Skip to main content

சர்கார் - சர்ச்சையா?... சரித்திரமா?

November 08, 2018
Image

மதன் ரவி

ஊடகவியலாளர்

Image

எந்த ஒரு திரைப்படமும் ஒரு சமூக கருத்தையோ அல்லது மக்களுக்கு தேவையான சிந்தனைகளையோ விதைக்க கூடியதாக இருக்க வேண்டுமா அல்லது முழு முதற்பொழுதுபோக்கிற்கான கருவியாக மட்டுமே  ரசிக்க பட வேண்டுமா என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த வாட்ஸ் அப் யுகத்தில் யார் என்ன கூறினாலும் அதன் நம்பகத்தன்மையை ஆராய வேண்டிய சூழலில் நாம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆதிமனிதன், கூறிய கருத்துக்களை மட்டும் பார்க்காமல் கூறப்படுபவரின் பின்புலத்தை ஆராய்ந்து உள்ளான் என்பதற்கான சான்றுதான் "சாத்தான் வேதம் ஓதுகிறது"என்கிற பழமொழி!

வேதத்தை யார் ஓதினால் என்ன, அதன் உட்கருத்தை தானே வாங்க வேண்டும். ஆனால் வேதத்தை சாத்தான் ஓதும் போது நமக்கு அது கீழ்த்தரமானது என்று பயிற்றுவிக்கப்படுகிறது. நவீன யுகத்தில் இதன் மாற்றுக் கருத்தாக ஒரு சிந்தனையை வைக்கிறார்கள். அதாவது  சொல்பவர் எத்தன்மை கொன்டவராயினும் அது நல்ல கருத்தாக இருந்தால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை

இதற்கு நகைச்சுவையாகச் கூறப்படும் சொலவடை "கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதும்".

தமிழ் சினிமா என்றுமே அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம் அதனாலேயே வெளி நாடுகளைப்போல அரசியல் சார்ந்த திரைப்படங்களை கண்டு களிக்கும் வாய்ப்பு நமக்கு பெரிதாக வாய்திறக்கவில்லை.

முதன் முதலாக அரசியல்வாதிகளை கேலி செய்து எடுக்கப்பட்ட படம் சோ அவர்களின் முகமது பின் துக்ளக். அது ஒரு பகடி. அந்த திரைப்படம், நன்றாக அரசியல் ஞானம் உள்ளவர் களுக்கு நகைச்சுவையாக புரியும்படியான அந்தக் காலத்து அரசியல் தன்மையை சொல்லும் திரைப்படம். அடித்தட்டு மக்களுக்கு சென்று சேரவேண்டிய அரசியலையோ அவர்களின் அன்றாட கஷ்டங்களையும் சொல்லும் ஒரு அரசியல் திரைப்படம் அல்ல.

முதன் முதலில் ஒரு முழுநீள அரசியல் திரைப்படமாக நாம் கண்டு ரசித்தது பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர்.கோமல் சுவாமிநாதன் அவர்களின் கதையை பாலச்சந்தர் அவர்கள் இயக்கி வெளியிட்டது  எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில். அரசு இயந்திரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கும் விதத்தில் எழுதப்பட்டிருந்த அந்த திரைப்படம் அக்கால அரசியல் வாதிகளின் லஞ்ச ஊழல்களுக்கு ஒரு சம்மட்டி அடி. பின்பு பாரதிராஜா அவர்கள் இயக்கிய என்னுயிர் தோழன் என்ற திரைப்படம் அந்தக் கால அரசியலில் அழுக்குகளை நமக்கு பூதக் கண்ணாடி போட்டு காட்டியது அரசியல்வாதிகளும் அவர்களின்  கீழ்த்தரமான முகத்தையும் மிக அழகாக படம் பிடித்துக் காட்டினார் இயக்குனர் இமயம்.  அந்த திரைப்படத்தில் தமிழ் ஆர்வலர் போன்ற கட்சித் தலைவர் பொன்னம்பலம் அவர்கள் தனது கட்சித் தொண்டரான தர்மனிடம் இறுதிகட்ட காட்சிகளில் அவரின் மயக்கும் வார்த்தைகளும் சொல்லும் கொன்றால் பாவம் வென்றால் போச்சு  என்ற வாசகமும் இன்றளவும் அரசியல் திரைப்படங்களை நமக்கு புலப்படுத்துகிறது.

இந்த திரைப்படத்தில் பாரதிராஜா  ஒரு மூத்த அரசியல்வாதியை  மறைமுகமாகச் சாடியதாக அக்காலத்தில் விமர்சிக்கப்பட்டது. இது இந்திய திரைப்படங்களை தொடர்ந்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான அமைதிப்படை என்ற திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த திரைப்படத்தில் அரசியல்வாதிகளையும், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி தொண்டர்களின் மனநிலையையும், பொதுமக்கள் எப்படி தூண்டுதலுக்கு எளிமையாக ஆளாகிவிடுகின்றனர் மற்றும் ஆட்சியாளர்கள் செய்யும் பித்தலாட்டங்களையும் மிக விரிவாக நமக்கு புட்டுப்புட்டு வைத்தார் இயக்குனர் மணிவண்ணன்.

இந்த சினிமாவின் கதாநாயகனை இன்றைய பல மூத்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு இன்றளவும் memes poda படுவதில் இருந்து தெரிகிறது இந்த திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படமும் ஒரு மூத்த அரசியல்வாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இப்படி இங்கொன்றும் அங்கொன்றும் அரசியல் சார்ந்த திரைப்படங்களை வழங்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் நிறைய அரசியல் பேசி இருக்கிறது.

படத்தின் கதாநாயகன் சுந்தர ராமசாமி உலகத்தின் பெரும் பணக்காரர். தமிழகத்தில் புரையோடியிருக்கும் ஊழலை தேர்தல் அரசியல் சீர்திருத்த கண்ணோட்டத்துடன் அணுகி வெற்றி பெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் ஒரு நல்ல துவக்கம், கதை அளவில் மிக நன்றாகவே யோசிக்க பட்டிருக்கிறது (யாரால் என்பதில் சர்ச்சை இருப்பது உண்மை). ஆனால் இது ஒரு முழு நீள அரசியல் திரைப்படமா அல்லது இன்றைய அரசியல்வாதிகளின் பகடியா அல்லது இது ஒரு வணிக சினிமாவை அல்லது இது விஜய்யின் அரசியல் வாழ்வின் அச்சாரமா. இப்படி இந்த எந்த ஒரு கேள்விக்கும் முழுதாக விடை கொடுக்காமல் எல்லா கேள்விக்கும் விடை கொடுக்க முயற்சி மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் ஒரு ஆகச் சிறந்த அரசியல் விருந்திற்கான அத்தனை அறிகுறியும் கொண்டிருந்தாலும்  நமக்கு பரிமாறப்பட்டது பழைய சோறு தான்.

கதையில் அன்றிலிருந்து இன்று வரை உள்ள ஏராளமான அரசியல்வாதிகளை தாக்கியிருக்கின்றனர். முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இன் உடல்மொழியும் அவர் கூறும் வசனங்களும் ஒரு மறைந்த மூத்த அரசியல்வாதி நினைவுபடுத்துவது தவிர்க்க முடியவில்லை . அவருக்கு பக்க பலமாக செயல்படும் "இரண்டு" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரின் வாய்க்கோனல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

கோமளவல்லி என்னும் கதாபாத்திரத்தைப்பற்றி அனைத்து பத்திரிகைகளும் அலசுகின்றன. இதனைத் தாண்டி நிஜ கதாபாத்திரங்களை (ராம் ஜெத்மலானி, பியூஷ் மனுஷ், சவுக்கு சங்கர் ,...) நிழலாகவும் உலவ  விட்டிருக்கின்றனர். இவ்வளவு சர்ச்சைகளை கொண்டுள்ள இந்த திரைப்படத்தில் சமாசாரம் இருக்கிறதா என்றால் சந்தேகமே.

ஆட்சியாளர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் தாக்குதலையே நம்முடைய அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பத் தொடங்கி விட்டார் நடிகர் விஜய். ஆனால் அவரது கடந்த கால நடவடிக்கைகள் அப்படி கூறுவதாக இல்லை. காவலன் திரைப்படம் வந்தபோது தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் திமுகவை சாடுவதாக இருக்கட்டும் தலைவா பிரச்சனையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு எஸ்டேட் வாயிலில் தவங்கிடந்து கண்ணீர் விட்டதாக இருக்கட்டும் இன்று அத்தகைய பிரச்சனைகளும் இல்லாத சூழ்நிலையில் கம்பு சுற்றுவதாக இருக்கட்டும் இது எதுவுமே அவரது அரசியல் அதிகாரத்திற்கு பெரிதும் உதவும் என்று நம்ப முடியவில்லை.

சர்க்கார் திரைப்படத்தில் இலவசங்களை சாடியிருக்கிறார்கள் சமூகநீதியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு காமராஜர் கொண்டுவந்த இலவச மதிய உணவுத் திட்டமும் எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் பேருதவியாக இருக்கின்றன. விஜயின் அரசியலில் இந்த இலவசங்களையும் சேர்த்து எதிர்க்கிறாரா அல்லது குறிப்பிடப்பட்ட இலவசத் திட்டங்களை எதிர்க்கிறாரா ?

இதனைத் தாண்டி இந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல சித்தாந்தங்கள் சமகால அரசியல் சூழ்நிலையில் நாம் தினசரி செய்தித்தாள்களிலும் இணையதளங்களிலும் பகிர்ந்துகொள்ளும் குறுஞ்செய்திகளின் தொகுப்பாகவே தெரிகிறது. அதுவும் பிழையில்லாமல் இல்லை டெங்கு காய்ச்சலுக்கு பொதுப்பணித்துறையை காரணம் கூறுகிறார் கதாநாயகன். அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்த விஜய்யின் தீவிர ரசிகர் "அண்ணா அது சுகாதாரத்துறை" என்று கத்தியதை கேட்டு தியேட்டரில் கரவொலி.

நடிகர் விஜய் கலந்து கொண்ட மேடையில் கலாநிதிமாறன் அவரை தளபதி என்று கூறுகிறார் அரசியல் வட்டாரத்தில் தளபதி யார் என்று தமிழக மக்கள் அறிவர் இந்நிலையில் கலாநிதி மாறன் விஜயை அப்படி விளித்தது வியப்பே! ஒருவேளை நடுநிலை காரணமாக அனைவரையும் சீண்டுவதாக சொல்லிக்கொண்டு ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று இருபாலரையும் சீண்டுவதாக நினைத்தால் அந்த நினைப்பு இப்போது இருக்கும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடியும்.

சினிமாவினால் ஒரு சமூக புரட்சி ஏற்படும் என்பது இன்றைய காலத்தில் நடக்கக்கூடியதா என்பது கேள்விக்குறி. அதுவும் இதுபோன்ற சர்ச்சைகளும் தனிநபர் தாக்குதல்களும் பெரிதளவில் தூவப்பட்டுள்ள திரைப்படத்தினால் நிச்சயமாக சமூகத்திற்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதையும், அவர் விரும்பியதாகத் தெரியவில்லை. அப்படி விரும்புபவராக இருந்தால் நிச்சயம் அவர் விரைவில் என்னுயிர் தோழனாக வேண்டுகிறேன்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

நீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி

16 hours ago

உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

17 hours ago

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்

17 hours ago

உலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...!

20 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....!

20 hours ago

சென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...!

20 hours ago

தமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....!

20 hours ago

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்

1 day ago

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்

1 day ago

“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...!” - அன்புமணி ராமதாஸ்

1 day ago

உலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...!

1 day ago

வேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...!

1 day ago

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...!

1 day ago

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

2 days ago

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை! - மாநில தேர்தல் ஆணையம்

2 days ago

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...

2 days ago

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...!

2 days ago

தேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...!

2 days ago

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...!

2 days ago

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!

2 days ago

சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!

2 days ago

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

3 days ago

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது!

4 days ago

139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது!

5 days ago

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

5 days ago

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...!

5 days ago

வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

5 days ago

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.

5 days ago

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

5 days ago

அயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

6 days ago

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.

6 days ago

கர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா!

6 days ago

கர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.

6 days ago

உலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி!

6 days ago

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

6 days ago

நாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்

6 days ago

நீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...!

1 week ago

நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

1 week ago

மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்!

1 week ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்!

1 week ago

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்

1 week ago

ஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்!

1 week ago

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...!

1 week ago

இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை!

1 week ago

தமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு!

1 week ago

சமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு! - வைகோ

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்!

1 week ago

உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு!

1 week ago

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை!

1 week ago

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம்!

1 week ago

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்கள் 30 பேர் கூண்டோடு ராஜினாமா!

1 week ago

IMA நகை மோசடி வழக்கில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜய்சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..!

1 week ago

“நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது!" - ஓபிஎஸ்

1 week ago

வேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு...!

1 week ago

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...!

1 week ago

பிஃபா உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் அமெரிக்கா அணி சாம்பியன்!

1 week ago

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுமா?

1 week ago

கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று முடிவெடுக்கிறார் சபாநாயகர்!

1 week ago

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் கலந்தாய்வு!

1 week ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு...

1 week ago

முகிலன் குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்!

1 week ago

கரூரில் பட்டா மாறுதலுக்கு, 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!

1 week ago

கர்நாடகாவில் எம்எல்ஏக்களின் ராஜினாமாவால், கவிழும் சூழலில் குமாரசாமி ஆட்சி.

1 week ago

குடிநீரை வீணடிக்காமல் தடுப்பது சவாலாகி விட்டது: பிரதமர் மோடி

1 week ago

தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா?; அரசு பரிசீலித்து வருவதாக, முதல்வர் பழனிசாமி பேச்சு.

1 week ago

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

1 week ago

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

1 week ago

இந்தியா இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

1 week ago

நடுத்தர மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்!

1 week ago

சாமானியர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காத நிதிநிலை அறிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்!

1 week ago

நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடை இல்லை என சட்டநிபுணர்கள் கருத்து!

1 week ago

தமிழக தொழிற்துறையை மேம்படுத்த உதவும் பட்ஜெட் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

1 week ago

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

1 week ago

ஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கிய நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின்

1 week ago

நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

1 week ago

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

1 week ago

நீதிமன்றம் விதித்த ரூ.10000 அபராதத்தை செலுத்தினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

1 week ago

தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு; ஓராண்டு சிறை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

1 week ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம்!

1 week ago

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

1 week ago

வைகோ மீதான தேச துரோக வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்!

1 week ago

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

1 week ago

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...!

1 week ago

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்!

1 week ago

37 ஆண்டுகாலமாக ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி நியமனம்!

1 week ago

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

1 week ago

ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்

1 week ago

2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

1 week ago

இன்று எனக்கு முக்கியமான நாள் : உதயநிதி ஸ்டாலின்

1 week ago

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சேலத்தில் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!

1 week ago

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

தேர்தல் தோல்விக்கு பிறகு, நிர்வாகிகள் விலகுவது இயல்பே: டிடிவி.தினகரன்

1 week ago

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

1 week ago

சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல அது கலாச்சார தடயம்: கமல்ஹாசன்

1 week ago

11 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நீதி வெல்லும்: செல்லூர் ராஜூ

1 week ago

காங். தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்!

1 week ago

2019-20 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

1 week ago

திமுக இளைஞர் அணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின் ?

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை