ஸ்ரீரங்கம் தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

February 12, 2015 0 views Posted By : suryaAuthors
Image

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீரங்கம் தேர்தல் பாதுகாப்பாக நடைபெற ஏற்கனவே 2 ஆயிரத்து 567 மத்திய ரிசர்வ் காவல் படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 232 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளில் நுண்ணிய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்று இவ்வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Categories: Tamilnadu
Image
Subscribe to ஸ்ரீரங்கம் தேர்தல் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி