போக்கோ ஹராம் தீவிரவாதிகளிடம் திரும்பிய பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைந்தனர்

February 20, 2015 0 views Posted By : suryaAuthors
Image

நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளிடம் இருந்து திரும்பிய பிணைக்கைதிகள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்தனர்.

நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் பெண்கள், குழந்தைகள், மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோரைக் கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை என்ன என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதையடுத்து, ஆப்பிரிக்க ஒன்றியப் படைகளுடன் இணைந்து சாத், நைஜர், நைஜீரிய ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கடத்திய 190 பேரை அம்மாத இறுதியில் தீவிரவாதிகள் விடுவித்தனர். அந்த பிணைக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 150 பிணைக்கைதிகள் குடும்பத்தினருடன் தற்போது இணைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டு நடவடிக்கையில், கடந்த வாரம் மட்டும் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  தீவிரவாதிகளின் பதில் தாக்குதல்களும், விரைவில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி எழுந்துள்ள வன்முறைகளும் நைஜீரியாவை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளன.

Categories: World
Image
Subscribe to போக்கோ ஹராம் தீவிரவாதிகளிடம் திரும்பிய பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைந்தனர்