Skip to main content

'Dog memes'ஐ பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் இளசுகள்.. 'Cheemsdaa'வில் அப்படி என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்ளுங்கள்!

August 25, 2020

சில்வியா சுவாமிநாதன்

கட்டுரையாளர்

Image

30 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலானோருக்கு இந்த ‘டாக் மீம்ஸ்’ பற்றி தெரியும் என்றாலும் அது பற்றி தெரியாதவர்களுக்கும். இதைப் பார்த்து ஏன் இளசுகள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் சொல்லவே இந்த ஸ்மால் கட்டுரை.

இந்த டாக் மீம்ஸில் cheems, perro, walter, dogge, karuppi என 5 வகையான நாய்கள் முக்கியமான கதாப்பாத்திரங்களாக இருக்கின்றன. இந்த 5 நாய்களும் அவைகளுக்கே உரிய இயல்புடன் என்னென்ன ரகளை பண்ணுகிறது என்பதே இந்த மீம்களின் சாரம். ஒவ்வொரு நாயின் குணாம்சம் என்ன? அது ஏன் இன்றைய இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது என்பதைத் தனித்தனியாகப் பார்க்கலாம்.


1. சீம்ஸ் (cheems)

Image


சீம்ஸ் ஆக வலம் வரும் நாய்க்கு cheese burger –ஐ நக்கி சாப்பிடுவது மிகவும் பிடித்தமான செயல். அதே நேரம் எந்த வார்த்தையையும் சீம்ஸ்-க்கு சரியாக உச்சரிக்கத் தெரியாது. எல்லா வார்த்தைகளிலும் ‘m’ என்கிற எழுத்தை சேர்த்து தப்பு தப்பாக கூறுவது தான் cheems-ன் தனிச்சிறப்பு. அதற்கு மிகவும் பிடித்த cheeseburger-ஐ கூட cheemsburgar என்றுதான் சொல்லும். இதனால் தான் இந்த நாய்க்கு  cheems என்று பெயர் வந்தது. மற்றபடி cheems பழகுவதற்கு இனிமையான, வெள்ளந்தியான மற்றும் மிகவும் வேடிக்கையான நாய். பொய் சொல்லி மாட்டிக்கொள்ளுதல், வீட்டில் boost –ஐ திருடித் தின்று அடிவாங்குதல் உள்ளிட்டவை இதன் அன்றாட செயல்பாடுகள். இதன் அப்பாவித்தனத்தை பார்ப்பதற்கென்று “cheems army” என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கண்ணில் நீர்வர சீம்ஸ் அழுதால் இளைஞர்கள் உள்ளம் துடிதுடித்துப் போகும். 


2. பெர்ரோ (perro)

Image
 

சீம்ஸ் மேல் அனைவருக்கும் ஒரு பரிதாபம் கலந்த அன்பு இருக்கும் என்றால் பெர்ரோ மேல் இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு உண்டான மவுசு இருக்கும்.  Labrador retriever இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் பூர்வீகம் மெக்சிகோ. வெறும் அரை மீட்டர் உயரமே இருந்து கொண்டு “drug dealer” ஆக வலம் வரும் இந்த நாயின் முக்கிய வேலை கஞ்சா சப்ளை செய்தல் மற்றும் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு கமுக்கமாக ஒளிந்து கொள்ளுதல். 24 மணி நேரமும் கஞ்சாவிலேயே இருந்து கொண்டு இது செய்யும் அலும்பல்கள் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஸ்கூலுக்கு போகும் வயதில் இருந்து கொண்டு ஏரியா ரவுடிகளுடன் கஞ்சா பொட்டலம் மாற்றுதல், ஏரியா விட்டு ஏரியா போய் பிரச்சனை பண்ணிவிட்டு ஓடி வந்து ஒளிந்து கொள்ளுதல், ஸ்கூல் பாத்ரூமில் எதிர் கேங்குடன் சண்டை போட்டு டீச்சரிடம் மாட்டிக்கொள்ளுதல், மாட்டிக்கொண்டு அடி வாங்கும்போதும் கெத்தாக பஞ்ச் டயலாக் பேசுதல் உள்ளிட்டவை perro–வின் ட்ரேட் மார்க்.


3. டாகி (dogge)

Image
இந்த doggie ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளை. பணக்கார வீட்டுப்பிள்ளைக்கே உரித்த தோற்றத்துடன், கேங்க் லீடராக வலம் வருகிறது.  நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அவர்களுக்கு செலவு செய்வது, வீட்டில் அப்பா அம்மா ஊருக்கு போய்விட்டால் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மொத்தமாக வீடியோ கேம் விளையாடுவதுதான் இதன் பொழுதுபோக்கு.  அவ்வப்போது racist ஆக பேசும், ஆணாதிக்கத்தோடு செயல்படும் மற்றும் தன்னை அறியாமலே ஆதிக்க சாதி மனநிலையை வெளிப்படுத்தும். மற்றபடி நண்பர்கள் மேல் பாசமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நண்பர்களால் தன் அப்பாவிடம் மாட்டி அடி உதை வாங்கினாலும் நண்பர்களை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை.


4.வால்டர் (Walter)

Image


இந்த கேங்கிலேயே பார்ப்பதற்கு முரட்டு பீசு போலத் தெரியும் இவர் உண்மையில் ஒரு முட்டாப்பீசு என்றுதான் கூற வேண்டும். பிரச்னை பண்ணி மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே உச்சா போய் தானாக மாட்டிக்கொள்வது இதன் தனிச்சிறப்பு. தீயணைப்பு வண்டிகள், பெரிய லாரிகள் walter-க்கு மிகவும் பிடித்தமானவை. எவ்வளவு முக்கியமான வேலை செய்து கொண்டிருந்தாலும் இவற்றை கண்டால் பின்னாடியே ஓடிவிடும். இடம் பொருள்  ஏவல் தெரியாமல் சம்மந்தம் இல்லாமல் பேசுவது, என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்வது, ஸ்கூல் மிஸ்ஸை திட்டி மற்றவர்கள் ஸ்டேடஸ் போட்டால் அதை screen shot எடுத்து மிஸ்ஸுக்கே அனுப்பி போட்டுக்கு கொடுப்பது உள்ளிட்டவை வால்டரின் பார்ட் டைம் ஜாப்கள்.


5. கருப்பி (Karuppi)
Image

மற்ற நாய்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கருப்பி மட்டும் இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. கருப்பி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தமிழ்நாட்டு நாய். மிகவும் அப்பாவி, யாருக்கும் தீங்கிளைக்காத இயல்பு கொண்டது. Cheems-ம் walter-ம் கூட கருப்பியை எளிதாக ஏமாற்றிவிடும்.  மிகவும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கருப்பி, சில சமயங்களில் dogge-யின் சாதி வெறிப் பேச்சுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தவறுவதில்லை. 

Image
இந்த டாக் மீம் கலாச்சாரம் 2013 ஆம் ஆண்டிலேயே வெளிநாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகே தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது. தமிழில் சீம்ஸ்டா , சீம்ஸ் ராஜா, டாக்கி லிவ்ஸ்-ன் தமிழ்நாடு ஆகிய பக்கங்கள் இந்த வகையான டாக் மீம்ஸுக்கு பிரபலமானவை. இந்தப் பக்கங்கள் அனைத்துமே வெறும் காமெடி மீம்களாக மட்டுமல்லாமல் சமூக விஷயங்களையும் எந்த கருத்து திணிப்புமின்றி கேலி செய்வதால் பலருக்கும் விருப்பமானதாக இந்த ‘டாக் மீம்ஸ்’இருக்கிறது.

இந்த  ‘டாக் மீம்ஸ்’ குறித்து விளக்கி எழுதியவர் கட்டுரையாளர் சில்வியா சுவாமிநாதன்.

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

37 minutes ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

15 hours ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

1 day ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 day ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 day ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 day ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

2 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

2 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

2 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

3 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

3 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

3 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

3 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

3 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

3 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

3 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

3 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

3 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

3 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

3 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

4 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

5 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

5 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

5 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

6 days ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

6 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

6 days ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

6 days ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

6 days ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

1 week ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு!

1 week ago

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி!

1 week ago

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் 8,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை!

1 week ago

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது! - மருத்துவமனை அறிக்கை

1 week ago

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது!

1 week ago

கிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - ககன்தீப் சிங் பேடி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை