Skip to main content

வடகிழக்கின் ஆதரவு நரேந்திர மோடிக்கா? ராகுலுக்கா?

April 09, 2019
Image

கா. அருண்

கட்டுரையாளர்

Image

7 சகோதரி மாநிலங்கள் (7 sisters) என்று அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலங்களில் 1980களில் நிர்வாக வசதிக்காக 8வது மாநிலமாக அசாமும் இணைக்கப்பட்டது. அசாம், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள் என அறியப்படுகின்றன. 

இந்தியாவின் இயற்கை வளம் அதிகம் நிறைந்த பகுதியாக வடகிழக்கு மாநிலங்கள் விளங்குகின்றன. புவியியல் ரீதியாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்த மாநிலங்கள் அண்டை நாடுகளான சீனா, நேபாளம், வங்காளதேசம், பர்மா (மியான்மர்), பூடான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டின் எல்லையை ஒட்டியே அமைந்துள்ளது.

இம்மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 4% மட்டுமே. அசாம் மாநிலத்தை தவிர பிற மாநிலங்கள் அனைத்துமே அளவில் மிகச்சிறியவை. இவை சென்னையின் மக்கள் தொகைக்கு கூட ஈடாகாது. மேற்குவங்கத்தில் உள்ள 21 கி.மீ நீளம் கொண்ட குறுகிய பகுதியான ‘சிலிகுரி பாதை’ இந்தியாவின் இதர பகுதிகளோடு வடகிழக்கு மாநிலங்களை இணைக்கிறது.

பொருளாதார ரீதியில் மற்ற மாநிலங்களை விட சற்று பின்னடைவுடன் காணப்படும் இந்த மாநில மக்கள் பெருமளவில் மலைவாழ் மக்களாகவோ, பழங்குடிகளாகவோ உள்ளனர். 

ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், பாரம்பரிய ரீதியாக தனித்தன்மை கொண்டிருக்கின்றன. இதர இந்திய பகுதிகளில் காணப்படாத இயற்கை வளம் இம்மாநிலங்களில் நிறைந்திருக்கின்றன.

அரசியல் ரீதியாக வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பாஜக செல்வாக்குடன் காணப்படுகிறது. 6 மாநிலங்களில் பாஜக நேரடியாகவும், 2 மாநிலங்களில் பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆட்சியில் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் நிலவரத்தையும் சற்று விரிவாக பார்க்கலாம். 

அசாம்:

வடகிழக்கு மாநிலங்களுள் அசாம் மட்டுமே மக்கள் தொகையில் பெரிய மாநிலமாகும். வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் பாதிக்கும் மேலான (14) தொகுதிகள் அசாமில் தான் உள்ளது. 

அசாமை பொருத்தவரை பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தவிர்த்து பத்ருதின் அஜ்மல் தலைமையிலான அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), பிரஃபுல்லா குமார் மஹந்தா தலைமையிலான அசோம் கன பரிஷத் (AGP), ஹக்ரமா மொஹிலரி தலைமையிலான போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) ஆகியவை குறிப்பிடத்தக்க கட்சிகளாக உள்ளன. இங்கு தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

கடந்த 2001 முதல் 2016 வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை அப்புறப்படுத்திவிட்டு அறுதிப்பெரும்பான்மையுடன் வென்று முதல் முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது பாஜக. கடந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது. 50% அதிகமான இடங்களை அக்கட்சி வென்றுள்ளது.

கடந்த ஜனவரியின் மத்தியில் ஆளும் பாஜக அரசு, குடியுரிமை சட்டதிருத்த மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்தது. அம்மசோதாவிற்கு அசாம் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை கண்டித்து பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த AGP திடீரென வெளியேறியது, அமைச்சரவையில் அக்கட்சி சார்பில் அங்கம் வகித்த 3 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இருப்பினும் அந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து இரண்டு மாதகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பியது AGP.
மாநில கட்சிகளான AGP மற்றும் BPF ஆகியவை பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது அக்கட்சியின் பிளஸ் பாயிண்டுகளாகும். 

இருப்பினும் அசாம் மாநில பாஜகவின் முக்கியப் புள்ளியான மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு போட்டியிட வாய்ப்பு தராதது அவரது ஆதரவாளர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்களை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஒரு தொகுதியில் போட்டியிடுவது சிரமத்தை ஏற்படுத்தும் என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது. இதே போல அம்மாநிலத்தில் பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலைகளை வேண்டியவர்களுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை அனைத்தும் பாஜக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.
 
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்தே வருகிறது. இம்முறை அக்கட்சி இங்கு தனித்தே களம் காணுகிறது. 

Barpeta, Dhubri மற்றும் Karimganj மக்களவை தொகுதிகளில் கணிசமாக வாழும் வங்காளி மொழி பேசும் இஸ்லாமியர்களிடம் மட்டுமே UDF கட்சி செல்வாக்குடன் உள்ளது. எனினும் இந்த கட்சிக்கு செல்லும் அச்சமூக வாக்குகளில் ஒரு பங்கை காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. 

2009 முதல் 2014 வரை நடைபெற்ற நான்கு நாடாளுமன்ற தேர்தல்களை கணக்கில் கொண்டால். அசாமில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தொடர்ந்து இழந்து வருவதும், அந்த இடத்தை பாஜக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதும் கண்கூடாகத் தெரிகிறது. இம்முறை பாஜகவிற்கு நம்பிக்கை தரக்கூடிய மாநிலங்களில் அசாம் முக்கியமானதாக மாறியுள்ளது. 

2014 தேர்தலில் பாஜக 7 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் UDF தலா 3 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மோதலில், பாஜகவின் கையே மேலோங்கியுள்ளது. இருப்பினும் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதே கள நிலவரமாகும்.

அருணாச்சல பிரதேசம்:

அசாம், நாகலாந்து மாநிலங்களுடனும், பூடான், மியான்மர் மற்றும் சீனா ஆகிய அண்டை நாடுகளுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அரசியல் பாஜக, காங்கிரஸ் மற்றும் அருணாச்சல மக்கள் கட்சி (NPP) ஆகிய கட்சிகளை சுற்றியே உள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் இது அரசியல் ஸ்திரமற்ற மாநிலமாக உருமாறியுள்ளது.

2 நாடாளுமன்ற மற்றும் 60 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அருணாச்சல பிரதேசத்தில் முதல் கட்டமான ஏப்ரல் 11 அன்று நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

கடந்த 2014 தேர்தலில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் 42ல் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற தொகுதிகளை பொருத்தவரையில் ஒன்றில் காங்கிரஸும் மற்றொன்றில் பாஜகவும் வென்றிருந்தன.

கடந்த ஏப்ரல் 2015ல் அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஒரு ஆண்டிற்கு நீடித்தது. உட்கட்சி பூசலில் அம்மாநில முதல்வராக இருந்த பெமா காண்டு மொத்தமுள்ள 42 எம்.எல்.ஏக்களில் 41 பேருடன் மாநில கட்சியான NPPல் ஐக்கியமானார். இதன் மூலம் அருணாச்சலில் ஆட்சியை பறிகொடுத்து பலத்த அடிவாங்கியது காங்கிரஸ் கட்சி.

இதன்பின்னர் அடுத்த சில மாதங்களிலேயே NPP கட்சியில் இருந்து விலகி பெமா காண்டு மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் தற்போது  48 எம்.எல்.ஏக்களுடன் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது.

அருணாச்சலை பொருத்தவரை NPP கட்சியானது பாஜகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் இருந்தாலும் அங்கு மும்முனை போட்டியே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸும் இங்கு தனித்தே களம் காண்கிறது.

அனைத்து சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ‘மிஷன் 60+2’ என்ற தாரக மந்திரத்துடன் பாஜக இத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரண் ரிஜுஜு மத்திய அமைச்சராக உள்ளார்.

இரண்டு தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் களமிறங்காததாலும், மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நாளில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதாலும் வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியே இல்லாமல் 3 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இது அக்கட்சிக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. 

மேகாலயா:

இந்தியாவின் மழைப்பொழிவு அதிகம் நிறைந்த மாநிலம் என்ற பெருமை கொண்ட மேகாலயாவில் காடுகள் அதிகம் உள்ளது. மாநிலத்தின் பரப்பளவில் 70% காடுகள் என்பது சிறப்பானதாகும். உலகிலேயே அதிக மழை பொழிவு கொண்ட பகுதியாக அறியப்படும் ‘சிரபூஞ்சி’ மேகாலயாவில் தான் உள்ளது. மழைபொழிவுக்கான உலக சாதனை புத்தகத்தில் மேகாலயாவின் Mawsynram இடம்பெற்றுள்ளது. இயற்கை வளம் அதிகம் என்றாலும் தொழில்துறை, இதர வளர்ச்சியில் இந்த மாநிலம் பின்தங்கியே உள்ளது.

இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக வாழும் 3 மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்கு 75% அதிகமானோர் கிறிஸ்தவர்களே. இம்மாநிலத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸ் மற்றும் NPP ஆகியவையே பிரதானக் கட்சிகளாகும். இருப்பினும் NPP கட்சியுடன் பாஜக, மக்கள் ஜனநாயக முன்னணி (PDF), HSPDP, UDP ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தாலும், NPP மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றின. NPP கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா முதல்வராக உள்ளார்.

இங்குள்ள Shillong, Tura ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் மற்றும் NPP தலா ஒரு தொகுதியில் வென்றன. இந்த முறையும் இந்த இரண்டு கட்சிகளிடையே தான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் NPP அங்கம் வகிப்பதால் பாஜக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.

Tura தொகுதியை பொருத்தவரையில் காங்கிரஸின் முகுல் சங்மா மற்றும்
NPP வேட்பாளர் அகதா சங்மா ஆகியோருக்கு இடையில் தான் உண்மையான போட்டி. இதே போல Shillong தொகுதியில் சிட்டிங் எம்.பியான காங்கிரஸின் VINCENT H. PALA, பாஜகவின் SANBOR SHULLAI மற்றும் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் (UDP) JEMINO MAWTHOH ஆகியோருக்கு இடையில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர்:

கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றில் பழமையை பறைசாற்றும் மணிப்பூரின் மக்கள் தொகையில் 40% பேர் பழங்குடியினரே. ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் இங்கு சம அளவில் வசிக்கின்றனர். சுற்றுலாவையே இந்த மாநிலம் பெரிதும் நம்பியுள்ளது.

மணிப்பூரில் காங்கிரஸ் மற்றும் பாஜக பிரதான கட்சிகளாக உள்ளன. இவை தவிர நாகா மக்கள் முன்னணி, npp, லோக் ஜனசக்தி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை சிறிய அளவில் செல்வாக்கு பெற்றுள்ளன. திரிணாமுல் காங்கிரஸை தவிர்த்து மற்ற 3 கட்சிகளுமே பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

inner manipur, outer manipur என மொத்தம் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. 2009 மற்றும் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் காங்கிரஸே இரண்டு தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றிருந்தாலும் கூட கூட்டணி கட்சிகளின் உதவியுடன் முதல் முறையாக பாஜக இங்கு ஆட்சி அமைத்தது. 

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 8 எம்.எல்.ஏக்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவும் பாஜவில் இணைந்தனர். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாநில அரசியலிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. சமீபத்தில் ஒரே நாளில் பாஜக பிரமுகர்கள் 21 பேர் காங்கிரஸில் இணைந்தனர், அதற்கு அடுத்த நாளில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் 71 பேர் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் தேர்தல் பரபரப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது.

இந்தத் தேர்தலில் வடகிழக்கு பிராந்தியத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது மணிப்பூர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். 

திரிபுரா: 

வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் அரசியல் ரீதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருப்பது திரிபுரா. அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களுள் ஒன்றாக (87.75%) விளங்கும் திரிபுராவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கோலோச்சி வந்தது. 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்த அக்கட்சிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பாஜக.

வெறும் 1.5 சதவீத அளவிற்கு மட்டுமே வாக்கு வங்கியை கொண்டிருந்த பாஜக, அறுதிப்பெறும்பான்மையுடன் வெற்றி பெற்று நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்தது. காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போட்டியாக ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

தற்போதைய சூழலில் திரிபுரா மக்களின் அபிமானத்தை பாஜக பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது. 25 ஆண்டுகளாக வலதுசாரி ஆட்சியை பார்த்து பழகிப்போன அம்மாநில மக்கள் புதிய பாதையில் பயணிக்கத்தொடங்கியுள்ளனர்.

வலதுசாரி கூட்டணியில் CPM, CPI, RSP, AIFB ஆகிய கட்சிகள் ஓரணியிலும், பாஜக, IPFT கட்சிகள் ஓரணியிலும், காங்கிரஸ் கட்சி தனித்தும் இம்முறை தேர்தலை சந்திக்க உள்ளன.

கடந்த 3 முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அங்குள்ள இரண்டு தொகுதிகளிலுமே மார்க்ஸிஸ்ட் கட்சியே வென்றிருந்தது. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என மும்முனை போட்டி ஏற்பட்டிருந்தாலும் கூட இம்முறை பாஜகவே இரண்டையும் கைப்பற்றும் என்பதே கள யதார்த்தமாக உள்ளது. முதல்முறையாக இந்த மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் எம்.பிக்கள் தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாகலாந்து:

வடகிழக்கு மாநிலங்களின் காஷ்மீர் என நாகலாந்தினை குறிப்பிடலாம். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரை பிரதானமாகக் கொண்ட நாகலாந்தில் காஷ்மீர் போலவே தீர்க்கப்படாத பிரச்சனை நீடித்து வருகிறது. எழில் கொஞ்சும் காட்சிகளை உள்ளடக்கிய நாகலாந்தில் வாழும் நாகா இன மக்களில் சில பிரிவினர் Greater Nagalim என தனி பிரதேசம் கோரி ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மர் நாட்டின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும். இது நாகலாந்து அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. 

10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு கடந்த 2003 முதலே நாகாலாந்தின் ஜனநாயகக் கூட்டணி அங்கு ஆட்சியில் இருந்தது. இதில் பாஜக, NPF, NPP, NDPP, JDU ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இங்கு ஒரே ஒரு பாரளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது.

கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், முதல்வராக இருந்த Neiphiu Rio ராஜினாமா செய்துவிட்டு  நாகாலாந்தின் ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் K.V. Pusaவை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்ததாக அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை இதன் மூலம் அவர் பெற்றார்.

தற்போதைய சூழலில் நாகலாந்தில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில்  K L Chishi, ஆளும் கட்சியான NDPPயின் சிட்டிங் எம்.பியான Tokheho Yepthomi மீண்டும் களத்தில் குதித்துள்ளார், NPP சார்பில் Hayithung Tungoe என்பவர் களமிறங்குகிறார். இதுமட்டுமல்லாமல் சுயேட்சையாக Thromwa Konyak என்பவரும் களத்தில் உள்ளார்.

NDPP வேட்பாளருக்கு பாஜக ஆதரவை அளித்துள்ளது. பிரதான எதிர்கட்சியான  Naga People's Front வாக்குகள் சிதறாமல் இருக்க காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. அக்கட்சி சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட்வில்லை என்றாலும் அக்கட்சியின் மொத்தமுள்ள 27 எம்.எல்.ஏக்களில் 7 பேர் NDPP வேட்பாளருக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிசோரம்:

இந்தியாவிலேயே பழங்குடியின மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலமாக மிசோரம் விளங்குகிறது. இந்த மாநிலத்தின் காடுகளின் பரப்பளவு 91% ஆக உள்ளது. அதே போல இந்தியாவில் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் மிசோரம் உள்ளது. இங்கு கிறிஸ்துவர்களே (87%) அதிகம்.

பல கட்சி ஜனநாயக கட்டமைப்பு என்பதே மிசோரம் மாநிலத்தின் அரசியல் சூழலாக உள்ளது. மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் காங்கிரஸ் ஆகியவையே ஆட்சியை கைப்பற்றுமளவிற்கான பிரதான கட்சிகள் ஆகும். 1972 முதல் இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.

7 சிறிய கட்சிகள் இணைந்து ஜொராம் மக்கள் இயக்கம் (ZPM) கடந்த 2018ல் உருவானது.

கடந்த டிசம்பரில் இங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் MNF (பாஜக கூட்டணி) தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸால் 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ZPM பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இங்கு ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது. 2009 மற்றும் 2014 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 
இம்முறை ஆளும் MNF சார்பில் Lalrosanga வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல சுயேட்சையாக பத்திரிக்கையாளர் Lalnghinglova Hmar களமிறங்கியுள்ளார். இவருக்கு ZPM மற்றும் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளன. இந்த இரண்டு பேருக்கு மத்தியில் தான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பாஜகவும் தன் பங்கிற்கு Nirupam Chakma என்பவரை களமிறக்கியுள்ளது. 


சிக்கிம்: 

இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதும், பரப்பளவில் இரண்டாவது சிறிய மாநிலமாகவும் விளங்கும் சிக்கிம் இயற்கை எழில் நிறைந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரியதும், உலகின் 3வது பெரியதுமான கஞ்சஞ்சங்கா சிகரம் சிக்கிமில் தான் உள்ளது. மாநில பரப்பளவில் 35%  Khangchendzonga தேசிய சரணாலயம் ஆக்கிரமித்துள்ளது. நறுமணப்பொருட்கள் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பகுதியாக சிக்கிம் விளங்குகிறது.

நாட்டிலேயே இயற்கை விவசாயத்திற்கு மாறிய முதல் மாநிலம் என்ற அடையாளமே சிக்கிமை தனித்துவமாக்கியுள்ளது. சுமார் 6 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட சிக்கிமில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் 32 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது சிக்கிம்.

சிக்கிம் அரசியலில் முதல்வர் Pawan Kumar Chamling தலைமையிலான Sikkim Democratic Front (SDF) மற்றும்     Prem Singh Tamang தலைமையிலான Sikkim Krantikari Morcha (SKM) ஆகிய இரண்டு கட்சிகளே பிரதான போட்டியாளர்கள். இங்கு பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தங்களது இருப்பை காட்டிக்கொள்ளும் கட்சிகளாகவே வலம்வருகின்றன.

1994ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறையாக முதல்வர் பதவியை அலங்கரித்து வருபவர் Pawan Kumar Chamling. அசைக்கமுடியாத சக்தியாக திகழும் அவருக்கு அடுத்த நிலையில் எதிர்கட்சியான SKM  உள்ளது. இதனிடையே இந்திய முன்னாள் கால்பந்து பந்து நட்சத்திர வீரரான பாய்சுங் பூட்டியா புதிதாக தொடங்கிய Hamro Sikkim கட்சியும் இந்த முறை தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளது.

சிக்கிமின் ஒரே நாடாளுமன்ற தொகுதியில் SDF DB Katwal-ஐ எதிர்த்து SKM கட்சியின் Indrahand Subba களமிறங்குகிறார். இந்த இரண்டு கட்சிகளுமே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 8 மாநிலங்களின் தற்போதைய அரசியல் சூழல் பாஜகவிற்கு சாதகமாக தோன்றினாலும், அக்கட்சி கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவினை வடகிழக்கு மாகாணங்கள் அனைத்தும் எதிர்கின்றன. இது பாஜகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான வாக்குகளாக மாறுமா? அதனை காங்கிரஸ் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகும். இவை அனைத்திற்கும் விடை மே 23ல்...

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

8 minutes ago

ஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி

2 hours ago

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

3 hours ago

சிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி!

3 hours ago

இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி

3 hours ago

மகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு!

3 hours ago

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது!

17 hours ago

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு!

18 hours ago

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

19 hours ago

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்!

19 hours ago

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்!

20 hours ago

அமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி

23 hours ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!

23 hours ago

இடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி

23 hours ago

பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

23 hours ago

திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு!

1 day ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

1 day ago

ஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்!

1 day ago

சென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

1 day ago

அதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

1 day ago

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு!

1 day ago

சோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு!

1 day ago

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

1 day ago

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி!

1 day ago

சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

1 day ago

மதுரையில் மனைவியை துன்புறுத்தியதாக கூடல்புதூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மீது வழக்கு!

1 day ago

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

1 day ago

ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

1 day ago

சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை...!

1 day ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது...!

1 day ago

ஜம்மு - காஷ்மீர் - துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

2 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

2 days ago

சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பத் சாவந்த் ராஜினாமா!

1 day ago

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்; அவருக்கு வயது 86!

2 days ago

வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா!

2 days ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி!

2 days ago

சர்வாதிகாரியாக மாறுவேன் : திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

2 days ago

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியமைப்பதில் மீண்டும் குழப்பம்!

2 days ago

இந்தியா - வங்கதேசம் 3வது டி20: இந்திய அணி பேட்டிங்!

2 days ago

அமமுகவில் அதிருப்தியில் இருந்த புகழேந்தி அதிமுகவில் இணைய முடிவு!

2 days ago

வேலூர் வாலாஜாபேட்டையில் சரவணன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை...!

2 days ago

திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என கட்சி விதிகளில் திருத்தம்...!

2 days ago

திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

2 days ago

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி...!

3 days ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு...!

3 days ago

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு....

3 days ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி!

3 days ago

நவ.9 இந்தியாவுக்கு வரலாற்று நாளாக இருக்கும்; இன்றைய நாள் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாள் : பிரதமர் மோடி

3 days ago

கடினமான வழக்குகளையும் தீர்க்க முடியும் என நீதித்துறை நிரூபித்துள்ளது : பிரதமர் மோடி

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது : பிரதமர் மோடி

3 days ago

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்!

3 days ago

நவ. 15 முதல் டிச. 15 வரையிலான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

3 days ago

“இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று” - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: இல,கணேசன்

3 days ago

"நீண்ட நெடுங்காலம் இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது!" - மு.க.ஸ்டாலின்

3 days ago

"உச்சநீதிமன்ற தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது!" - பிரதமர் மோடி

3 days ago

"ராமஜென்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பை வரவேற்கிறேன்!" -அமித்ஷா

3 days ago

தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் திருப்தி அடையவில்லை: சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி கருத்து

3 days ago

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

3 days ago

பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

“அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும்!” - உச்சநீதிமன்றம்

3 days ago

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னதாகவே ராமர் மற்றும் சீதையை இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரம் உள்ளது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு எதிரொலியாக நாளை காலை 11 மணி வரை மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

3 days ago

அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

மீர்பாகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

இந்த வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி..!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலையில் அமித்ஷா ஆலோசனை!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை அடுத்து, மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு: உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!

3 days ago

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் அமைதிகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

4 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் இன்று காலை தீர்ப்பு...!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

4 days ago

மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்!

4 days ago

தமிழக பாஜகவிற்கு 4 பேர் பொறுப்பு தலைவர்களாக நியமனம்!

4 days ago

“அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் நடிப்பேன்!”- ரஜினிகாந்த்

4 days ago

காவி நிறம் என்றால் தீவிரவாதம் என்ற கருத்துக்கு நெற்றியடி: அர்ஜுன் சம்பத்

4 days ago

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த்

4 days ago

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது - ரஜினிகாந்த்

4 days ago

“நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” - கமல்ஹாசன்

4 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29.080க்கு விற்பனை...!

4 days ago

இந்தியாவின் திரை அடையாளங்களாக ரஜினி, கமல் திகழ்கின்றனர்: வைரமுத்து

4 days ago

ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு...!

4 days ago

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி.

4 days ago

பாபர் மசூதி தீர்ப்பு - உ.பி. தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் தலைமை நீதிபதி ஆலோசனை!

4 days ago

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர்...!

4 days ago

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு வன்கொடுமை - 7 சிறுவர்கள் கைது....

4 days ago

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டி- இந்திய அணி அபார வெற்றி.

4 days ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்!

5 days ago

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை !

5 days ago

வரும் 24ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

5 days ago

3 நாள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!

5 days ago

பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்துவைத்தார் கமல்ஹாசன்!

5 days ago

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய சிறப்பு அதிகாரியாக கீதா நியமனம்!

5 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை