Skip to main content

Breaking News

அணுகுண்டுகளாலும் அழிக்க முடியாத மனிதர்!

August 09, 2018
Image

கா.அருண்

கட்டுரையாளர்

Image

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என இரண்டு அணு குண்டு தாக்குதல்களிலும் இருந்து உயிர்தப்பிய அதிசய மனிதர் பற்றி தெரியுமா?

73 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஒட்டுமொத்த ஜப்பான் தேசத்தையும் புரட்டிப்போட்ட நாள் என்றே கூற  வேண்டும்.. அதுவரை உலகம் கண்டிராத ஒரு மோசமான சம்பவத்தை ஜப்பானிய மக்கள் அன்றைய தினத்தில் சந்தித்தனர்.

மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமான யுத்தம் என வர்ணிக்கப்படுவது இரண்டாம் உலகப் போர், இதில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேர் நேரடியாக யுத்தம் செய்தனர். சுமார் 7 கோடி பேரை பலிவாங்கிய இந்த போரின் உச்சகட்ட கொடூரத்தை ஜப்பான் சந்தித்தது.

மிட்சுபிஃஷி நிறுவனத்தில் பணியாற்றிவந்த Tsutomu Yamaguchi என்பவர் ஹிரோஷிமா நகரத்தில் பணி நிமித்தமாக 3 மாத காலம் தங்கியிருந்தார். அவருடைய வேலையை முடித்துக்கொண்டு அவரும் அவருடைய சகாக்கள் இருவரும் ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் Hanco எனப்படும் பயண முத்திரையை தங்குமிடத்திலேயே விட்டுவிட்டுவந்ததை அறிந்த Yamaguchi அதை எடுத்துவருவதற்காக தங்குமிடத்திற்கு தனியாக திரும்பினார்.

அந்த சமயத்தில் தான் அந்நகரில் அமெரிக்காவின் B-29 ரக குண்டு வீசும் விமானம் மூலம், லிட்டில் பாய் என அழைக்கப்பட்ட அணு குண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அன்றைய தினம் காலை 8.15 மணியளவில் வீசியது. 

Yamaguchi இருந்த இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் அந்த அனுகுண்டு வீசப்பட்டிருந்தது. குண்டுவீச்சினால் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரின் கண்களின் பார்வை தற்காலிகமாக பறிபோனது, அவரின் உடலின் மேற்பகுதி முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன. வலது காதில் செவித்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் மெல்ல ஊர்ந்து அருகில் இருந்த air-raid shelter என்றழைக்கப்படும் வான் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் அறைக்கு சென்றார். போர் சமயத்தில் ஜப்பானின் பல பகுதிகளில் பதுங்குகுழிகள் போன்ற பாதுகாப்பான தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவருடைய சகாக்களும் பாதுகாப்பாக இருந்ததையறிந்து அவர்களுடன் இணைந்த அவர், அன்றைய இரவை ஹிரோஷிமாவிலேயே கழித்தார். இந்த கோர தாக்குதலில் சுமார் ஒரு லட்சத்து 40,000 பேர் மரணமடைந்த நிலையில் இவர் உயிர் தப்பியது ஒரு அதிசய நிகழ்வாகும்.

உயிர் தப்பிய Tsutomu Yamaguchi, அடுத்த நாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் 180 மைல் தூரத்தில் இருக்கும் தன் சொந்த ஊரான நாகசாகிக்கு பயணமானார். 

நாகசாகிக்கு சென்று சேர்ந்த அவர் தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுதுடன், ஆகஸ்ட் 9ஆம் தேதியன்றே பணிக்கு திரும்பியுள்ளார். ஹிரோஷிமாவில் அவருக்கு நேர்ந்த நிகழ்வுகளை தனது உயரதிகாரியிடம் Yamaguchi விவரித்துக்கொண்டிருந்த போது சரியாக காலை 11 மணியளவில் மீண்டும் ஒரு முறை அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று ஹிரோஷிமாவில் வீசியதைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த  ‘Fat Man’ என்ற அணு குண்டினை அந்த நகரின் மீது வீசியது..

சென்ற முறை போலவே இம்முறையும் Tsutomu Yamaguchi-யின் அலுவலகத்தில் இருந்து 3 கிமீ தூரத்திலேயே இந்த அணு குண்டு வீசப்பட்டிருந்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக ஹிரோஷிமாவில் ஏற்பட்டது போன்று பெரியளவில் காயங்கள் அவருக்கு ஏற்படவில்லை. இருப்பினும் அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான காய்ச்சல் இருந்தது.

நாகசாகியில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் 70,000 பேர் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை அதிர்ஷ்டவசமாக Tsutomu Yamaguchi உயிர்தப்பினார். ஜப்பானில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்களே இந்த உலகில் இதுவரை நடத்தப்பட்ட முதல் மற்றும் கடைசி அணுகுண்டு தாக்குதல்கள் என்ற நிலையில் அந்த இரண்டு தாக்குதல்களிலுமே சிக்கி அதிசயிக்கத்தக்க வகையில்  Tsutomu Yamaguchi மட்டுமே உயிர்தப்பியுள்ளார் என்பது விஷேசமானது.

இரண்டு அணுகுண்டு தாக்குதல்களையும் சந்தித்து உயிர்தப்பியவராக Tsutomu Yamaguchi, ஜப்பான் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒருவருக்கு மட்டுமே ஜப்பானிய அரசு அத்தகைய அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

இதனிடையே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என இரண்டு தாக்குதல்களிலும் இருந்து தனித்தனியாக தப்பியவர்கள் பலர் அதன் பின்னர் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்த நிலையில் Tsutomu Yamaguchi 2010ஆம் ஆண்டில் தனது 93 வயதில் வயிற்றுப்புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

தன்னுடைய அனுபவங்கள் குறித்து Tsutomu Yamaguchi புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது தவிர கவிதை புத்தகம் ஒன்றும் எழுதியுள்ளார். இவரின் அனுபவங்களை குறும்படமாக்கி அதனை ஐ.நா சபையில் திரையிட்டுள்ளனர். அப்போது அணு ஆயுதங்கள் தயாரிப்பினை கட்டுப்படுத்துமாறு அவர் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்தார். Twice Survived: The Doubly Atomic Bombed of Hiroshima and Nagasaki என்ற அவரின் டாகுமெண்டரி குறும்படம் உலகப் பிரசித்தி பெற்றதாக பின்னாளில் மாறியது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தமிழகத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார காரை அறிமுகப்படுத்தினார் முதல்வர் பழனிசாமி!

1 hour ago

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி;மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்வு.

4 hours ago

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிரம்; இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு.

4 hours ago

கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.

4 hours ago

ஒரு நாள் போட்டிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஓய்வு...!

12 hours ago

குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தோல்வி!

16 hours ago

கர்நாடக முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

16 hours ago

திமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் வெட்டிக்கொலை...!

17 hours ago

கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்புள்ள நிலையில் பெங்களூருவில் 144 தடை...!

18 hours ago

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு...!

20 hours ago

சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க முடியாததால் அரசியலில் ஹீரோவாக முயற்சிக்கிறார்; நடிகர் சூர்யா மீது தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் காட்டம்...

1 day ago

அதிமுக தொண்டர்களை திமுக பக்கம் வளைக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி...

1 day ago

சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு விண்ணில் பாய்கிறது ஆதித்யா விண்கலம்;ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி...

1 day ago

8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை!

2 days ago

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

2 days ago

தேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்

2 days ago

இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.

2 days ago

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....!

2 days ago

நவீன டெல்லியின் சிற்பி ஷீலா தீட்சித் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள்.

3 days ago

சென்னை மாநகரில் 114 நீர் நிலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை.

3 days ago

சந்திரயான் 2-வை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்.

3 days ago

“மறைந்த ஷீலா தீக்‌ஷித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; டெல்லியில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்!” - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா..

3 days ago

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்; அவருக்கு வயது 81.

3 days ago

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது? : பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி

3 days ago

“ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்!” - முதல்வர் பழனிசாமி

4 days ago

நீர் மேலாண்மை இயக்கத்தை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது!” - முதல்வர் பழனிசாமி

4 days ago

"வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம்!" - நடிகர் சூர்யா

4 days ago

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீடிக்கும் கனமழையால், குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.

4 days ago

அசாம், பீகாரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு.

4 days ago

தமிழகத்தில் நீளும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு; நெல்லை மேலப்பாளையத்தில் அதிரடி சோதனை.

4 days ago

கர்நாடகா சட்டமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!

4 days ago

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி வீதம் நீர் திறப்பு!

4 days ago

“நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு...!” - சென்னை வானிலை மையம்

4 days ago

ICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்!

4 days ago

நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...!

5 days ago

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

5 days ago

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இரங்கல்...!

5 days ago

கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது...!

5 days ago

கர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..!

5 days ago

வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு!

5 days ago

தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்

5 days ago

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...!

6 days ago

வரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு

6 days ago

சந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

6 days ago

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...!

5 days ago

அயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்

6 days ago

அயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்

6 days ago

கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...!

6 days ago

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....!

5 days ago

துப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....!

6 days ago

சென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....!

6 days ago

நீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி

6 days ago

உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

1 week ago

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்

1 week ago

உலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....!

1 week ago

சென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...!

1 week ago

தமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....!

1 week ago

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்

1 week ago

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்

1 week ago

“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...!” - அன்புமணி ராமதாஸ்

1 week ago

உலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...!

1 week ago

வேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...!

1 week ago

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...!

1 week ago

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

1 week ago

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை! - மாநில தேர்தல் ஆணையம்

1 week ago

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...

1 week ago

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...!

1 week ago

தேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...!

1 week ago

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...!

1 week ago

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!

1 week ago

சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!

1 week ago

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

1 week ago

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது!

1 week ago

139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது!

1 week ago

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

1 week ago

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...!

1 week ago

வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

1 week ago

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.

1 week ago

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

1 week ago

அயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 week ago

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.

1 week ago

கர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா!

1 week ago

கர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.

1 week ago

உலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி!

1 week ago

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

1 week ago

நாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்

1 week ago

நீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...!

1 week ago

நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

1 week ago

மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்!

1 week ago

பாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்!

1 week ago

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்

1 week ago

ஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்!

1 week ago

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...!

1 week ago

இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை!

1 week ago

தமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு!

1 week ago

சமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு! - வைகோ

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்!

1 week ago

உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு!

1 week ago

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை