உலக செஸ் சாம்பியன்ஷிப்: விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

March 25, 2016 0 views Posted By : suryaAuthors
Image

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான, தகுதிச் சுற்று தொடரின் 11-வது ஆட்டத்தில் இந்தியன் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கேண்டிடேட் போட்டி என்றழைக்கப்படும் தகுதிச் சுற்று தொடரின் 11-வது சுற்றில் இந்தியன் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி கர்ஜாகின்-னுடன் மோதினார். இருவருக்கு இடையிலான முதல் சுற்றில் கர்ஜாகின் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் வெள்ளைக் காய்களுடன் ஆடிய ஆனந்த், ராஜாவுக்கு முன்பு சிப்பாயை 2-ம் கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். 

இதே போல் கர்ஜாகின்-னும் ஆட்டம் தொடங்கினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 70-வது நகர்த்தலில் கர்ஜாகின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இந்த வெற்றி மூலம் 6.5 புள்ளிகளுடன் ஆனந்த், 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ உள்ளார். இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ளன. 

தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், ஒரு வீரர் மற்ற போட்டியாளருடன் இரண்டு முறை மோத வேண்டும். முடிவில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெறும் வீரர், நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனுடன் உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதுவர்.

Categories: Sports
Image

கார்ல்ஸனை வீழ்த்தி மீண்டும் முடிசூடுவாரா ஆனந்த்?

November 07, 2014 0 views Posted By : suryaAuthors
Image

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டி, ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனும், அவரது போட்டியாளர் விஸ்வநாதன் ஆனந்தும் மோதுகின்றனர். கார்ல்ஸனை வீழ்த்தி, வெற்றி மகுடத்துடன் ஆனந்த் தாயகம் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

5 முறை உலக செஸ் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம்.
1969-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்த் 1988-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். முதல் முறையாக 2000-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ஆனந்த் வென்றார். அதன் பிறகு 2007, 2008 2010 மற்றும் 2012-ம் ஆண்டு என 5 முறை பட்டம் வென்றுள்ளார் ஆனந்த். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனிடம் தோற்ற ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இழந்தார். 1985-ம் ஆண்டு அர்ஜுனா விருது மத்திய அரசால் ஆனந்துக்கு வழங்கப்பட்டது. 1987-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் ஆனந்த் வென்றுள்ளார்.  ராஜுவ் காந்தி கேல் ரத்னா, பத்மபூஷன் மற்றும் பத்மா விபூஷன் விருதுகளையும் ஆனந்த் பெற்றுள்ளார்.

Categories: Sports
Image
Subscribe to உலக செஸ் சாம்பியன்ஷிப்