்னை தியாகராய நகரில் தனியார் கட்டிடத்தில் 4வது மாடியில் பயங்கர தீவிபத்து!

3 days ago

தமிழகத்தில் பெட்ரோல் 77.91 ரூபாய்க்கும், டீசல் 69.53 ரூபாய்க்கும் விற்பனை!

4 days ago

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

3 days ago

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

4 days ago

தூத்துக்குடியில் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

3 days ago

கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

3 days ago

பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

4 days ago

தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

4 days ago

அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது!

4 days ago

"ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பாஜக வரவேற்கிறது!” - வானதி சீனிவாசன்

4 days ago

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது; நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை!

5 days ago

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் : நிதியுதவி அறிவிப்பு!

4 days ago

டிசம்பர் 27, 30 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்!

5 days ago

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

4 days ago

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு!

4 days ago

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

4 days ago

கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து 8 பேர் உயிரிழப்பு!

4 days ago

கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

5 days ago

தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

5 days ago

சென்னை மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

5 days ago

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது!

5 days ago

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது

5 days ago

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

5 days ago

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

5 days ago

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை! - மாவட்ட ஆட்சியர்

5 days ago

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

5 days ago

கடலூரில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட கல்வி அலுவலர்

5 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

5 days ago

"தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு!" - இந்திய வானிலை ஆய்வு மையம்

6 days ago

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை!

5 days ago

சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை!

6 days ago

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

5 days ago

மகாராஷ்டிர மாநில சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

5 days ago

தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

6 days ago

"தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

6 days ago

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று காரணமாக 25 விசைப்படகுகள் உடைந்து சேதம்!

5 days ago

நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு!

6 days ago

ஈராக்கில் பிரதமர் பதவி விலகியபோதும் நீடிக்கும் போராட்டம்!

6 days ago

சென்னை மழை: உதவி எண்கள் - 044-25384520, 044-25384530, 044- 25384540

5 days ago

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே ஆட்சியாளர்களின் நோக்கம்: டிடிவி தினகரன்

5 days ago

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

5 days ago

சென்னையில் கடந்த 3 மணி நேரமாக கனமழை!

5 days ago

கனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்...!

5 days ago

தென்தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

5 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை