Skip to main content

சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம் இன்று...!

June 28, 2019
Image

தி. அரப்பா

வரலாற்று ஆய்வாளர்

Image

சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பதேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான் சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதால மூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும். 

இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, எம்.ஏ.திருமுகம் என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனியில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார். 

அதன் பின் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டார். சோடா தயாரித்து விற்பனை செய்தார். சின்னப்பதேவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து, வீரமாருதி தேகப் பயிற்சி சாலை என்ற உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்கள்.  சின்னப்பா அங்கு உடற்பயிற்சிகள் செய்து கட்டுடல் பெற்றார் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை முதலியவற்றையும் கற்றார். இந்த காலத்தில் கோவையில் ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ என்ற நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தில் எம்.ஜி.ஆர், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் ஒப்பந்த நடிகர்களாக மாத ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர்.

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், புராண கதாபாத்திரங்களில் நடிக்கவும் கட்டுடல் பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சின்னப்பதேவருக்கு அந்த வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டுத் துணை நடிகரானார். 20 படங்கள் வரை பல வேடங்களில் நடித்தார். சின்னப்பதேவருக்கு 1936-ல் அவருடைய 21-வது வயதில் திருமணம் நடந்தது. இவர் மனைவியின் பெயர் மாரிமுத்தம்மாள்.

இவ்விணையருக்குத் தண்டாயுதபாணி என்ற ஒரு மகன், சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று இரண்டு மகள்கள். தண்டாயுதபாணி பி.காம் பட்டதாரி. தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களைத் தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான ஆறுமுகம் என்கிற எம். ஏ. திருமுகம் இயக்கினார். தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தை மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார். திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக எம்.ஜி.ஆருடனும், மற்ற நடிகர்களுடனும் தேவருக்கு நட்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரும், தேவரின் வீர மாருதி தேகப்பயிற்சி சாலைக்கு வந்து உடற்பயிற்சி செய்வது உண்டு. எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே கத்திச்சண்டை அறிந்திருந்தார். கம்புச்சண்டையில் தேர்ந்தவரான சின்னப்பா தேவர், அதுபற்றிய நுட்பங்களை எம்.ஜி.ஆருக்குக் கற்றுத்தந்தார். இவர்களின் நட்பு சிறு சிறு சர்ச்சைகளுக்கிடையேயும் இறுதி வரைத் தொடர்ந்தது. 

அக்காலத்தில், புராணப் படங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற சி.வி.ராமன் என்ற இயக்குநர் கோவையில் இருந்தார். அவரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் பணியாற்றினார். சினிமாத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இதற்கிடையில், தேவரின் தம்பி திருமுகம் எடிட்டிங் துறையில் பெயர் பெற்றார். ஜுபிடர் தயாரித்த வேலைக்காரி, மனோகரா முதலிய படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றினார். சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று தேவருக்கு ஆசையில் நண்பர்களிடம் பணம் சேகரித்து 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு வந்தார். ஜீலை 7, 1955 தேவர் பிலிம்ஸ் படக்கம்பெனியை தொடங்கினார். முதல் படத்தையே, பெரிய நட்சத்திரங்களை வைத்து தயாரிக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். 

கோவையில் நண்பராகப் பழகியிருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆர். சம்மதித்தார். அதன் பின்னர் பானுமதி மற்றும் பாலையா, கண்ணாம்பா, ஈ.ஆர்.சகாதேவன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தன் தம்பி எம்.ஏ. திருமுகம் இயக்க தாய்க்குப்பின் தாரம் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இந்தப்படத்துக்கு முதலில் ஏ.பி.நாகராஜன் வசனம் எழுத ஏற்பாடாகியிருந்தது. பின்னர், கண்ணதாசன் எழுதுவார் என்று கூறப்பட்டது. இறுதியில் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அய்யாப்பிள்ளை எழுதினார். பாடல்களை கோவை லட்சுமணதாஸ், மருதகாசி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். 

தேவரின் நேர்மை, நாணயம், திறமை பற்றி அறிந்திருந்த நாகிரெட்டி, படத்தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிக்கொண்டு, பணம் தந்தார். இப்படத்தில் முரட்டுக்காளை ஒன்று நடித்தது. 4-9-1956-ல் வெளிவந்த தாய்க்குப்பின் தாரம் பெரு வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், தேவர் உற்சாகம் அடைந்தார். அடுத்த படத்தையும் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்கத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது. அடுத்து சில படங்களை ரஞ்சன், உதய குமார், ஜெமினி கணேசன், ஆனந்தன் போன்றாரை வைத்து தயாரித்தார். 

கொங்கு நாட்டுத் தங்கம் படத்தை அடுத்து, மீண்டும் எம்ஜி ஆர் கூட்டணி அமைந்தது. தேவர் பிலிம்ஸ் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். தாய் சொல்லை தட்டாதே படத்தில் எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும் நடிக்க வைக்க தேவர் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, கதை- வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 

தாய் சொல்லை தட்டாதே படம் ஒரே மாதத்தில் தயாராகியது. 7-11-1961-ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது. இதை அடுத்து தாயைக் காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். 

எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் வெற்றிப் படங்களை எடுத்தவர் என்ற பெயர் தேவருக்கு கிடைத்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான். 1977-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனபின், திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனவே தேவர் பிற நடிகர்களை வைத்துத் திரைப்படங்கள் எடுக்கத் திட்டமிட்டார். 

தேவர் படங்களிலேயே எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த போது, சில பெரிய திரைப்பட நிறுவனங்கள் எம்.ஜி.ஆரை அணுகி, தங்களுடைய படங்களிலும் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். இல்லாமல் சில படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்து, அதற்கென்றே தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற படநிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பக்தி கலந்த சமூகப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமே தெரிந்த தேவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்னும் பெரும் வெற்றிப்படத்தை இந்தியிலும் எடுத்தார். 

 

இவற்றில் ‘துணைவன்’ (1969) , தெய்வம் (1972), ‘வெள்ளிக்கிழமை விரதம்’ (1974), ‘ஆட்டுக்கார அலமேலு’(1972) ஆகியவை மாபெரும் வெற்றிப்படங்களாகும். தெய்வம் படத்தில், புகழ்பெற்ற கிருபானந்தவாரியார் நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ராதா ஜெயலக்‌ஷ்மி, பித்துக்குளி முருகதாஸ் ஆகிய இசைக் கலைஞர்கள் பாடினார்கள். 

தேவரின் படங்கள் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் (பொதுவாக 40 நாட்களுக்குள்) தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றன. நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்தார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது. இதன் காரணமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவித்து விடுவார். அதே தேதியில் படம் நிச்சயம் வெளியாகும். 

சிறந்த முருக பக்தராக விளங்கிய தேவர் ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். இதில் ஒரு பங்கு முருகனுக்கு வழங்குவார். முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன. ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, திரை படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார். தேவர், காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவி செய்வார். 

இறுதிக்காலம்:

1977-இல் முதலமைச்சர் ஆனபின், எம்.ஜி. ஆர் படங்களில் நடிக்கவில்லை. எனவே, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தாய் மீது சத்தியம் படம் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். வசனங்களை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார்.சங்கர் கணேஷின் இசையில் தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இப்படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. 6-9-1978-ல் தேவர் ஊட்டி சென்று படபிடிப்புகளில் கலந்துகொண்ட போது தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 

மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. ஊட்டியில் கடும் குளிர் இருந்ததால், கோவைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று கருதப்பட்டது. எனவே, தேவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைகள் தொடர்ந்தன. மறுநாள் 7-9-1978 இல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, காலை 10 மணி அளவில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 63. தேவரின் உடல் கோவை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டுக்குக் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 

அங்கு திரையுலகப் பிரமுகர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள். சின்னப்பா தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தது. இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்று கலந்து கொண்டார். ஜெய்சங்கர் உள்பட திரை உலக பிரமுகர்கள் பலரும் சென்றனர்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

4 hours ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

4 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 hours ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

4 hours ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

10 hours ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

11 hours ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

11 hours ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

13 hours ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

13 hours ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

13 hours ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

13 hours ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

14 hours ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

14 hours ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

14 hours ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

14 hours ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

1 day ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

1 day ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

1 day ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

1 day ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

1 day ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

1 day ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

2 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

2 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

2 days ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

2 days ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

2 days ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

2 days ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

2 days ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

3 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

3 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

3 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

3 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

3 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

3 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

3 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

4 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

4 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

4 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

4 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

4 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

4 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

4 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

4 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

4 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

4 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

4 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

5 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

5 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

5 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

5 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

5 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

5 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

5 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

5 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

5 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

5 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

5 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

6 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

6 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

6 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

6 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

6 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

6 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

6 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

6 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

6 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

6 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

6 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

6 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

1 week ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

1 week ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

1 week ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை