​ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 4 மாதங்களில் 46 குழந்தைகள் உயிரிழப்பு!

August 05, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

மகாராஷ்டிர மாநில கிராமம் ஒன்றில் கடந்த 4 மாதங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 46 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அமராவதி நகரில் மேல்காட் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் போதிய விழிப்புணர்வு இன்மை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், போதிய மருத்துவ வசதி இல்லாமை போன்ற காரணங்களில் பல குழந்தைகள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. 

பருவ மழைக்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இறப்பு சம்பவம் பதிவானதாக, அமராவதி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories: India
Image

குழந்தைகள் உயிரிழப்பு: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு

April 17, 2015 1 view Posted By : yuvarajAuthors

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்ததால், மருத்துவர்கள் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையில் போதுமான வசதிகள் உள்ளதாகவும், குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த 3 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதைத்தொடர்ந்து மற்ற குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இறப்பிற்கு மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுவாசக்கோளாறு காரணமாகவும், எடை குறைவாக பிறந்ததன் காரணமாகவும் தான், குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மருத்துவர்கள் குழு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு பிறகு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் பல குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to குழந்தைகள் உயிரிழப்பு