Skip to main content

அடித்தட்டு இந்திய மக்களையும் சென்றடையும் தரமான சுகாதாரம்!

February 25, 2019
Image

கு.பிரதீப்

கட்டுரையாளர்

Image

ஒரு மருத்துவமனைக்குள் நுழையும் போது பல்வேறு விதமான முரண்பட்ட காட்சிகளை காண முடிகிறது. ஒரு பக்கம் குழந்தை பிறப்பு, புற்றுநோயில் இருந்து மீண்டு வருதல், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருந்தால் என்று சிலரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக தெரிகிறது. அதே நேரத்தில் மறுபுறம் நோயால் அவதியுற்று இறத்தல், உயிர்கொல்லி நோயில் சிக்கி தவித்தல் என்று சிலரின் வாழ்க்கை சோகமாகவும் தெரிகிறது. மக்கள் அனைவருமே நோயின்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். கொடிய நோய்கள் அண்டக்கூடாது என்ற எண்ணம் அனைவரிடத்திலுமே காணப்படும். அதற்கு
தேவை சிறந்த மருத்துவம், எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சேவை, அனைத்து தரப்பு மக்களுக்குமான செலவில் உயர்தர சிகிச்சை போன்றவை அவசியமாகிறது. இதன் மூலம் உயிர் அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தும் நோய்களை மக்கள் எவ்வித சிரமமும் இன்றி எதிர்கொண்டு நலமான வாழ்க்கை வாழ முடியும்.

ஒரு நாட்டின் நிலையை நாட்டின் சுகாதாரதுறை மேற்கொள்ளும் நடவடிக்கையை வைத்தே அறிந்து கொள்ள முடியும். மக்கள் ஆரோக்கியம் இன்றி இருப்பது நேரடியாக நாட்டின் பொருளாதரத்தை பாதிக்கும். மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், ஒரு நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்குகளை எட்ட முடியும். அதற்கு சிறந்த முறையிலான சுகாதார திட்டங்கள் அவசியமாகிறது. இதற்கு முன்னர் இந்தியாவில் பல்வேறு சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் அவை பெயரளவில் மட்டுமே 
நடைமுறைப்படுத்தப்பட்டன. சில திட்டங்கள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது கூட தெரியாமல் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் 2014 பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. முன்னர் இருந்த குறைபாடுகள் எல்லாம் களையப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து பின்பற்றக்கூடிய அளவிற்கு சிறந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது, செயல்படுத்தியும் காட்டியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவொன்றில், 2016ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட, சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வீட்டுச்சூழல் மற்றும் வெளிப்புறச் சூழலில் ஏற்படும் மாசுபாட்டினால் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரைக்காத்த உஜ்வாலா திட்டம்:

இந்தியாவிலுள்ள 98 சதவிகிதக் குழந்தைகள் பாதுகாப்பற்ற அளவிலான, மாசு பெருகிய வீட்டுச்சூழலில் வளர்கின்றன. இதனால் மரணம் அல்லது மரணத்தையொட்டிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்கள் உண்டாகுமென்று எச்சரிக்கை செய்துள்ளது ஐக்கிய நாடுகள் உலக சுகாதார நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மாசுபாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுவதன் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. சமையல் எரிவாயு மற்றும் தீப்பற்ற வைப்பதற்கான
பொருட்களின் மூலமாக வீட்டுச்சூழலில் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், இதனால் பெருமளவிலான குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், சிலர் மரணமடைவதாகவும் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்த ஆய்வுக்கான தரவுகள் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு வரை இது தொடரப்பட்டது. இந்தியாவில் எரிபொருளுக்கான முக்கிய ஆதாரமாக உயிரி எரிவாயு இருந்ததற்கும், குழந்தைகள் இறப்பு விகிதத்துக்குமான நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது இந்த ஆய்வு முடிவு. எது எப்படியாயினும், 2016ஆம் ஆண்டில் இருந்து, வீட்டுச்சூழலில் காற்று மாசுபாடானது இந்தியாவில் பெருமளவில் குறைந்திருப்பதாகக் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலுள்ள பெரும்பாலான வீடுகளில் எல்பிஜி
மற்றும் இதரத் தூய்மையான வழிகள் மூலமாகச் சமையல் செய்வது 56 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. இன்று, இந்த எண்ணிக்கை 80 சதவிகிதம் எ ன்ற அளவில் உள்ளது. இதற்கு, உஜ்வாலா திட்டம் போன்ற மக்களுக்குப் பயன் அளிக்கும் மத்திய அரசுத் திட்டங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.

மக்களின் இயலாமையை போக்கிய ஜன் ஒளஷதி கேந்திரா:

நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும், மருந்துகள் வாங்க முடியாமல் ஏழைகள் நோய் பாதிப்பில் உயிரிழப்பை சந்திக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில், மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, இயங்கி வருகின்றன. பிரதம மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திரா என்ற திட்டத்தில், மத்திய அரசின் மருந்துகள் துறையின் கீழ்
தொடங்கப்பட்டுள்ள இந்த மருந்தகங்களில், மிகக் குறைந்த விலைக்கு தரமான மருந்துகள் வழங்கப்படுவது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. 

இந்த மருந்தகங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோயாளிக்கான மருந்துகள், செரிமான பாதிப்பு, கொழுப்பு தடுப்பு மருந்துகள், சத்து மாத்திரைகள், இருமல், கண், தோல் உள்ளிட்ட முக்கிய உடல் நிலை பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை பிற மருந்தகங்களில் வாங்கும் விலையைவிட 70% குறைந்த விலைக்கு, மக்கள் மருந்தகங்களில் கிடைத்து வருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மாதந்தோறும் மாத்திரை, மருந்துகளை செலவிடும் ஏராளமானோர் இதைப்பயன்படுத்தி வருகின்றனர். பிற மருந்தகங்களில் சர்க்கரை நோய்க்கு மாதம் ரூ.800-க்கு
வாங்குவது, இங்கு ரூ.200-க்கு மலிவு விலையில் கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிற மருந்துகளும் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

குழந்தைகளின் உயிரை பேணிய இந்திரா தனுஷ் தடுப்பூசித்திட்டம்:

ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை தர வேண்டியது அவசியம். குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு முன்னதாகவே 5 தடுப்பு மருந்துகளைக் குழந்தைக்கு தரவேண்டும் (Vaccination for 0-5 years babies) என்பது அவசியம். இதைத் தவறவிட கூடாது. தேசிய அளவில் ஆயிரம் குழந்தைகளில் 25 குழந்தைகள் பல்வேறு நோய் தொற்று காரணங்களால் உயிரிழக்கின்றன. குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் அளிப்பதன் மூலம் இந்த விகிதாராசரத்தை தேசிய அளவில் 12 குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே தீவிர தடுப்பூசித் திட்டங்களால் அம்மை மற்றும் போலியோ நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.  தற்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  தேசிய அளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.7 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் போலியோ, டிப்தீரியா, வாந்தி, டெட்டனஸ், காசநோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, மஞ்சள் காமாலை, ரோட்டோ வைரஸ், டயரியா, நிமோனியா போன்றவை  தடுக்க முடியும். 2014-ஆம் ஆண்டில் மத்திய அரசின் இந்திரா தனுஷ் திட்டம் தொடங்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு
வருகின்றன. தடுப்பூசி போடுவதில் நிர்ணயித்த இலக்கில் 90 சதவீதத்தை அடைவதற்காக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் வழக்கமான நோய்த்தடுப்பூசி திட்டங்களின் கீழ் உள்ளடங்காமல் போன கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதிற்கு கீழுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நோய்த்தடுப்புத் திறனூட்டல் (immunisation) மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக 5 வயதுக்கு கீழ் உள்ளா 3,38,00,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு பல்வேறு நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்பட்டுள்ளது.

உலகை உற்றுநோக்கச்செய்த ஆயுஸ்மான் பாரத் திட்டம்:

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அடுத்தகட்ட வரலாற்று சாதனை என்று
இத்திட்டத்தை கூறவேண்டும். உலக அளவில் சாதனை படைத்த திட்டமாக ஆயுஸ்மான் பாரத் இடம்பெற்றுள்ளது. ஆயுஷ்மான் பாரத் சாதாரண, சாமானிய மக்களுக்கும் சுகாதாரத் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய அரசு முன்னெடுத்து வைக்கிறது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தொடங்கி வைத்தார். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத் திட்டங்களில் உரிய பலன் கிடைக்கும் வகையில், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத் திட்டம்)  செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆரோக்கிய நலத் திட்டத்தின் மூலம், சுகாதார நலத்திட்டத்தை மக்கள் விருப்பத்திற்கேற்ப, மத்திய அரசு, புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். 10.74 கோடி குடும்பங்களுக்கு மேல் (ஏறத்தாழ 50 கோடி பயனாளிகள்) இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற தகுதியுள்ளவர்கள். உடனடியாக ரொக்கமாக பணம்
செலுத்தாமலேயே, ஆவணங்கள் எதுவுமின்றி பயனாளிக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அதிகபட்ச மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது. நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல், தகுதி படைத்த குடும்பங்களுக்கு தரமான மருத்துவ சேவையை இந்தத் திட்டம் வழங்குகிறது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் 71-வது சுற்று கணக்கெடுப்பின்படி, 85.9 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கும், 82 சதவீத நகர்ப்புற குடும்பங்களுக்கும் சுகாதாரக் காப்பீடு இல்லாதது தெரியவந்துள்ளது. பெரும் மருத்துவச் செலவு மக்களை கடனாளியாக்கி விடுகிறது. கடன் வாங்கி 24 சதவீத கிராமப்புற மக்களும், 18 சதவீத நகர்ப்புற மக்களும் மருத்துவச் சேவை பெறுவதாக இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் இத்தனை சிக்கல்களை எதிர்கொள்ள கூடாது என்ற நோக்கிலேயே இச்சாதனை திட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிஜிட்டலிலும் சுகாதாரச்சேவை:

மேற்கண்ட திட்டங்களோடு சேர்த்து, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக Swasth Bharat மற்றும் Mera Aspataal செயலி வெளியிடப்பட்டது.
Swasth Bharat செயலியின் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான வழிமுறைகள், அனைத்து விதமான நோய்கள் குறித்த விவரம், அதனை தடுக்கும் வழிமுறை, நோயின் அறிகுறி, முதலுதவி செய்தல் போன்றவற்றை பற்றி சாதாரண மக்களும் அறிந்துகொள்ள முடியும். Mera Aspataal செயலியின் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இருந்து கருத்து பெறப்படும். ஆலோசனைகள் பதிவு செய்யப்படும். அனைத்து பொதுத்துறைமற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பதிவு செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் ஆராயப்பட்டு மக்களுக்கான மருத்துவ சேவையின் தரம் மேலும் மேம்படுத்தப்படும்.

இந்தியாவின் தரத்திற்கு இதுவே சான்று:

எபோலா மற்றும் ஜிகா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்த நேரத்தில் கடினமான சூழ்நிலையை இந்தியா எப்படி எதிர்கொண்டது என்பதை மக்கள் இந்த நேரத்தில் மறக்க கூடாது. உலகில் பல நாடுகளும் அந்த நோயை எதிர்கொள்ள முடியாமல் திணறின. பல நாடுகளின் ஜி.டி.பி குறையும் அளவிற்கு தாக்கம் இருந்தது. ஆனால் இந்தியாவில் மேம்பட்ட மருத்துவ சேவையினால், அரசும், தன்னார்வலர்களும் இணைந்து ஆற்றிய பணியினால் அப்படிப்பட்ட இக்கட்டான நிலையையும் சாதுர்யமாக எதிர்கொள்ள முடிந்தது.

உலகத்தரத்திலான மருத்துவ சேவை ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது. சுகாதார துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்களை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் அளவிற்கு சாதனை படைத்துள்ளது என்பதே உண்மை.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2 hours ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

2 hours ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

3 hours ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

4 hours ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

7 hours ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

7 hours ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

7 hours ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

8 hours ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

8 hours ago

மும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை!

9 hours ago

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்!

9 hours ago

தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்!

9 hours ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு!

9 hours ago

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

23 hours ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

1 day ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

1 day ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

1 day ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

1 day ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

1 day ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

1 day ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

1 day ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

1 day ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

1 day ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

1 day ago

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

1 day ago

திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு!

1 day ago

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது!

1 day ago

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

1 day ago

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

1 day ago

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்

1 day ago

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

1 day ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.

1 day ago

இந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

தேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

அமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்!

1 day ago

தமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை!

1 day ago

”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

2 days ago

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

2 days ago

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.

2 days ago

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.

2 days ago

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

3 days ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

3 days ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

3 days ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

3 days ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.

3 days ago

புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

3 days ago

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

3 days ago

சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.

3 days ago

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

3 days ago

மத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.

3 days ago

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

3 days ago

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - முதல்வர் பழனிசாமி

4 days ago

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

4 days ago

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு!

4 days ago

உத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.

4 days ago

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.

4 days ago

கடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.

4 days ago

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.

4 days ago

ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.

4 days ago

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு!

5 days ago

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது!

5 days ago

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு!

5 days ago

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

5 days ago

சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து!

4 days ago

ஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா!

5 days ago

தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்!

5 days ago

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது! - தமிழக அரசு

5 days ago

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

5 days ago

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

5 days ago

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு!

5 days ago

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுகிறது

6 days ago

புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; தமிழக அரசின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பு.

6 days ago

"பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை" -யுஜிசி

6 days ago

"சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - திமுக

6 days ago

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்.

6 days ago

ஆக.16 ல் நடக்கவிருந்த வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

6 days ago

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97பேர் உயிரிழப்பு!

6 days ago

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

6 days ago

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

6 days ago

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு!

6 days ago

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி

6 days ago

இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை - தமிழக அரசு

6 days ago

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

6 days ago

கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் - முதல்வர்

6 days ago

பிற மாவட்டங்களிலும் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது - முதல்வர்

6 days ago

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது - முதல்வர்

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை